செல்போன் ரீசார்ஜ், டி.டி.எச், பஸ் பயண கட்டணம் ஆகிய சேவைகள் வழங்கும் புதிய வசதி!

1

பொது மக்களுக்கு வசதியாக செல்போன் பிரீபெய்டு ரீசார்ஜ், டி.டி.எச், டேட்டா ரிசார்ஜ், மொபைல் போஸ்ட்பெய்டு கட்டணம், பஸ் பயண சீட்டு முன்பதிவு கட்டணம் ஆகிய சேவைகளை வழங்கும் பணி நாளை (01.02.2017) காலை 10:30 முதல் அண்ணா சாலையில் உள்ள அஞ்சல் அலுவகத்தில் துவங்கப்பட உள்ளது. தமிழ் நாட்டின் முதல் பொது சேவை மையத்தை, தமிழ் நாடு தலைமை அஞ்சல் அலுவலர் திரு. சார்லஸ் லோபோ துவக்கி வைக்க உள்ளார்.

செல்போன் பிரீபெய்டு ரீசார்ஜ், டி.டி.எச், டேட்டா ரிசார்ஜ், மொபைல் போஸ்ட்பெய்டு கட்டணம், பஸ் பயண சீட்டு முன்பதிவு கட்டணம் ஆகிய சேவைகள் இந்த பொதுச் சேவை மையத்தில் வழங்கப்படும். இந்த சேவைகளை பொது மக்களுக்கு வழங்க அஞ்சல்துறை, சி.எஸ்.சி மின்னணு அரசு சேவைகள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள தேர்வு செய்யப்பட்ட அஞ்சல் அலுவலகங்களில் பல்வேறு பொதுச் சேவைகள் வழங்கப்படும்.

பான் கார்டு, பாஸ்போர்ட், ரயில் பயண சீட்டு முன்பதிவு கட்டணம், ஆதார் அட்டைகளை மின் அச்சிடுதல் போன்ற பல்வேறு சேவைகள் விரைவில் வழங்கப்படும். அண்ணா சாலை அஞ்சல் அலுவலகத்தில் வழங்கப்படும் இந்த சேவைகளை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அஞ்சல் துறை செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.