சூப்பர்வுமன் என்று அழைக்கப்படும் யூட்யூப் ஸ்டார் லில்லி சிங் தனது ரசிகர்களை காப்பவர் என்று நிரூபித்துள்ளார். நல்ல செயல்கள் புரிவதன் முக்கியத்துவத்தை நன்குணர்ந்த இவர் தன்னை விரும்பும் ரசிகர்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்கிறார்.
1,000 vlogs எட்டியதை கொண்டாடும் விதத்தில் யூட்யூப் வீடியோ வெளியிடும் இவர் தனது ரசிகர்களுக்கு பல்கலைக்கழக கட்டணம், வாடகைத்தொகை, மளிகைக்கட்டணம் ஆகியவற்றை செலுத்தியுள்ளார். அத்துடன் 1,000 டாலர் ரொக்கத்தொகையும் வழங்கியுள்ளார். கனடாவைச் சேர்ந்த இந்த நட்சத்திரம் தன்னை பின்பற்றும் 4.5 மில்லியன் நபர்களிடம் அவர்கள் சந்திக்கும் ஒரு குறிப்பிட்ட சவால் குறித்து கேட்டுக்கொண்டே தனது உரையாடலைத் துவங்குகிறார்.
இவரது ட்வீட் காரணமாக பலர் தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்தினாலும் இவரது ரசிகர்கள் இப்படிப்பட்ட பெருந்தன்மையான குணம் தங்களுக்கு உதவும் என்று எதிர்பார்க்கவில்லை.
லில்லியின் ரசிகர்களில் ஒருவர் தனது கல்லூரி கட்டணத்தைச் செலுத்த பணம் தேவையிருப்பதாக கூறினார். மற்றொருவர் தனது சகோதரருக்கு ஆதரவளிப்பது கடினமாக இருப்பதாக தெரிவித்தார். லில்லி பல ட்வீட்களுக்கு பதிலளித்தார். பெருந்தன்மையுடன் பலருக்கு பண உதவியும் ஆதரவும் அளித்துள்ளார்.
ஒரு பெண் தனது நோய்வாய்ப்பட்ட அம்மாவை வெளியே டின்னர் சாப்பிட அழைத்துச் செல்ல விரும்பினார். இவருக்கு பண உதவி செய்துள்ளார் லில்லி. ஒரு பெண் இரண்டாண்டுகளில் 45 கிலோ எடையை குறைத்துள்ளார். அதற்குமேல் அவரால் ஜிம் செல்ல முடியவில்லை. லில்லி அவருக்கு ஊக்கம் மிகுந்த வார்த்தைகளைக் கூறியதுடன் ஜிம் உறுப்பினராக சேருவதற்கு பணம் செலுத்த உறுதியளித்தார்.
லில்லி 5.7 மில்லியன் பவுண்ட் மதிப்புடன் உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் யூட்யூபர் என்று ஃபோர்ப்ஸ் தெரிவிக்கிறது. கொடையளிக்கும் குணத்திற்குப் பெயர்போன இவர் தன்னுடன் சமூக ஊடக தளங்களில் தொடர்பில் இருக்கும் எண்ணற்ற ரசிகர்களுக்கு உதவுவதாக வாக்களித்துள்ளார். 12.5 மில்லியன் சந்தாதாரர்கள் கொண்ட இவருக்கு பாராட்டுகள் அவரது வீடியோவிற்காக மட்டுமல்லாமல் அவரது பெருந்தன்மையான குணத்திற்காகவும் குவிகிறது.
கட்டுரை : Think Change India
Related Stories
November 17, 2017
November 17, 2017
Stories by YS TEAM TAMIL