'ஃபேஸ்புக்' நிறுவனத்தை இயக்கும் மெகா கோடீஸ்வரர்களை தெரியுமா உங்களுக்கு?

0

ஒரு நிறுவனத்தை  நிர்வகிப்பதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் கொண்ட குழுவை, "இயக்குனர் குழு" (போர்டு அஃப் டைரக்டர்ஸ்) என்பார்கள். அவர்கள் தினமும் பங்குதாரர்களிடம் பிசினஸ் குறித்து பேசிக்கொள்வர். இந்த குழுதான், கம்பெனியின் வெற்றிகளுக்கும் தோல்விகளுக்கும் முக்கியக் காரணமாக அமைகிறது.

"ஒரு நல்ல இயக்குனர் குழுவால் நிறுவனத்தை உருவாக்க முடியாது, ஆனால் உருவாக்கிய நிறுவனத்தை சரியாக அமைக்கப்படாத ஒரு குழுவால் எளிதில் அழித்து விட முடியும்," 

என்று அல்லேகிஸ் கேபிடல் நிறுவனத்தின் ஓய்வுபெற்ற இயக்குனரான "பார்ரி வேயின்மேன்" கூறுவதுபோல, குழு எடுக்கும் நல்ல முடிவுகள் உலகுக்குத் தெரியாமல் போகலாம். ஆனால், குழு எடுக்கும் தவறான முடிவுகள், கம்பெனியையே நாசம் செய்துவிடும்.

நம் வாழ்க்கையில் ஒன்றாய் ஒன்றிபோன, பிரபல வலைத்தளமான ஃபேஸ்புக் நிறுவனத்தின் பன்னிரெண்டு வருட வெற்றிக்கு, அதன் இயக்குனர் குழுதான் காரணம். இந்த ஃபேஸ்புக்கின் சமூக ஆதிக்கத்திற்கு பொறுப்பான குழுவின் 8 உறுப்பினர்களின் விவரங்கள் இதோ!

1.மார்க் எல் ஆண்டர்சன் Marc L.Andreessen (2008 முதல்)

யார் இவர்? - ஆண்டர்சன் ஹாரோவிட்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் பொது பங்குதாரர்.

நிறுவப்பட்ட நிறுவனங்கள்ஆண்டர்சன் ஹாரோவிட்ஸ், நெட்ஸ்கேப், லவுட் க்லவுட் , ஆப்ஸ்வேர், நிங்.

தனிப்பட்ட முதலீடுகள்: டிக்க், ப்லாசஸ், நெட்வைப்ஸ், காஸ்ட்டிவி, ட்விட்டர், லிங்க்ட் இன், ரெய்ன், மற்றும் ராக் மெல்ட்.

ஐஓவாவில் பிறந்தவர். விஸ்கான்சின்னில் வளர்ந்தவர். கணினியின் ஆற்றலும், வேர்ல்ட் வைஃட் வெப் (WWW)-க்கு இருக்கும் சக்தியும், இவரை சிறுவயதிலேயே மிகவும் ஈர்த்தது. இல்லினாய்ஸ் பல்கலைகழகத்தின் இளங்கலை மாணவராக, என்.சி.எஸ்.ஏ. (NCSA) நிறுவனதில் பணிபுரிந்தார். அங்கு அவரும், அவருடன் வேலை செய்த எரிக் பினா என்பவரும் சேர்ந்து, என்.சி.எஸ்.ஏ. மொசைக் (NCSA mosaic) என்ற ப்ரொவ்சரை உருவாக்கினர்.

பட்டப்படிப்புக்கு பின், ஆண்டர்சன் கலிபோர்னியாவிற்குச் சென்றார். அங்கு இருத்த அவர் நண்பர் ஜிம் கிளார்க்குடன் சேர்ந்து, 'நெட்ஸ்கேப் கம்யூனிகேஷன்ஸ்" என்ற நிறுவனத்தைத் தொடங்கினர். 'நெட்ஸ்கேப் நேவிகேட்டர்' எனும் சேவையை தலைமை பொருளாய் தயாரித்தனர்.

1990-ஆம் வருடங்களில் நெட்ஸ்கேப் அமோக வெற்றிக்கண்டது. ஆண்டர்சனும் பிரபலமானார். தீடிரென இவரது நெட்ஸ்கேப் நேவிகேட்டர், மைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்ப்லோரரிடம் பங்கு சந்தையில் சரிவு கண்டதால், 1999 ஆம் ஆண்டு, கம்பெனி ஏஓஎல் (AOL)- க்கு சொந்தமானது. அதே வருடம், MIT கல்வி நிறுவனத்தால், 35 வயதிற்குள்ளான உலகத்தின் 100 கண்டுப்பிடிப்பாளர்களில் இவரும் ஒருவராக பாராட்டப்பட்டார்.

1999இல், தற்போது 'ஆப்ஸ்வேர்' எனப்படும் 'லவுட் க்லவுட்' நிறுவனத்தை நிறுவினார். பின்னர், HP கம்பெனி, இந்நிறுவனத்தை வாங்கிக்கொண்டது.

2009இல் இவரும், இவரது நீண்ட கால பார்ட்னரான பேன் ஹோரோவிட்ஸ் என்பவரும், அதிரடியாக சிலிகான் வேலியில் ' ஆண்டர்சன் ஹோரோவிட்ஸ்' என்ற மூதலீடு நிறுவனத்தைத் தொடங்கினர். இந்நிறுவனம் முக்கியமாக ஃபேஸ்புக், போர்ஸ்கொயர், கிட்ஹப், ட்விட்டர், பின்இன்ட்ரஸ்ட் முதலிய நிறுவனங்களில் முதலீடு செய்தது. 2012இல் டைம் பத்திரிகை, உலகின் 100 முக்கிய செல்வாக்குமிக்கவர்களில் ஆண்டர்சனையும் ஒருவராய் பட்டியலிட்டு இருந்தது. "வேர்ல்ட் வைட் வெப் ஹால் அஃப் ஃபேம்" (World wide web hall of fame)-இன் ஆறு பேர் குழுவில் இவரும் ஒருவர்.

ஃபேஸ்புக், ஈபே, ஹெவ்லெட் பேக்கார்ட் நிறுவனம், கே.என்.ஓ., ஸ்டான்போர்ட் மருத்துவமனை, பம்ப் டெக்னாலஜிஸ், ஒகிளுஸ் வி.ஆர்  மற்றும் டைனி கோ முதலிய நிறுவனங்களின் முக்கிய இயக்க குழுவில் இவர் இடம் பெற்றுள்ளாஅர்.

2. எர்ஸ்கின் பி பவுல்ஸ் Erskine B.Bowles (2011 முதல்)

யார் இவர் ? : வடக்கு கரோலினா பல்கலைகழகத்தின் தலைவர் (2005-2010)

நிறுவப்பட்ட நிறுவனங்கள் : கரோவ்செல் முதலீட்டு நிறுவனம் (Carousel Capital)

தனிப்பட்ட முதலீடுகள்: ஏதுமில்லை.

கல்வித் துறை, தொழில், அரசு முதலியவற்றில் முக்கிய பதவிகளில் பணியாற்றியவர். வட கரோலினாவில், ஒரு அரசியல்வாதிக்கு மகனாய் பிறந்ததால், அரசியல் இவரது ரத்தத்திலே ஊறி இருக்கிறது. வணிகமும் அரசியலும் இவருக்கு துணையாய், பலவற்றை கற்று தந்தது. கொலம்பியா பிசினஸ் பள்ளியில் முடித்த பட்டப்படிப்புக்கு பின், நியூயார்க்கில் உள்ள மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

1972-இல் தன் தந்தையின் அரசியல் பிரச்சாரத்திற்காகவும், 'பவுல்ஸ் ஹோல்லோவெள் கான்னர்' என்ற முதலீட்டு நிறுவனத்தை நிறுவ உதவவும், எர்ஸ்கின் வட கரோலினாவிற்கே மறுபடியும் சென்றார்.

பில் கிளின்டனின் பிரச்சாரத்தின் மூலம், அரசியலில் எர்ஸ்கின் அடியெடுத்து வைத்தார். அக்டோபர் 1994 லிருந்து டிசம்பர் 1995 வரை, கிளிண்டனின் வெள்ளை மாளிகை பணியாளர்களுக்கு துணை முதல்வராய் பணியாற்றி வந்தார்.

2002 இல் நடந்த வட கரோலினாவின் மேல் சட்டசபை தேர்தலில் எர்ஸ்கின் தோல்வியடைந்தார். 2005 இல், சுனாமியால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஐ.நா. பிரதி தூதுவராக இருக்குமாறு வந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார். அதே வருடம், வட கரோலினா பல்கலைகழகத்தின் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். 2010 இல் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். சில நாட்கள் கழித்து, ஜனாதிபதி ஒபாமாவின் தேசிய ஆணையத்தின் கருவூலப் பொறுப்பு மற்றும் சீர்திருத்தம் பிரிவை தலைமையும் தாங்கினார்.

ஃபேஸ்புக் தவீர்த்து, மோர்கன் ஸ்டான்லி, நார்போல்க் சதர்ன் கார்ப்பரேஷன், வடக்கு கரோலினா பரஸ்பர லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி, டோனர்ச்சூஸ்யின் வடக்கு கரோலினா ஆலோசனை வாரியம், கசின்ஸ் ப்ரபெர்டீஸ் இன்க் மற்றும் பெல்க் இன்க் ஆகிய நிறுவனங்களில் குழு உறுப்பினராக எர்ஸ்கின்ர் பதவிகள் வகிக்கிறார்.

3. சூசன் டி டெஸ்மாண்ட்-ஹெல்மான்ன் Susan D. Desmond-Hellmann (2013 முதல்) 

யார் இவர்? : பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி.

நிறுவப்பட்ட நிறுவனங்கள் : இல்லை

தனிப்பட்ட முதலீடுகள்: ஏதுமில்லை

நேவாடா மாநிலத்தின் ரெனோ நகரத்தில் பிறந்தவர் சூசன். நேவாடா பல்கலைகழகத்தில் தன் மருத்துவ படிப்பை முடித்தார்.

முதலில், UCSF மருத்துவக் கல்லூரியில் இணை பேராசிரியராக பணியாற்றினார். உகாண்டா புற்றுநோய் நிறுவனத்தில் இரண்டு வருடம் ஆசிரியராகவும் வேலை செய்தார். பின்னர் அவர் பிரிஸ்டல்- மையர்ஸ் ஸ்க்குபை நிறுவனத்தில், நான்கு ஆண்டுகளாக மருத்துவ ஆராய்ச்சி செய்து வந்தார். 1995 இல் ஜெனென்டெக் நிறுவனத்தில் இணைந்து, புற்றுநோய் மற்றும் அதன் சிகிச்சை பற்றியும் ஆராய்ச்சி செய்தார். 2009 இல் அந்த கம்பெனி கைமாறியபோது, அங்கிருந்து வெளியேறினார்.

குழு உறுப்பினராக இருந்த நிறுவனங்கள்:

*அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சி சங்கம்,

*பயோடெக்னாலஜி தொழில் அமைப்பு,

*ஹாவர்ட் ஹூக்ஸ் மருத்துவ நிறுவனம்,

*அறிவியல் கலிபோர்னியா அகாடமி,

*சான் பிரான்சிஸ்கோவின் மத்திய ரிசர்வ் வங்கி,

*அஃப்பிமெட்ரிக்ஸ் ,

*ப்ராக்டர் & கேம்பிள்

*ஃபேஸ்புக்

2013 இல் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

மிக சக்திவாய்ந்த மக்களின் வரிசையில், இவர் பலமுறை பட்டியலிடப்பட்டு இருக்கிறார்.

4. ரீட் ஹேஸ்டிங்ஸ் Reed Hastings (2011 முதல்) 

யார் இவர்? : நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி

நிறுவப்பட்ட நிறுவனங்கள் : நெட்ஃபிக்ஸ் , ப்யூர் மென்பொருள், எட்வாய்ஸ் , அன்டோனியோ மரியா லுகோ அகாடமி.

தனிப்பட்ட முதலீடுகள் : ஏதுமில்லை

ரீட் ஹேஸ்டிங்ஸ் சிறுவயதிலே கடற்படை வீரராக சேர்ந்து விட்டார். பௌடாயின் கல்லூரியில் பட்டப்படிப்பு 1983இல் முடித்தவுடன், பீஸ் கார்ப்சில் சேர்ந்து, 1985 வரை சுவாசிலாந்து மேல்நிலை பள்ளியில் கணக்கு கற்பித்து வந்தார். அதன்பின், ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தில் படித்தார். பின் ஏற்பு தொழில்நுட்பத்தில் முதல் வேலை கிடைத்தது. அங்கு டிபக்கிங் சாப்ட்வேர்க்காக ஒரு கருவி ஒன்றைக் கண்டுப்பிடித்தார். இந்த வேலையை விட்டுவிட்டு இவரே ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். "ப்யூர் சாப்ட்வேர்" எனும் இவரது நிறுவனம், பழுதுபார்க்கும் சாப்ட்வேர்களுக்காக பொருட்கள் தயாரித்து வந்தது. கம்பெனி வளர வளர, இன்ஜினியர் சி.இ.ஓ ஆனார். 1997 இல் ரேஷ்னல் சாப்ட்வேர் இந்த கம்பெனியை வாங்கிகொண்டது. ரீட்டும் விலகிக் கொண்டார்.

ஒரு வருடத்திற்குபின், ரீட் மற்றும் மார்க் ரண்டுலோப், நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்தை நிறுவினர். மெயில் மூலம் டிவிடி சேவை செய்யும் இந்நிறுவனம், இன்று வரை பெரியளவில் விரிவடைந்துக் கொண்டே இருக்கிறது.

2000 இல் ரீட், கலிபோர்னியாவின் கல்வி துறை தலைவன் ஆனார். அன்றிலிருந்து, ரீட் கல்வி துறை மற்றும் அரசியலில் முழு ஈடுபாடுடன் வேலை செய்தார். கல்வி சீர்திருத்தங்களுக்கு அதிகளவில் நிதியுதவி செய்து வருகிறார்.

டெக்நெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாய் எளிதில் தேர்வானார். இந்நிறுவனம் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு ஊக்குவிக்கும் வணிக நிர்வாகிகளின் அரசியல் நெட்வொர்க் ஆகும்.

5. ஜான் கௌம் Jan Koum (2014 முதல்)

யார் இவர்? : வாட்ஸ் அப் இன் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி.

நிறுவப்பட்ட நிறுவனங்கள் : வாட்ஸ் அப் இங்க்.

தனிப்பட்ட முதலீடுகள் : ஏதுமில்லை.

ஃபேஸ்புக் இயக்குனர் குழு தற்போது புதியதாக சேர்ந்த, உக்ரைன் மனிதர் தான், ஜான். ஒரு சமூக சேவை திட்டத்தில், கிடைத்த வீட்டில் குடியேறுவதர்காக, ஜான் அவர் தாய் மற்றும் பாட்டியுடன் கலிபோர்னியா சென்றார். முதன்முதலில் ஒரு மளிகை கடையில், உதவி செய்பவராக ஜான் வேலை பார்த்தார். நாளடைவில் ப்ரோக்ராம்மிங்கில் ஆர்வம் கொண்டு, சான் உசே மாநில பல்கலைகழகத்தில் சேர்ந்தார். அவரது படிப்பு செலவுகளைப் பார்த்து கொள்ள, எர்னஸ்ட் & யங் நிறுவனத்தில், பாதுகாப்பு பரிசோதனையாளராக பணியாற்றினார்.

1997 இல் எர்னஸ்ட் & யங் நிறுவனத்தின் ப்ரியன் அக்டனை சந்தித்த பின், யாஹூவில் உள்கட்டமைப்பு இன்ஜினியராக வேலைக்கு எடுத்துகொள்ளப்பட்டார். 2007 வரையில், ஏழு வருடமாக இருவரும் யாஹூவில் பணிபுரிந்து வந்தனர். இருவரும் ஃபேஸ்புக்கில் சேர விண்ணப்பித்து, நிராக்கரிக்கப்பட்டனர். 2009 பிப்ரவரியில், அலெக்ஸ் ஃபிஷ்மன் என்பவரிடம், தன் வாட்ஸ் அப் ஐடியா பற்றி கூறினார். ஒரு வாரத்தில், தான் பிறந்தநாளன்று, வாட்ஸ் அப் இங்க் நிறுவனத்தை நிறுவினார்.

ஃபேஸ்புக்கின் மார்க் ஜுக்கர்பெர்க், ஜான்னை சந்தித்து, ஃபேஸ்புக் உடன் சேர்ந்து கொள்ளுமாறு, டீல் பேசிக்கொண்டார். 2014 இல் ஃபேஸ்புக் வாட்ஸ் அப் நிறுவனத்தை 19 பில்லியன் டாலர்களுக்கு வாங்கிக்கொண்டது.

6. ஷெரில் கே சண்டுபெர்க் Sheryl K.Sandberg (2012 முதல்)

யார் இவர் ? : ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி (COO).

நிறுவப்பட்ட நிறுவனங்கள் : இல்லை

தனிப்பட்ட முதலீடுகள் : ஏதுமில்லை

ஃபேஸ்புக் இயக்கக் குழுவில் இருக்கும் முதல் பெண்மணி, ஷெரில் தான். வாஷிங்டன் டி.சி.யில் பிறந்து, வட மியாமி பீச்சில் தஞ்சமடைந்தனர். ஷெரில் படிப்பில் சிறந்து விளங்கினார். ஹார்வர்ட் கல்லூரியில் பொருளாதார பட்டப்படிப்பில் முதலிடம் பிடித்தார். ஒரு வருடமாய் வேர்ல்ட் பேங்க்கில் ஆராயிச்சி உதவியாளராய் பணிபுரிந்து வந்தார். தனது எம்.பி.ஏ. படிப்பை, ஹார்வர்ட் பிசினஸ் பள்ளியில் அதிக மதிப்பெண்ணுடன் டாப் கிளாசில் முடித்தார்.

ஷெரில் மேக்கின்சி & கம்பெனியில் ஒரு வருடம் வேலை செய்தார். பின் ஐந்து வருடமாக அமெரிக்காவின் கருவூல வேலையில், செயலாளராக பதவி வகித்தார். 2001 இல் உலகளவிலான ஆன்லைன் விற்பனை மற்றும் சேவைகள் துறைக்கு துணை-தலைவராக, கூகிள் நிறுவனத்தில் சேர்ந்தார். மார்ச் 2008 இல், சி.ஓ.ஓ அதிகாரியாக ஃபேஸ்புக், ஷெரிலை சேர்த்துக் கொண்டது. 2012 இல் ஃபேஸ்புக்கின் இயக்கக் குழு உறுப்பினரானார்.

இவர் வால்ட் டிஸ்னி நிறுவனம், பெண்களுக்காக பெண்கள் சர்வதேச சங்கம், உலகளாவிய அபிவிருத்தி மையம், V- டே, ஸ்டார்பக்ஸ், புரோக்கிங் நிறுவனம் மற்றும் விளம்பர குழு முதலிய நிறுவனங்களில், முக்கியக் குழு உறுப்பினராக இருந்துள்ளார்.

அரசு மற்றும் தொழில் துறைகளில் பெண்களுக்கு முக்கிய பதவிகள் கிடைக்காததைக் குறித்தும் பாலின வேறுபாடு குறித்த தன்னுடைய கருத்துக்களையும் கொண்ட "லீன் இன்: வோமேன், வொர்க் அண்ட் தி வில் டு லீட்" என்ற புத்தக்கத்தை ஷெரில் வெளியிட்டுள்ளார்.

"உலகின் பாதி நிறுவனங்களைப் பெண்களும், பாதி வீடுகளை ஆண்களும் நிர்வகிக்கும்போது தான், உண்மையான சமமான உலகம் உருவாகும்," என்று கருத்து தெரிவித்தார்.

உலகின் செல்வாக்கு மிக்கவர்களில் இவரும் ஒருவராக பெரும்பாலும் பத்திரிக்கைகளில் பட்டியலிடப்பட்டிருக்கிறார்.

7. பீட்டர் ஏ.தியல் Peter A.Thiel (2005 முதல்)

யார் இவர் ? : பேபால் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் முன்னால் தலைமை நிர்வாக அதிகாரி.

நிறுவப்பட்ட நிறுவனங்கள் : பேபால், ஃபவுண்டர்ஸ் ஃபண்டு, பலன்டிர் டெக்னாலஜிஸ், க்ளரியம் கேபிடல், பிரேக்அவுட் ஆய்வகங்கள், கான்ஃபினிட்டி, தியல் கேபிடல் மேனேஜ்மென்ட்.

தனிப்பட்ட முதலீடுகள் : ஏதுமில்லை

பீட்டர் ஏ.தியல், ஃபேஸ்புக்கின் முதல் வெளி முதலீட்டாளர் ஆவார். 2004 இல் முதலில் ஐந்து லட்சம் டாலரை முதலீடு செய்தார். அதிலிருந்து 10.2% லாபம் சம்பாதித்து, ஃபேஸ்புக்கின் இயக்கக் குழுவில் உறுப்பினரும் ஆனார். மேற்கு ஜெர்மனியில் பிறந்து, ஒரு வயதில் கலிபோர்னியாவிற்கு பெற்றோருடன் தஞ்சம் புகுந்தனர். இவர் அமெரிக்காவின் தேர்வு செய்யப்பட்ட செஸ் மாஸ்டர் ஆவார். 1989 இல் ஸ்டாண்ட்போர்ட் பல்கலைகழகத்தில் சித்தாந்தத்தில் பட்டம் பெற்றவர். 1992 இல் ஸ்டாண்ட்போர்ட் லா கல்லூரியில் சேர்ந்து, படித்து முடித்தார்.

பட்டப்படிப்புக்கு பின், ஒரு நீதிபதியிடம் உதவியாளராக பணி செய்தார். 1996 இல் "தியல் கேபிடல் மேனேஜ்மென்ட்" நிறுவனத்தை நிறுவினார். 1998 இல் மாக்ஸ் லேவ்சின் என்பவருடன் இணைந்து, பேபால் எனும் ஆன்லைன் வழி பண செலுத்தும் அமைப்பை உருவாக்கினர். 2002 இல் ஈபே நிறுவனம், பேபால் கம்பெனியை 1.5 பில்லியன் டாலர்களுக்கு வாங்கிக் கொண்டது.

2005 இல் "ஃபௌண்டர் ஃபண்டு" எனும் கேபிடல் நிதி நிறுவனத்தை சான் பிரான்சிஸ்கோவில் தொடங்கினார். சீன் பார்கர், கேன் ஹெவ்ரி, லுக் நோசெக் ஆகியோர் இந்நிறுவனத்திற்கு பார்ட்னர்கள் ஆவர். ஃபேஸ்புக் தவிர்த்து, பீட்டர் மற்றும் அவரது விசி ஃபிர்ம்ஸ், புக்ட்ராக், ஸ்லைட், லிங்க்ன்ட்இன், பிரின்ட்ஸ்டர், ரேப்லீப், ஜெனி.காம், யம்மர், எல்ப் இன்க், பவர்செட், பிராக்டிஸ் ஃபுஷியன், மேட்டமெட், வடார், பலன்டிர் டெக்னாலஜிஸ், அயன்பாட், வோடிஜென், அசானா, பிக் திங்க், கேப்லிங்க்ட், ஃகோரா, ரைப்பில், டரன்பர்வைஸ், நானோட்ரனிக்ஸ் இமேஜிங், ஸ்ட்ரைப் மற்றும் லெஜென்டரி என்டர்டெயின்மென்ட் முதலிய பல கம்பெனிகளில் முதலீடு செய்துள்ளனர்.

உலகின் தலைசிறந்த முதலீட்டாளர்களில் பீட்டரும் ஒருவர். பலன்டிர் டேச்னாலஜிஸ், வளர் வென்ச்சர்ஸ், மித்ரில் எனும் பிற நிறுவனங்களையும் பீட்டர் உருவாக்கியுள்ளார்.

டேவிட் சாக்ஸ் என்பவருடன் சேர்ந்து, "தி டைவர்சிட்டி மித்" என்ற புத்தகத்தையும், தன் மாணவருடன் இணைந்து, "ஜீரோ டு ஒன்" என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.

8. மார்க் ஜுகார்பெர்க் Mark Zuckerberg

யார் இவர் ? : ஃபேஸ்புக் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி

நிறுவப்பட்ட நிறுவனங்கள் : ஃபேஸ்புக், FWD.us

தனிப்பட்ட முதலீடுகள் : ஏதுமில்லை

2004 இல் ஹார்வர்ட் கல்லூரியில், மார்க் மற்றும் அவரது நண்பர்கள் "ஃபேஸ்புக்" எனும் தளத்தை உருவாக்கினர். மாணவர்கள் மத்தியில் ஃபேஸ்புக் பெரும் வரவேற்பை பெற்று, வெவ்வேறு பல்கலைகழகங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. கலிபோர்னியாவில் ஒரு சிறிய வீட்டில் ஆபீஸ் தொடங்கினர். பீட்டர் ஏ தியல் இடமிருந்து ஃபேஸ்புக் முதலீடு பெற்று, நிர்வகிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. மார்க் படிப்பை முடித்ததும், ஃபேஸ்புக்கை விரிவடைய செய்வதில் முழுமையாக கவனம் செலுத்தத் தொடங்கினர். அப்பொழுது, மார்க் ஒரு டாலரை சம்பளமாக பெற்று கொண்டிருந்தார்.

கல்வி, மருத்துவ ஆராயிச்சி போன்ற சமூக நலதிட்டங்களுக்கு, மார்க் மற்றும் அவரது மனைவியும் நிதியுதவி செய்து வருக்கின்றனர்.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில், தொழிலதிபர்கள், மருத்துவர்கள், அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள் என வெவ்வேறு துறையைச் சார்ந்தோர்  இருக்கின்றனர். இத்தனை அனுபவசாலிகளைக் கொண்டு, ஃபேஸ்புக் லாபகரமாக செழித்துக் கொண்டிருக்கிறது. இவர்கள் அனைவரையும் சேர்த்து பார்ததால், இந்த உறுப்பினர்கள் மட்டும் 21 நிறுவனங்களை உருவாக்கியுள்ளனர். ஒரு கண்ணக்கெடுபின் படி, மொத்தம் 137 நாடுகளில், 129 நாடுகள் ஃபேஸ்புக்கைத் தான் மிக பெரிய சமூக வலைத்தளமாக பயன்படுத்தி வருகிறது. இந்த பெருமை ஃபேஸ்புக் நிறுவனத்தின் குழுவையும், ஊழியர்களையுமே சேரும்.

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்