ஐடி துறையினருக்காக சென்னையில் நடைபெறும் 'Leadership 2.0' மாநாடு

0

ஐடி மற்றும் ஐ.டி.இ.எஸ் துறையில் இருப்பவர்களுக்கு புதிய வழி காட்டுவதற்காக சென்னையில் மாநாடு வரும் 19 ம் தேதி நடைபெறுகிறது. உலக அளவில் புதிய போக்காக அமைந்துள்ள ‘பரிவு மிக்க தலைமை’ மற்றும் ‘உணர்வு நோக்கிலான ஆரோக்கியம்’ ஆகிய அம்சங்களில் கவனம் செலுத்தும் வகையில் இந்த மாநாட்டை ஸ்பிரிட் சம்மீட் (Spirit Summit) அமைப்பு நடத்துகிறது. இதில் மீடியா பங்குதாரராக இணைகிறது.

தகவல் தொழில்நுட்ப புரட்சி புதிய வேலைவாய்ப்பு மற்றும் புதுமையான சேவைகளை ஏற்படுத்தி தந்துள்ளது. ஐடி துறை மற்றும் ஐ.டி.இ.எஸ் துறையில் பணியாற்றுபவர்கள் நல்ல சம்பளம் பெறுவதுடன் பொருளாதார நிறைவை பெற்றுள்ளனர்.

ஆனால் பொருளாதார முன்னேற்றத்திற்கு நிகராக மனத்தளவில் மகிழ்ச்சியான நிலை உண்டாகவில்லை என்ற குறை பலரிடம் இருக்கிறது. மேலும் இந்த வகையான வளர்ச்சி தக்க வைக்க முடியாது என்றும் கருதப்படுகிறது. இதில் மாற்றம் தேவை என்ற புரிதலும் உண்டாகியுள்ளது.

நாம் வாழும் மற்றும் பணியாற்றும் சூழலுக்கு ஏற்ற உணர்வு நோக்கிலான ஆரோக்கியம் மற்றும் பரிவு மிக்க தலைமையை உருவாக்க மனசாட்சி அடிப்படையிலான வளர்ச்சி தேவை எனும் கருத்தை உலக அளவில் வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த பின்னணியில் மனிதநேய செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 'ஸ்பிரிடி சம்மிட்' (Spirit Summit) உண்டாக்கப்பட்டுள்ளது. தலைமை பண்பு, உளவியல், மருத்துவம் மற்றும் உணர்வு நிலை ஆகிய துறைகளைச்சேர்ந்த வல்லுனர்களால் உருவாக்கப்பட்ட இந்த மாநாடு வாழ்க்கையில் நிறைவு மற்றும் நிம்மதியை ஏற்படுத்துவதற்கான உத்திகளை கொண்டுள்ளது.

ஐடி மற்றும் ஐ.டி.இ.எஸ் துறையினருக்காக பிரத்யேகமாக நடைபெறும் இந்த 'லீடர்ஷிப் 2.0' மாநாடு முதல் முறையாக சென்னையில் நடைபெறுகிறது. வரும் 19 ம் தேதி சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள இமேஜ் ஆடிட்டோரியத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது.

ஊக்கமளிக்கும் பேச்சாளரா சிஸ்டர் ஜெயந்தி, இண்டலெக்ட் டிசைன் ஏரினா இயக்குனர் அருண் ஜெயின், ஆர்கானிக் இந்தியா நிறுவனர் பாரத் மித்ரா மற்றும் தலைமை பண்பு பயிற்சியாளர் ரகு அனந்தநாராயணன் உள்ளிட்ட வல்லுனர்கள் இதில் பங்கேற்று வழிகாட்டுகின்றனர். டேவிட் கில்லோஸ்கி, நீலீமா பட்,டாக்டர்.கிரண்மாய், லட்சுமி ஆண்டியப்படன் உள்ளிட்ட வல்லுனர்களும் பங்கேற்கின்றனர்.

‘பரிவு மிக்க தலைமை’ மற்றும் ‘உணர்வு நோக்கிலான ஆரோக்கியம்’ ஆகிய தலைப்புகளில் சிறப்பு அமர்வுகள் நடைபெறுபவதோடு கலந்துரையாடலும் நடைபெறுகிறது. மாநாட்டில் கலந்துகொள்ள அனுமதி இலவசம் ஆனால் முன்பதிவு அவசியம்.

மாநாட்டில் பங்கேற்க முன்பதிவு செய்து கொள்ள , info@ Spirit Summit.org

மேலும் விவரங்களுக்கு: SpiritSummit

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்