நீண்டகால செயல்பாட்டுக்கான சந்தையை உருவாக்கும் 'வி ஆர் ஹாலிடேஸ்'

0

தீபக் வாத்வாவும் ஹர்கிரத் சிங்கும் இந்தியாவில் ஆன்லைன் பயண வணிகம் பற்றி ஆழமான புரிதல் உள்ளவர்கள். இருவருமே சேர்ந்து பொறியியல் படித்தார்கள். இருவரும் மேக் மை டிரிப் (MakeMyTrip MMYT) நிறுவனத்தில் புராடக்ட் மேலாளர்களாக இருந்தபோது விலகினார்கள். அதற்குள் இணையம் வளர்ந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தளர்ந்து போயிருந்தது. மேக் மை டிரிப் பணியின்போது ஆன்லைன் பயண சந்தைக்கான சந்தை வளர்ந்து கொண்டிருப்பதை இருவரும் தெரிந்துகொண்டார்கள்.

“மேக் மை டிரிப்பில் பணியாற்றியபோது, நுகர்வோர்கள் எப்படி வேகமாக உருவாகி வருகிறார்கள் என்பதையும் அவர்களுடைய வேகத்தை தக்கவைப்பதையும் பற்றி புரிந்துகொண்டேன். அப்போதுதான் ஃபிளிப்கார்ட்டும் ஸ்நாப்டீலும் (2009) தொடங்கப்பட்டிருந்தன. இதுபோன்ற பிரச்சனைகளை புதிய சிந்தனை மற்றும் புதிய அணுகுமுறையால் தீர்ப்பதற்கான தேவையை உணர்ந்தோம்” என்கிறார் தீபக்.

இந்த கவனிப்பும் சிந்தனையிலும்தான் "விஆர்ஹாலிடேஸ்" (WeAreHolidays) தொடங்ககப்பட்டது.

ஆரம்ப நாட்களும் வளர்ச்சியும்

இந்த தொடக்க நிலை நிறுவனத்தின் (2012- 13) ஆரம்பகாலத்தில் இருவரும் சேர்ந்து விடுமுறைகளை நுகர்வோரிடம் விற்றார்கள். அந்த காலகட்டத்தில் நுகர்வோர் மற்றும் சந்தை நிலவரங்களை தெளிவாகப் புரிந்து கொண்டார்கள். உலகம் முழுவதும் உள்ள விநியோகஸ்தர்களுடன் விரைவாக தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு, தயாரிப்பையும் அதன் பின்னணி தொழில்நுட்பத்தையும் கட்டமைத்தார்கள்.

அவர்களுடைய குழுவில் மோகித் பிப்லானி இணைந்துகொண்டார். அவர்தான் தற்போது உள்நாட்டு சந்தையை நிர்வகிக்கிறார் – இந்திய விற்பனையாளர்களுக்காக. மோகித் மிகுந்த அனுபவம் உள்ளவர். இதற்கு முன்பு அவர் மைக்கேல் பேஜ் இண்டர்நேஷனல் மற்றும் ஐசிஐசிஐ புரூடென்சியலில் பணியாற்றியவர். விற்பனையாளர்களைச் சார்ந்த வெளிநாடுகளின் பல்வேறு நகரங்களை, நிபும் பண்டாரி தலைமையேற்று நிர்வகிக்கிறார்.

தொழில்நுட்பப் பிரிவுக்கு ஐஐடி வாரணாசி மற்றும் ஐஐடி மும்பை மாணவரான பிரசாந்த் கில்தியால் தலைமைவகிக்கிறார். இரட்டையர்களுக்கு, லட்சிய நோக்கமுள்ள மேட்ரிக்ஸ் பார்ட்டனர்ஸ் நிறுவனத்திடமிருந்து சீரிஸ் ஏ (Series A ) முதலீடு கிடைத்தது.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் விஆர்ஹாலிடேஸ் நிறுவனம் நிர்வகிக்கப்படும் சந்தைக்கான பிரிவுக்கு நகர்ந்தது. இதுவொரு மாடலாக, விஆர்ஹாலிடேஸ் விற்பனையாளர்களின் சந்தையுடன் நெருக்கமாக இணைந்து ஹாலிடே பேக்கேஜ்களை கடைசிப்பயனாளிக்கும் வழங்கியது.

நீண்டகாலத்துக்கான கட்டமைப்பு

“இங்கு நாங்கள் நீண்டகாலத்துக்காக இருக்கிறோம். பெரிய வணிக நிறுவனங்கள் உருவாக குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளாகின்றன. நாங்கள் நீண்ட முயற்சிக்காக இங்கே இருப்போம்” என்கிறார் தீபக். தங்களுடைய முந்தைய நிறுவனத் தலைவர் மேக்மைடிரிப்பின் நிறுவனர் தீப் கல்ராவின், வணிகக்கொள்கைகளில் ஒன்றைத்தான் அவர்கள் உள்வாங்கிக்கொண்டார்கள்.

விஆர்ஹாலிடேஸுக்கு அடிப்படையான பணி என்பது தொடர்ந்து விடுமுறைகள் சேர்க்கப்படுவது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையில் விற்பனை மட்டும் செய்தார்கள். இது வளரவேண்டிய தேவை இருந்தது. “பிஸினல் மாடல் நிலை, தயாரிப்பு அல்லது தொழில்நுட்ப நிலை அல்லது நுகர்வோர் அனுபவ நிலை எல்லாவற்றிலும் சிறு புதுமை ஏற்பட்டது. இதெல்லாம் கடந்தகாலத்தில் நன்றாக இருந்தது. ஆனால் இதுவே நீண்டகாலத்துக்கு இருக்கும் என்று நினைக்கவில்லை” என்று கூறுகிறார் தீபக்.

இப்போது விஆர்ஹாலிடேஸ் விடுமுறை புதிய பயணங்களுக்கான கண்டுபிடிப்பில் இருக்கிறது. பயணக்கட்டுரைகள், விற்பனையாளர்களின் புதிய பயணங்கள் மற்றும் கட்டுரைகள் ஆகியவற்றின் பங்களிப்போடு அதனை செய்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய ஹாலிடே விற்பனையாளர்களின் சந்தையின் வழியாக விடுமுறைகளை புக் செய்கிறார்கள்(பயண விற்பனையாளர்கள் மற்றும் சுற்றுலாத்தலங்களின் நிபுணர்கள் – இந்தியா மற்றும் இலங்கை, பாலி மற்றும் சில நாடுகளில் உள்ள சுற்றுலாத்தலங்கள்). நிர்வகிக்கப்படும் சந்தைப் பகுதிக்கு (managed marketplace ) இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்நிறுவனம் நகர்ந்துவிட்டதால் 50 சதவிகித வளர்ச்சியைப் பார்த்துவிட்டது.

விநியோகமும் தேவையும்

ஒரு சந்தையை உருவாக்குவது கடும் உழைப்பு. முதல்கட்டமாக, குழுவில் தரமான விற்பனையாளர்கள் விநியோகத்தின் பக்கம் இருக்கவேண்டும். இது நிறைவேற்றப்பட்டால், ஆன்லைன் சானல்கள் வழியாக தேவையை உருவாக்குவது ஒரு சவால். விற்பனையாளர்கள் பற்றி தீபக் பேசுகிறார், “வெற்றியே வெற்றியை உருவாக்கிவிடுகிறது. வேறெப்போதும் இல்லாத விரிவாக்கம் மற்றும் வளர்ச்சியை அவர்களுடைய சக தோழர்களை மற்றும் சக முகவர்கள் அடைவதைப் பார்க்கும்போது, அதைப்போன்ற செயல்பாட்டை அவர்களும் விரும்புகிறார்கள். இது ஓலாவும் ஊபரும் வாடகைக் கார் ஓட்டுநர்களின் வாழ்க்கையை மாற்றியதைப்போலத்தான். நாங்கள் எங்களுடைய விற்பனையாளர்களுடன் சேர்ந்து உழைக்கிறோம். அவர்களுக்கு வெற்றியின் ஆரம்ப முயற்சிகளைக் காட்டுகிறோம். மற்றவற்றை அதுவே பார்த்துக்கொள்ளும்.”

நுகர்வோர்களின் பக்கம் பார்த்தால், நுகர்வோர்களின் தேவைகளை ஆன்லைன் மூலமே அவர்கள் செய்துவிடுகிறார்கள். விஆர்ஹாலிடேஸ் மிக தீவிரமாக செயல்பட்டு, இடங்கள் பற்றிய ஊக்கமூட்டும் தகவல்களைப் பெறுகிறது. தங்களுடைய ஏகப்பட்ட போக்குவரத்து மற்றும் கண்டுபிடிப்பை சமூக வலைதளங்கள் வாயிலாக இயக்குகிறார்கள்.

“கொடுக்கப்பட்ட வெளியில் நாங்கள் இருக்கிறோம். அனுபவத்தில் அது பெரிது, அதிக அளவிலான குறிப்பான விலை மற்றும் மிக உயர்ந்த தொடர் செயலாலும் நாங்கள் பயனடைந்திருக்கிறோம் – நான்கு நுகர்வோர்களில் ஒருவர் மீண்டும் வருகிறார் அல்லது ஒருவரை பரிந்துரைக்கிறார்” என்கிறார் தீபக்.

விநியோகம் பற்றிய ஆய்வுகள்

இணைப்புகள், பங்குதாரர்கள், கூட்டு ஆகியவை பற்றிய வெற்றிகரமான மற்றும் மகிழ்ச்சியான கதைகள் எந்த சந்தைப் பகுதிக்கும் சிறந்த ஊக்கமாக இருக்கின்றன.

இரு ஆய்வுகளை தீபக் மற்றும் ஹர்கிரத் பகிர்ந்துகொள்கிறார்கள்:

டிரிப்செய்லர் (TripSailer): டிரிப்செய்லர் செளரப்பால் நடத்தப்படுகிறது. வயா.காமில் (Via.com) மத்திய நிலை பிரதிநிதியாக பணியாற்றிய பிறகு அதில் இருந்து விலகி, டெல்லிக்கு அருகில் உள்ள துவாரகா கிராமத்தில் ஒரு சிறிய டிராவல் ஏஜென்சியைத் தொடங்கினார். சிறு குழுவினரை பணிக்கு அமர்த்திக்கொண்டு, ஜெஸ்ட் டயல் மூலமாக வாடிக்கையாளர்களை அவர் பெற்றார்.

டிரிப்செய்லர் நிறுவனத்துடன் விஆர்ஹாலிடேஸ் இணைந்து செயலாற்றியபோது 6 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. அந்த குழுவும் பத்து பேராக வளர்ந்தது. தற்போது செளரப், மத்திய டெல்லியில் உள்ள இன்னும் பெரிய அலுவலகத்துக்கு நகர்ந்துவிட்டார். இனிமேல் அவர் ஜெஸ்ட் டயலையே நம்பியிருக்கத் தேவையில்லை.

வியூ ஹாலிடே ட்ரிப்ஸ்(View Holiday Trips):

டெல்லியில் உள்ள ரோகிணியில் சிறு நிறுவனத்தை நடத்தினார் தினேஷ் குமார். ரோகிணியில் நெருக்கடியான தெருவில் இருந்த 125 சதுர அடி அலுவலகத்தில் தனி ஒருவராகத்தான் அவர் வேலை செய்தார். விஆர்ஹாலிடேஸ் நிறுவனத்துடன் சேர்வதற்கு முன்பு இதுதான் நிலை. பிறகு அவர் நான்கு ஊழியர்களை நியமனம் செய்து பெரிய அலுவலகத்திற்குச் சென்றார். முன்பிருந்ததைவிட நான்கு மடங்கு பெரிய அலுவலகம்.

போட்டியின் பரப்பு

போட்டியான ஆன்லைன் டிராவல் வணிகப் பரப்பு பரந்து விரிந்துள்ளது. ஊக்கத்தில் இருந்து கண்டுபிடிப்பு, திட்டமிடுதலில் இருந்து பரிமாற்றம், அதிலிருந்து அடையவேண்டிய இலக்கு என அதன் பயணம் இருக்கிறது. இந்தப் பரப்பை மூன்று முக்கியமான பிரிவுகளை தீபக் பிரிக்கிறார்:

ஆஃப்லைனில் முதன்மை – காஸ்ஸ் அண்ட் கிங்ஸ், தாமஸ் குக்

ஓடிஏ(ஆன்லலைன் டிராவல் ஏஜெண்ட்ஸ்) – மேக்மைடிரிப், யாத்ரா, கோஐபிபோ 

தொடக்கநிலை நிறுவனங்கள் – டிராவல் டிரையாங்கிள் (சந்தைப்பகுதி), டிரிப்போட்டோ(பயணக்கட்டுரைகள்), டிரிப்ஹோபோ 

“நாங்கள் எங்களுடைய போட்டியை இப்படித்தான் பார்த்தோம் – நாங்கள் எங்களுடைய கவனத்தை முழுமையான ஸ்டாக் மாடலில் செலுத்தினோம். ( கண்டுபிடிப்பு, திட்டமிடுதல், புக்கிங் மற்றும் முழுமை) சொத்து மற்றும் முதலீடுகள் வளமாக உள்ள சிறந்த சந்தைப்பகுதி வழியாக” என்கிறார் தீபக்

பயணம்

விஆர்ஹாலிடேஸுக்கு பயணம் செய்யவேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கான முழுமையான கண்டுபிடிப்பு மற்றும் திட்டமிடும் நிலை தற்போது ஆன்லைனுக்கு நகர்ந்துவிட்டது. முன்னணியில் இருப்பவர்களும் கடும் முயற்சி செய்து தங்களுடைய செல்வாக்கை ஆன்லைன் உலகத்தில் அதிகரித்து வருகிறார்கள். மிகப்பெரிய ஆஃப்லைன் டிராவல் ஏஜென்சிகளும் ஆன்லைனின் வலிமையை உணர்ந்து அதற்கான கொள்கையை வகுக்கிறார்கள்.

விஆர்ஹாலிடேஸ் இன்று குர்கான் அலுவலகத்தில் 90 ஊழியர்களுடன் வலிமையான அலுவலகமாக இயங்கிவருகிறது. உலகம் முழுவதும் உள்ள ஹாலிடே பேக்கேஜ் விற்பனையாளர்களுக்கு ஒரு நம்பிக்கையான சந்தைப்பகுதியை உருவாக்குவதில் அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். மேலும் வாடிக்கையாளர்களுக்கான அனுபவத்தை வழங்குவதன் மூலம் கூடுதலான மக்கள் அவர்களுடைய சேவையைப் பயன்படுத்துவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்துகிறார்கள்.

இணையதள முகவரி: WeAreHolidays