திருநங்கை வாடிக்கையாளர்கள் உடன் தனது பத்தாண்டு வெற்றியை கொண்டாடிய ஃப்ளிப்கார்ட் !

ஃப்ளிப்கார்ட், தொடங்கி 10 வருடங்கள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் திருநங்கை வாடிக்கையாளர்களை ‘பிக் 10’ நிகழ்வில் இணைத்துக்கொண்டுள்ளது. 

1

ஃப்ளிப்கார்ட் துவங்கப்பட்டு பத்து வருடங்கள் நிறைவடைந்ததை உற்சாகமாக கொண்டாடுகிறது. இந்த இ-காமர்ஸ் தளம் ஜூலை மாதத்தை ‘வாடிக்கையாளர்கள் மாதமாக’ கொண்டாடியது. ‘பிக் 10’ கொண்டாட்டங்களில் திருநங்கை வாடிக்கையாளர்களை இணைத்துக்கொண்டு கோலாகலமாக கொண்டாடியது.

திருநங்கைகள் என்று தனி முத்திரை குத்தப்படுவதால் அவர்களால் ஸ்டோர்களிலோ மால்களிலோ சென்று எளிதாக ஷாப்பிங் செய்ய முடிவதில்லை. சமூக புறக்கணிப்பு காரணமாக பாலின சிறுபான்மை பிரிவினரான இவர்கள் ஸ்டோர் அல்லது மால்களில் பெரும்பாலும் நுழைவதே கடினமாக உள்ளது.

எனினும் இன்றைய நவீன காலகட்டத்தில் இ-வணிகம் அதிகரித்து வருவதால் இவ்வாறு சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்கள் எளிதாக ஷாப்பிங் செய்ய முடிகிறது. இப்படிப்பட்ட தளங்கள் அவர்கள் விரும்பும் பொருட்களை தங்களது ஸ்மார்ட்ஃபோன்களில் ஒரு ஸ்வைப் செய்வதன் மூலம் அவர்களிடம் கொண்டு சேர்கிறது. இது பிரச்சனைகளற்ற ஒரு எளிய ஷாப்பிங் அனுபவத்தை அளிப்பதுடன் அவர்களுக்கு அதிகாரமும் அளிக்கிறது.

திருநங்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களை வாடிக்கையாளர்களாக அரவணைத்து ஒன்றிணைத்துக்கொள்வதே ஃப்ளிப்கார்ட்டின் ’பிக் 10’ கொண்டாட்டத்தின் நோக்கமாகும். ஃப்ளிப்கார்டின் வாடிக்கையாளர் அனுபவப் பிரிவின் தலைவர் சச்சின் கொடாங்கல் யுவர் ஸ்டோரியுடனான நேர்காணலில் பகிர்ந்துகொள்கையில்,

”நாம் வாழும் இந்த நாட்டைப் போலவே எங்களது வாடிக்கையாளர்கள் தொகுப்பும் பல்வேறு வகையினரை உள்ளடக்கியது. வெவ்வேறு கலாச்சாரத்தைக் கொண்டுள்ள ஒவ்வொரு நபரையும் நீங்கள் சென்றடையவில்லையெனில் உங்களால் வெற்றியடையமுடியாது,” என்றார்.

பாகுபாடற்ற நடுநிலை

பெங்களூருவில் வீலர் ரோட் பகுதியில் இருக்கும் ஃப்ளிப்கார்ட் ஹப் ஜூலை 19-ம் தேதி வண்ணமயமாக காணப்பட்டது. அரவாணி ஆர்ட் ப்ராஜெக்ட்டின் உறுப்பினர்களான திருநங்கைகள் அங்குள்ள சுவற்றில் வரைந்தனர். அதில் பாதி ஆண் மற்றும் பாதி பெண் போல காட்சியளிக்கும் ஒரு மனித முகத்தை வரைந்தனர். ஒருங்கிணைந்து வாழ்வதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் ஒருவர் மற்றவருக்கு எதிரானவர் அல்ல என்பதை வலியுறுத்தும் விதமாகவும் இந்த ஓவியம் வரையப்பட்டது. ஒரு குழந்தை மற்றும் ஒரு வயதானவர் ஆகியோரை சித்தரிக்கும் விதமாகவும் இருந்தது.

ஒரு எளிமையான அதே சமயம் வலுவான கருத்தை வெளிப்படுத்தியது. Where Wishes Stand Unbiased – அதாவது திருநங்கைகள் ஒவ்வொருநாளும் சந்தித்து வரும் பாகுபாடுகளுக்கு எதிராக குரலெழுப்பப்படுகிறது.

அரவாணி ஆர்ட் ப்ராஜெக்ட் சுவரில் சித்திரம் வரையும் முயற்சி. இதில் பொது இடங்களில் சுவர் ஓவியங்களின் மூலம் சமூக நலனுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ரேடியோஆக்டிவ் ரேடியோ ஜாக்கிகளான சாந்தி சோனு மற்றும் பிரியங்கா திவாகர் ஆகிய இரு திருநங்கைகளும் ஃப்ளிப்கார்டின் நிகழ்வில் பங்கேற்றனர். சென்னையிலிருந்து சௌந்தர்யா மற்றும் காஞ்சனா அகிய மற்ற இரு திருநங்கைகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

அரவாணி ஆர்ட் ப்ராஜெக்ட் நிறுவனர் பூர்ணிமா சுகுமார் ஒரு ஓவியர். இவர் இந்த முயற்சியை 2016-ம் ஆண்டு துவங்கினார். ஃப்ளிப்கார்ட்டின் வடிவமைப்பாளரான சாதனா ப்ரசாத் தனது ஓய்வு நேரங்களில் இந்த ப்ராஜெக்ட்டில் பங்களிப்பார். இந்த ஒருங்கிணைப்பு முயற்சி அவர் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்ட யோசனையாகும்.

ஃப்ளிப்கார்ட் இந்த ஒருங்கிணைப்பு முயற்சியின் அடுத்தகட்ட நடவடிக்கையாக கேட்கும் திறனில் குறைபாடுள்ளவர்கள் மற்றும் பேச்சுக் குறைபாடுள்ளவர்களில் கிட்டத்தட்ட ஐம்பது பேரை தேர்ந்தெடுத்து டெலிவரி நபர்கள் / விஷ் மாஸ்டர்ஸாக பணியிலமர்த்தியுள்ளது.

ஆங்கில கட்டுரையாளர் : கிருத்திகா ராஜம்

Related Stories

Stories by YS TEAM TAMIL