அப்ரைசல் Vs ஆப்புரைசல் - குதூகலமாகக் குத்திக் காட்டும் குறும்(பு) படம்!  

0

"ஆரம்பத்துல ரெண்டு மூணு வருஷம் ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கும்..."

"அப்புறம்..."

"அதுவே பழகிடும்!"

'கும்கி' காமெடி கச்சிதமாகப் பொருந்தக் கூடியது, ஐ.டி. துறை உள்ளிட்ட நிறுவனங்களின் அப்ரைசல் சிஸ்டத்தால் ஆப்பு வைக்கப்படுவோருக்கே!

Rj நந்தினி நடித்த வீடியோ காட்சி
Rj நந்தினி நடித்த வீடியோ காட்சி

ஊழியர்களிடையே ஆரோக்கியமான போட்டியை வளர்த்து உற்பத்தியை உயர்த்தும் உத்திதான் அப்ரைசல் சிஸ்டம் என்று நிறுவனங்கள் சொல்கின்றன. ஆனால், உழைப்பை உறிஞ்சிவிட்டு ஊழியர்களுக்கு சங்கூதும் சங்கதிதான் என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.

ஏ,பி,சி,டி,இ என பிரிவுகளை உருவாக்கி, அவற்றில் ஊழியர்களைச் சொருகி, அதற்கு ஏற்றபடி ஊதிய உயர்வுகள் பெரும்பாலான நிறுவனங்களில் நிர்ணயிக்கப்படுகின்றன. இதில், பயன்பெறுபவர்களின் எண்ணிக்கை குறைவு; பந்தாடுபவர்களின் எண்ணிக்கை அதிகம் என்கிறார்கள்.

ஒரு நிறுவனத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த காலத்தில் பேரிடியாக இருக்கும் இந்த விஷயம், போகப் போக கோயில் மணி ரேஞ்சுக்கு நம்மில் எந்த சலனும் ஏற்படுத்துவது இல்லை.

அப்ரைசல் முறையை இன்று ஆன்லைனில் அப்பட்டமாக கலாய்க்கும் போக்கும் அதிகரித்துவிட்டது. துயரத்துக்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் அதைப் பழகிக்கொள்ள வேண்டும் என்ற மனப்பக்குவமாகவும் இதைப் பார்க்கலாம். அல்லது, உள்ளத்தில் உள்ளதை கொட்டித் தீர்த்துவிடுவதற்கான வடிகாலாகவும் அணுகலாம்.

அந்த வகையில், வானொலி வர்ணனையாளர் மிர்ச்சி நந்தினியின் ஒன்றைரை நிமிட வீடியோ குறும்(பு)படம் அப்ரைசல் சிஸ்டத்தை நம்பி எதிர்பார்த்து ஆப்பு பெற்று, பின்னர் அதுவே பழகிடும் நிலையை குறும்போடு பதிவு செய்துள்ளது. அத்துடன், பார்ப்பவர்களைக் குதூகலப்படுத்தியபடியே பெரும்பாலான நிறுவனங்கள் செய்யும் அராஜகத்தைக் குத்திக் காட்டுவதாகவும் கருதலாம்.

ரேடியோ மிர்ச்சியின் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்தக் குறும்புப் படம் வெளியிடப்பட்ட ஒரே நாளில் 15 ஆயிரம் இணையவாசிகளால் ஜாலியாகப் பகிரப்பட்டிருப்பதே 'அதுவே பழகிடும்' என்ற வரிகளின் மகத்துவம் அங்கிங்கெனாதபடி வியாபித்துள்ளதை வெளிப்படுத்துகிறது.

> இதோ அந்தக் குறும்(பு)படம் APPRAISAL vs AAPURAISAL

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

'பொண்டாட்டி தேவை'- வைரலாகி வரும் மாணவிகள் தயாரித்துள்ள யூட்யூப் வீடியோ!

'India Tomorrow'- பாலியல் தொழிலாளியை முன்வைத்து வளர்ச்சிப் பாதை காட்டும் குறும்படம்

உழவர்களின் உன்னத உழைப்பை பேசும் 4 நிமிட வீடியோ படைப்பு