251 ஏழைப் பெண்களுக்கு தலா ரூ.5 லட்சம் மற்றும் திருமண செலவை ஏற்று நடத்தி வைத்த தொழிலதிபர்!

1

இப்போதெல்லாம் ஒரு திருமணம் செய்யவேண்டும் என்றாலே லட்சக்கணக்கில் செலவு ஆகிறது. பணக்காரர்கள் இதை சுலபமாக கையாண்டு விடுகின்றனர், ஆனால் ஏழை மக்கள் திருமணம் செய்ய படாதபாடு படவேண்டி உள்ளது. இதற்காக பல தன்னார்வ தொண்டு மையங்கள் நாடெங்கும் கூட்டு திருமண ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். 

வைர வியாபாரம் செய்யும் மஹேஷ் என்பவர், இதுபோன்ற கூட்டு திருமண நிகழ்வின் முழு செலவையும் ஏற்க முன்வந்தார். ஏழைப் பெண்களின் திருமண நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு செய்ய 2012-ஆம் ஆண்டு முதல் இந்த நற்காரியத்தை செய்து வருகிறார் மஹேஷ். இந்த செயல் தனக்கு இறைவன் கொடுத்த வரம் என்று நம்புகிறார். இதுவரை அவர் 500 ஏழை மற்றும் அனாதை பெண்களின் திருமணத்துக்கு நிதியுதவி செய்துள்ளார். அவர்கள் பிறந்தது முதல் வளர்ந்து, திருமணம் முடிக்கும் வரை அவர்களின் செலவுகளை ஏற்றுள்ளார் மஹேஷ். 

கூட்டு திருமண விழாவை, மஹேஷ் தன் தந்தையுடன் எல்லா சம்பிரதாயங்களுடன் நடத்தி வைத்தார். சூரத்தில் சவானி சைத்தன்யா வித்யா சன்கூல் என்ற இடத்தில் நடந்த திருமணம் விழாவில் பல சமூக சேவை செய்பவர்கள் மற்றும் புரோகிதர்கள் கலந்து கொண்டனர். 

251 பெண்களுக்கு நடைப்பெற்ற திருமணத்தில், ஒரு கிரிஸ்துவ மத மணப்பெண்ணும், ஐந்து முஸ்லிம் மத மணப்பெண்களும் அவரவர்கள் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். மேலும் ஒரு மாற்றுத்திறனாளி மற்றும் இரண்டு எச்ஐவி-ல் பாதிக்கப்பட்ட மணப்பெண்களும் அக்குழுவில் இடம் பெற்றிருந்தனர். 

“மஹேஷ் மணப்பெண்களுக்கு சோஃபா, நகைகள் மற்றும் 5 லட்ச ரூபாய் ரொக்கம் ஒவ்வொருவருக்கும் கொடுத்து அவர்களின் புதுமண வாழ்க்கையை தொடங்க வழி செய்தார். இம்முறை நகைகள், வீட்டுக்குத் தேவையான சாமான்கள் மற்றும் பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார்.” 

இவரின் சமூக தொண்டின் மூலம் பலமுறை மஹேஷின் பெயர் செய்திகளில் வந்துள்ளது. 2012 முதல் இதுவரை அவர், 900 பெண்களுக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளார். 2012-க்கும் முன்பும் அவர் 1300 பெண்களுக்கு திருமண நிதியுதவிக்கு ஏற்பாடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

கட்டுரை: Think Change India