விண்வெளியை எவரும் சுலபமாக அடைய வாய்ப்பை உருவாக்கும் சென்னை நிறுவனம்!

0

இன்றைய சூழலில் ஸ்டார்ட்-அப் மற்றும் சுய தொழில் இளைஞர்கள் இடையே அதிகமாக பரவி வருகிறது. ஒரு வெற்றியாலனுக்கு 'வானமே எல்லை' என நாம் அதிகம் கேட்டிருப்பதுண்டு அந்த வாக்கியத்தை நிஜம் ஆக்கும் வகையில் விண்வெளியையே தனது இலக்காய் எடுத்துக்கொண்டு தனது தொழில் பயணத்தை துவங்கியுள்ளார் இந்த தொழில் முனைவர்.

’அக்னிகுல்’ Agnikul காஸ்மாஸ் என்னும் நுண் செயற்கைக்கோள்களை எடுத்துச் செல்லும் ஆர்பிடல் ஏவுகலன்களை வடிவமைத்தல் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்கும் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீநாத் ரவிசந்தர். இவர் அயல்நாட்டில் விண்வெளி பொறியியல் மேல் பட்டப்படிப்பை முடித்துவிட்டு இந்தியாவில் சொந்தமாக ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை துவங்க வேண்டும் என்ற கனவோடு கடந்த ஆண்டு தனது நண்பர்களான மொய்ன் மற்றும் ராஜு உடன் இணைந்து இந்நிறுவனத்தை சென்னையில் துவங்கியுள்ளார்.

இந்தியாவில் ஏரோஸ்பேஸ் என்றால் இரண்டே வாய்ப்புகள் தான் ஒன்று ISRO உடன் தொடர்புடையதாய் இருக்கிறது மற்றொன்று சுயமாக நிறுவனம் அமைப்பது. இதில் இரண்டாவது வாய்ப்பை தேர்ந்தெடுத்து, தனக்கு விருப்பமான விண்வெளி பொறியியல் துறையில் புதியவை செய்ய முயற்சித்து வருகிறார் ஸ்ரீநாத்.

“2015ல் பல நாடுகள் விண்வெளிக்கு செலுத்தப்படும் தனியார் ஏவுகலன்களை இயக்கத் துவங்கியது. ஆனால் உலகளவில் விண்வெளித் துறையில் திடமாக இருக்கும் இந்தியாவில் தனியார் ஈடுபாடு எதுவும் இல்லை,”

என தனது தொழில் சிந்தனையின் நோக்கத்தை விளக்குகிறார் ஸ்ரீநாத். பல தனியார் மையங்கள் ISROவுக்கு உதவிக் கொண்டு இருந்தாலும் தனியாக இயங்கும் விண்வெளி நிறுவனங்கள் இங்கு எதுவும் இல்லை என்கிறார் ஸ்ரீநாத். இதனால் சொந்தமாக விண்வெளிக்கு செலுத்தும் ராக்கெட்களை தயாரிக்கவும் வடிவமைக்கவும் தேவையான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி செய்ய சில பல்கலைகழகத்தின் உதவியை நாடியுள்ளார். 

அப்பொழுது 2016ல் ஐஐடி மெட்ராசை சேர்ந்த பேராசரியர் சத்யா சகர்வர்த்தி உதவியுடன் தங்களது ஆர்யாச்சியை மேற்கொண்டனர் ஸ்ரீநாத்.

“ஆராய்ச்சியாளர்கள் அதிகம் காத்து இருக்காமல் விண்வெளியை சுலபமாக அடையவும் தங்களது செயற்கைக்கோள்களை சிக்கல் இன்றி விண்ணில் செலுத்துவது மட்டும் எங்களது முக்கிய நோக்கம் என்கிறார்.”
நிறுவனர் மொய்ன் மற்றும் ஸ்ரீநாத் ரவிசந்தர்
நிறுவனர் மொய்ன் மற்றும் ஸ்ரீநாத் ரவிசந்தர்

உதாரணமாக பல்கலைக்கழகமோ அல்லது மாணவர்கள் தங்களது கல்லூரி ப்ரோஜக்ட்களுக்கு ஏதேனும் ஏரோஸ்பேஸ் தொடர்பாக செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதற்கு அதிக நாள் காத்திருக்காமல் அவர்கள் அணுகக் கூடிய விலையில் இருப்பதே அக்னிகுல்-ன் முக்கிய நோக்கம்.

இரண்டு வருட ஆராய்ச்சிக்கு பிறகு கடந்த ஆண்டே இந்நிறுவனத்தை துவங்கியதால் தற்பொழுது தங்களது விண்வெளி வாகனத்தின் முன்மாதிரிகளை தயாரித்துக்கொண்டு இருக்கின்றனர். 2020குள் தங்களது ராக்ட்களை தயார்நிலைப்படுத்த மும்முரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது இந்த குழு.

2006ல் பட்டப்படிப்பை முடித்துவிட்டு சில வருடங்கள் பணிபுரிந்து பெற்ற சேமிப்பில் இருந்தே தங்களது நிறுவனத்தை துவங்கியுள்ளனர் இந்த நண்பர்கள்.

“இந்தியாவில் வன்பொருள் தயாரிப்புக்கு முதலீடு கிடைப்பதே சிரமம் அதிலும் விண்வெளி தொடர்பான தயாரிப்பு என்றால் முதலீட்டாளர்கள் மத்தியில் சில தயக்கம் இருக்கிறது...”

இதுவே எங்கள் நிறுவனத்திற்கு பெரும் சவாலாக அமைகிறது. இருப்பினும் உலகளவில் முதலீட்டாளர்களை பெற முயற்சி செய்து வருகிறோம் என்கிறார் நம்பிக்கையுடன். 

Related Stories

Stories by Mahmoodha Nowshin