ஊழியர்களின் உற்பத்தித்திறனைக் குறைக்க மேலாளர்கள் கையாளும் 7 வழிகள்...

0

பணியாளர்களின் உற்பத்தித்திறனை மெருகேற்ற ஒரு எழுச்சியூட்டும் சூழலை உருவாக்குவது எளிதான விஷயம் அல்ல. எந்த ஒரு தொழிலுக்கும் பணியாளர்களின் உற்பத்தித்திறன் மிகவும் அவசியம். ஊழியர்களின் ஆர்வம் மற்றும் திறனை பொறுத்தே அந்த தொழிலின் வெற்றி அமையும்.

ஒரு மேலாளராய் பணியாளர் உற்பத்திக்கு தடையாக இருக்கும் எல்லா நிர்வாக நடைமுறைகளையும் தடுக்க வேண்டும். மேலும் நிறுவனத்தின் கலாச்சாரம் மற்றும் நிர்வாகத்தின் அணுகுமுறை ஒரு தொழிலாளியின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அமைய வேண்டும்.

மேலாளர்கள் தங்கள் ஊழியர்களின் உற்பத்தித்திறனை குறைக்கக்கூடிய சில முறைகள் இவை:

சிறந்த திறமைகளை அலட்சியப்படுத்துதல்

ஒருவரின் திறமையை குறைத்து மதிப்பிடுவது இயல்பு மற்றும் எளிமயான ஒன்று. பெரும்பாலான மேலாளர்கள் இந்த தவறை செய்து, ஊளியர்களை பின்தள்ளுகிறார்கள். இதனால் தங்கள் திறமைகள் புறக்கனிக்கப்படுவதை எண்ணி ஊழியர்கள் மன உளைச்சல் அடைந்து பாதி மனதோடு வேலையில் ஈடுபடுகிறார்கள்.

தீர்வு: உங்கள் நிறுவனத்தின் சிறந்த தொழிலாளர்களை கண்டுகொள்ளுங்கள், அவர்களுக்கான அங்கிகாரத்தை கொடுங்கள். அவர்களிடம் அதிகம் உரையாடி, மற்றவர்களை விட அவர்கள் எவ்விதத்தில் வேறுப்பட்டுள்ளார்கள் என்பதை கவனியுங்கள். நீண்டகாலம் உங்கள் பணியாளர்களை தக்கவைத்துக் கொள்ள தொழில்முறை வளர்ச்சியை வளர்த்துக் கொள்ளுங்கள்.

நுண்ணிய மேலாண்மை

ஒரு சில நேரத்தில் மேலாளர்களின் கடுமையான கட்டுப்பாட்டால் ஊழியர்கள் தங்களின் அதிகாரமின்மையை உணர்கிறார்கள். தொழிலார்களின் கழுத்தை நெரிப்பது எந்த வகையிலும் உதவாது. ஊழியர்களின் உற்பத்தித்திறன் வளர நுண்ணிய மேலாண்மையை கைவிட வேண்டும்.

தீர்வு: மேலாளர்களே கடின கட்டுப்பாட்டாலராய் இருக்காதீர்கள்; வேலையாட்களுக்கு அவரவர்களுக்கான பொறுப்பையும் அதிகாரத்தையும் அளியுங்கள். நுண்ணிய மேலாண்மையை கைவிட்டு ஊழியர்களுக்கு நம்பிக்கையை கொடுங்கள்.

பயத்துடன் வழிவகுப்பது

பயத்துடன் வழி நடத்தினால் அதுவே ஊழியர்களை வேலையை விட்டு வெளி ஏற முக்கிய காரணமாய் அமையும். ஊழியர்கள் மீது உள்ள சந்தேகமே பயத்திற்கான காரணமாய் அமையும். ஒரு நல்ல மேலாளர் தன் தொழிலார்களை நம்ப வேண்டும். ஊழியர்களின் வேலை பாதுகாப்பு குறித்து அச்சுறுத்தினால் அந்த குழு முடங்கிவிடும்.

தீர்வு: பணியாளர்களின் உற்பத்தித் திறனைக் குறைக்கும் நடவடிக்கைகள் தவிர்க்கவும். சிறிய தவறுகளால் வேலையை இழந்துவிடுவார்கள் என அச்சுறுத்தாதீர்கள். ஒருவரின் வேலை பாதுகாப்பு பற்றி எச்சரிக்கும் முன் நன்கு யோசித்து செய்யுங்கள். அவர்களின் சிறந்த செயல்களை கருத்தில் கொண்டு விட்டுவிடுங்கள். பயத்துடன் இருக்கும் மேலாளர்கள் உடன் ஊழியர்கள் துணை இருப்பது இல்லை.

சமூக ஊடக பிணையம்

இந்த காலகட்டத்தில் ஊழியரின் வாழ்க்கையை சமூக வலைத்தளம் மூலம் பின்பற்றலாம். ஒரு ஆர்வத்தில் மேலாளர்கள் தங்கள் ஊழியர்களை சமூக வலைதளத்தில் இணைத்துக் கொள்கின்றனர். இதனால் இருவருக்கும் இடைய ஒரு நேர்மையற்ற சூழல் உருவாகிறது.

தீர்வு: எந்த தயக்கமும் இன்றி தங்கள் சொந்த வாழ்க்கையை வாழவிடுங்கள். ஹார்வார்ட் வணிக ஆய்வின் படி, படைப்பாற்றல் ஊக்குவிக்கும் நிறுவனங்கள் மிகவும் இலாபகரமானவை மற்றும் 50% அவர்களே சந்தையில் முன்னிலையில் இருக்கின்றனர்.

தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு

பல மேலாளர்கள் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். பணியிடத்தில் உற்பத்தித்திறனை அதிகரிக்க, பயனுள்ளதாக அமைக்க ஒரு சில தொழில்நுட்பங்கள் உள்ளன. அதனால் பணியிட திறனை மேம்படுத்தும் பல்வேறு வன்பொருள் மற்றும் மென்பொருள் தீர்வுகளை ஆய்வு செய்வது முக்கியம்.

தீர்வு: பணியாளர்களிடையே தகவல்தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை எளிதாக்கும் மென்பொருட்கள் அல்லது ஏதேனும் கருவியை பயன்படுத்துங்கள்.

ஒத்துழைப்பு இல்லாமை

வருடா வருடம் வேலையின் பளுவால் ஊழியர்கள் மன அழுத்தம் அடைந்து உடல் நலக் குறைவால் அவதி படுகிறார்கள். இந்த சூழல் ஏற்படும் முன்னே மேலாளர்கள் சுய பாதுகாப்பு மூலம் ஊழியர் உற்பத்தித்திறனை அதிகரிக்க வேண்டும்.

தீர்வு: ஊழியர்களிடம் கலந்துரையாடி, ஆரோக்கியமான வேலை கலாச்சாரத்தை வளர்க்க வேண்டும். கருத்துக்களை கேட்டு வெற்றிக்கு தெளிவான அளவிடலை நிறுவுதல் வேண்டும்.

வேலை-சுயவாழ்க்கை சமநிலையை மதிக்கவும். அவர்களின் அவசர சூழ்நிலைகளில் வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி வழங்க வேண்டும்.

ஆரோக்கியமற்ற நிறுவன கலாச்சாரம்

ஒரு நிறுவனத்தின் கலாச்சாரம் நல்ல மதிப்புடன் மற்றும் நம்பகத்தன்மை கொண்டு இருக்க வேண்டும். இதுவே உங்கள் பிரண்டின் ஆளுமையை தெரிவிக்கும். நிறுவனர்கள் பலனை கண்டு ஓடுவதால் வேலை கலாச்சாரத்தை மறந்துவிடுகிறார்கள். நல்ல பலன்களை பெற ஆரோக்கியமான மற்றும் உற்பத்தித்திறன் அதிகரிக்கும் ஒரு சூழலை உருவாக்க வேண்டும்.

தீர்வு: ஒரு ஆய்வின் படி, மகிழ்ச்சியான ஊழியர்கள் 12% உற்பத்தியை அதிகரிப்பார்கள். ஊழியர்களை ஈடுபடுத்தி, உந்துதல் மற்றும் நல்ல பணி நெறிமுறைகளை ஊக்குவிக்கும் சூழலை உருவாக்குங்கள்.

இவைகளை மேலாளர்கள் கடைபிடித்தால் மகிழ்ச்சியான சிறந்த திறமையான குழு அமையும். உற்பத்தி நிறுவனத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று, அதை படிப்படியாக உயர்த்துங்கள்.

ஆங்கில கட்டுரையாளர்: வர்திகா கஷ்யப்