வேலையை விடுத்து உலகை வலம் வரும் ஜோடி- பயணத்தில் தொடங்கிய தொழில்!

0


இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிரேசிலைச் சேர்ந்த தொழில்முனைவர் கஸ்டவோ தனகா, ஒரு பிரபல பதிப்பை சமூக ஊடகத்தில் பகிர்ந்து கொண்டிருந்தார். ‘எதோ மிகப்பிரமாதமான ஒன்று உலகில் நடந்துவருகிறது’ என்ற தலைப்பில் வெளியாகி இருந்த அந்த பதிப்பில் அவர் இதை நம்புவதற்கான 8 காரணங்களை அலசுகிறார். வேற்றுமைகள் பல கொண்ட இந்த நாடு, சிறந்த எதிர்காலத்தை நோக்கி வேகமாக பீடுநடைபோட்டுவருகிறது என்று குறிப்பிட்டிருந்தார். நீண்ட காலத்திற்கு ஒருவராலும் பணிக்குச் செல்வது மட்டும் சாத்தியமாகாது என்பதை அவரது பட்டியலில் முதலாவதாக குறிப்பிட்டிருந்தார். “நாம் உச்சத்தை தொட்டுவிட்டோம். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிபவர்களால் தங்களது பணியை தக்கவைத்துக்கொள்ளமுடியவில்லை. உங்கள் ஆழ்மனதிலிருந்து வந்தாலொழிய எல்லாக் கஷ்டங்களையும் சமாளிப்பீர்கள். அப்படி இல்லையென்றால் வெளியே வரவே பெரும்பாலனவர்கள் விரும்புவார்கள். அதற்காக எதையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறார்கள். பணிச்சுமை, வேலைதொடர்பான மனஅழுத்தம், முழுமையாக பயன்படுத்திக்கொள்வது ஆகியவற்றை தூக்கி போட்டுவிட்டு, எத்தனை பேர் தொழில்முனைவை தைரியமாக தேர்ந்தெடுக்க விரும்புகிறார்கள் என பார்க்கவேண்டியிருக்கிறது”, என்கிறார் கஸ்டவோ.

இளம் தொழில்முனைவர்கள் க்ரெக் கேப்லென் மற்றும் சேம் ப்ரெஸ்சின் இந்த அறிக்கையின் உண்மையை தங்களது சமூக திட்டமான 'ரிமோட் இயர்' மூலம் விளக்கமளிக்கின்றனர். அவர்களுடைய இணையதளத்தில் இந்தத் திட்டம் பற்றி கீழே குறிப்பிடப்பட்டுள்ளபடி விரிவாக்கம் தரப்பட்டுள்ளது: “ரிமோட் இயர்" (Remote Year) உலகம் முழுவதிலும் இருந்து 75 தொழில் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு கம்யூனிட்டி. இவர்கள் ஓராண்டு முழுவதும் பயணித்து, பணியாற்றி உலகில் 12 நகரங்களை கண்டுபிடித்துள்ளனர். ஒவ்வொரு நகரத்திலும் ஒரு மாதத்தை செலவிட்டு, இந்தக் குழு அங்குள்ள உள்ளூர் கலாச்சாரம் மற்றும் தொழில் புரிபவர்களோடு தொடர்பு கொண்டு வாழ்நாள் முழுதும் அவர்களோடு எல்லையில்லா தொழில்முறை உறவை முனைப்போடு வழிநடத்திச் செல்கின்றனர்” ரிமோட் இயர் 2015ல் தொடங்கப்பட்டது, 25 இடங்களை சுற்றுப்பயணம் செய்த நிலையில் தற்போது அதற்கு மட்டுமே 75,000 விண்ணப்பங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

புறப்பாடு

கணவன்-மனைவி அனுஷா ஜோஷி மற்றும் கௌரப் மாதுரே ஜோடியின் வாழ்க்கை நியூயார்க்கில் நல்ல முறையில் சென்று கொண்டிருந்தது. இருவரும் இந்த நாடோடித் தனமான வாழ்வை தேர்ந்தெடுப்பதற்கு முன்னர் தேர்ந்த டிசைனர்களாக இருந்தனர். கௌரப் ஒரு கிரியேட்டிவ் இயக்குனர், அனுஜா மேன்ஹெட்டனில் டிசைன் வல்லுநர்.

உலகின் சிறந்த நகரத்தில் தங்களுடைய பணி மேலும் மேலும் சிறப்பான முறையில் சென்று கொண்டிருந்த சமயத்தில் அவர்கள் வேறுஒரு புது அடுக்குமாடி குடியிருப்புக்க இடம் பெயர்ந்தனர். அந்த எதிர்பாராத மாற்றம் அனைத்தையும் உதறிவிட்டு பயணத்தின் மீது ஈர்ப்பை உண்டாக்கியது. “இப்போது இல்லை என்றால் எப்போது?” என்ற கேள்வி தங்களுக்குள் எழுந்ததாக அனுஜா கூறுகிறார்.

அவர் தொடர்ந்து பேசுகையில் கௌரபும் நானும் பயணத்தை மிகவும் நேசிப்பவர்கள், ஆனால் 9-5 பணி நேரத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் எங்களுக்கு இது சாத்தியமல்ல என்று கருதினோம், அதோடு குறிப்பிட்ட கால அளவிலான விடுமுறைகளும் எங்களுக்கு பயணிக்க போதுமானதாக இல்லை. ஓராண்டு விடுப்பு எடுத்துக் கொண்டு வாழ்வை அதன் போக்கிலேயே வாழ விரும்பினேன், பணிக்கு செல்வது வீட்டுவேலைகளை கவனிப்பது என்று அன்றாட வாழ்வு எனக்கு அலுத்துவிட்டது.” அப்போது தான் கௌரப் ரிமோட் இயர் திட்டத்தை கண்டறிந்து அது பற்றி என்னிடம் கூறினார். நாங்கள் இருவரும் அதற்கு விண்ணப்பித்தோம் ஆனால் எங்களது பிசியான வாழ்க்கையில் அதற்கு விண்ணப்பித்ததை மறந்தே போய்விட்டோம்.

சில மாதங்களுக்குப் பிறகு நாங்கள் எங்களுடைய புதிய வீட்டிற்கு பர்னிச்சர்களை வாங்க கடைக்கு சென்றிருந்தோம், அந்த சமயத்தில் எங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது, அதில் 25 பேர்களில் நாங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. நாங்கள் ஃபர்னிச்சர் வாங்கும் எண்ணத்தை கைவிட்டுவிட்டு, உடைமைகளை பத்திரப்படுத்திக் கொண்டு ஜுன் 2015ல் ப்ரேக்கில் இருந்து எங்களது பயணத்தை தொடங்கினோம்.

ஓராண்டு முழுவதும் உலகை வலம் வரவும், அவர்களின் பயணம் மற்றும் தங்கும் செலவிற்காக ரிமோட் இயர் ஒவ்வொரு விண்ணப்பதாரரிடம் இருந்தும் $27,000 கட்டணம் வசூலிக்கிறது. ஆனால் இந்த பயணத்தின்போது ஏதாவது பணியாற்ற வேண்டும் என்றும் ரிமோட் வலியுறுத்தி இருந்தது. “எங்களுடைய செலவுக்கான பணத்தை நாங்கள் ஃபிரிலான்ஸ் வேலையில் இருந்து பெற்றோம். எங்களால் நியூயார்க்கில் பெற்ற சம்பளம் அளவு பெற முடியவில்லை எனினும் இந்த பயணத்திற்கும் தேவையான நிதியை பெறமுடிந்தது” என்கிறார் அனுஜா.

பயணத்தின் போதே தொழிலை கட்டமைத்தல்

நிலையில்லாத பொருளாதார கட்டமைப்பின் காரணமாக, பலருக்கு இது மிகவும் மோசமானதாகவும், கள அளவில் சாத்தியம் இல்லாத ஒன்றாக இருக்கக்கூடும். "பிக்கா பாக்ஸ்" Pikkabox யோசனைக்குப்பின்னால் மிக முக்கியமாக பயணம் மட்டுமே இருப்பதாக பெருமை பொங்கச்சொல்கிறார் அனுஜா. “எல்லாத்தையும் மிகச் சாதரணமாகத் தொடங்கினேன். கெளரப் ஒரு நாள் சொன்னார், உனது வீட்டிற்கு தேவையான நினைவுப்பரிசுகள், தயாரிப்புகள், பொருட்கள் ஆகியவற்றை நாம் எங்கெல்லாம் பயணிக்கிறோமோ அங்கிருந்து அனுப்ப முடியுமா?” இந்த கேள்விதான் எல்லாத்தையும் மாற்றிப்போட்டது என்கிறார் அனுஜா.

பிக்காபாக்ஸ்

ஜூலை மாதம் 2015 ஆம் ஆண்டு 'பிக்காபாக்ஸ்' எண்ணம் தொழிலாக மலர்ந்தது. “எங்களது மூளை பயணத்திற்கு தயாரான போதே, ஃபிரிலான்ஸாக செய்த பணியை வருடம் முழுவதும் தொடரவேண்டும் என நாங்கள் இருவரும் முடிவு செய்துவிட்டோம். மிகச் சாதாரணமான வாழ்க்கையை வாழ தேவையானவையோடு, விருப்பமான புராஜெக்ட்களை முன்னெடுக்க திட்டமிட்டோம். பணியை களஅளவில் தொடங்குவதற்கு முன்பு நன்கு விவாதித்துக்கொண்டோம். ஆறு மாதம் பயணித்தோம். அதற்கு பிறகு சாத்தியம் எது என்பதை அறிந்துகொண்டோம். அதேப்போல், செலவீனம் தொடர்பாகவும் கவனத்துடன் இருந்தோம். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மறுஆய்வு செய்துகொண்டதால், ஒவ்வொரு நாட்டிலிருந்தும் பிக்காபாக்ஸுக்கு எவ்வளவு செலவு ஆகிறது என்று வரவுசெலவை கவனிக்கமுடிந்தது” என்கிறார் கெளரப்.

இருவருமே தொழிலில் முழுமையாக ஈடுபட்டுவருவதால் மிகச் சாதாரணமாக வாழ்வதில் திருப்தியடைந்து கொள்கிறார்கள். “ஒரு வருடத்திற்கு பயணம் மேற்கொண்டு பரிசோதனை நடத்தவேண்டும் என நினைத்தோம். இந்த பயணங்களிலிருந்து நிறைய கற்றுக்கொண்டது களத்திற்குச் செல்லும்போது உதவியாக இருந்தது” என்கிறார் அனுஜா.

“வடிவமைப்பாளர்களான எங்களுக்கு தயாரிப்புகளைத்தாண்டி, ஏன் எப்படி என்ற கேள்விகள் எழுப்புவதிலேயே ஆர்வமாக இருக்கிறோம். எங்களது வாடிக்கையாளர்களின் உள்ளூர் பொருட்கள் பெட்டியில் அடைக்கப்பட்டு, சேர்க்கவேண்டிய இடத்தில் கலாச்சாரம், எண்ணங்களை கொண்டுசேர்க்க விரும்பி முயற்சிக்கிறோம். புது இடங்கள், புதிய விஷயங்கள் குறித்து வாடிக்கையாளர்களை ஆச்சர்யப்படவைக்க நாங்கள் விரும்பினோம். நாங்கள் பொருட்கள் அனுப்புவதில் புதுமைகளை புகுத்தி வருகிறோம்” என்று பெருமைப்படுகிறார் கெளரவ்.

ஸ்டார் அப்க்கான பெயரை தேர்ந்தெடுப்பதில் நல்ல ஈர்ப்பு கொண்ட பெயர் தேர்வாகவேண்டும் என்று கருதினோம். “ஹிச்சிகர் கைடில் உள்ள மோஸ்ட்லி ஹார்ம்லேஸ் என்ற நாவலில் குறிப்பிடப்பட்டிருக்கும் பிக்கா பேர்டு என்ற வார்த்தையை தேர்ந்தெடுத்தோம். பிக்கா பேர்ட்ஸ் என்பது லமுல்லா கோளில் இருந்து கிடைத்த அற்புதம் போன்றது எனலாம் அல்லது சூரிய உதயம் போன்ற அன்றாட நிகழ்வுகளின் விந்தை என்றும் பொருள் கொள்ளலாம், அல்லது ஒரு கல்லின் மீது எதிர்பாராமல் விழுந்த சாதாரண இலைபோல தோன்றலாம்.”

பிக்காபாக்ஸில் நாங்கள் எங்களது சொந்தத் தேர்வை வைத்துள்ளோம். எங்களது தேர்வு அன்றாடம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும் உள்ள அழகு மற்றும் வியப்பை கண்டுபிடித்து அன்போடு வழங்கும் – உள்ளூர் சாக்லேட்கள் அல்லது ஸ்டாம்ப்புகளை அவர்கள் நாட்டில் இருந்து உள்ளூர் கைவினைப்பொருளாக்குவது இதன் அர்த்தம். பிக்காவின் ஒவ்வொரு செயலும் பிரம்மிக்க வைக்கும், நாங்கள் அந்தந்த நாட்டைக் குறிக்கும் சிறந்த பொருட்களைக் கொண்ட ஒரு புதையல் பெட்டியை உருவாக்கினோம்.

சூட்கேசுக்குள் அடங்கும் வியாபார மாதிரி

நாங்கள் தற்போது மேற்கொண்டிருக்கும் நாடோடி வாழ்க்கையில் எங்களது வியாபார மாதிரியும் எளிமையாக, சாதாரணமாகவே இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். ஒவ்வொரு மாதமும் நாங்கள் ஒரு புது இடத்திற்கு பயணிக்கிறோம், அந்த ஒரு மாதம் அந்த நகரத்தில் கிடைக்கும் கலாச்சாரத்தோடு தொடர்புடைய பொருட்களைக் கொண்டு ஒரு பெட்டியை உருவாக்குவோம். பெட்டியில் சேகரித்து வைக்கப்படும் 6 முதல் 8 பொருட்கள் அனைத்தும் அந்த நாட்டின் சடங்கு சம்பிரதாயம் மற்றும் நகரின் புராதாணம் பற்றி எடுத்துரைப்பவையாக இருக்கும்” என்கிறார் அனுஜா.

“எங்களின் முக்கிய நெறியே உள்ளூர் பொருட்களை கண்டறிந்து அவற்றைப்பற்றிய சரியான கதையைக் கண்டறிவதுதான். ஒரு நகரத்தில் நாங்கள் பயணிக்கும்போது, பங்குதாரர்களை கண்டறிந்து, பொருட்களின் மூலம் குறித்த தகவல்களை பகிர்ந்துகொள்வோம். இப்போதைக்கு வாடிக்கையாளர்களை இரண்டு வகையாக பிரித்துள்ளோம். (1) ஒருதரப்பினர் இடங்களைப்பற்றியும், அவர்களுக்கு பிரியமான பட்டியல் குறித்தும் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பவர்கள், (2)பயணிப்பதில் அனுபவம் வாய்ந்தவர்கள் மிக தனித்துவமான பரிசுகளை தங்களது நண்பர்கள், குடும்பத்தாருக்கு அனுப்ப விரும்புவபர்கள்” என்கிறார் அனுஜா.

சந்தாதாரர்கள்

“சந்தா முறையிலிருந்து பிக்காபாக்ஸ் வித்தியாசமானது. ஒரு மாதத்திற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பாக்ஸ் உருவாக்குகிறோம், அதை இணையத்தில் விற்பனைக்கு காட்சிப்படுத்துகிறோம். எந்தளவுக்கு ஒரு பொருள் பிரபல்யமடைகிறதோ அதை அளவீடாகக்கொண்டு அதன் விலை நிர்நயமாகிறது” என்கிறார் கெளரப்

வாடிக்கையாளர்களை தாண்டி

“விற்பனைpபொருட்கள் வழியாக கலாச்சாரத்தின் கதைகளை சொல்ல பிக்கபாக்ஸ் ஒரு சிறந்த பிராண்டாக திகழ்கிறது. தற்போது உபசரிப்பு மற்றும் விமான சேவைத் துறையிலிருந்து சில விண்ணப்பங்கள் வந்துள்ளன” என்கிறார் அனுஜா.

எதிர்காலம்

“பயணித்துக்கொண்டே தொழிலை கட்டமைப்பதே பிக்காபாக்ஸின் தனித்துவம் ஆகும். தற்போதைக்கு நல்ல பிராண்டாக மாற்றுவதற்கான வலுவான அடித்தளத்தை அமைத்து கொண்டிருக்கிறோம்” என்கிறார் அனுஜா.

நடமாடும் பிக்காபாக்ஸ்

“வருங்காலத்தில் நாங்களே சொந்தமாக பொருட்களை தேர்ந்தெடுப்போம், அல்லது யாரால் வாங்கித்தரமுடியுமோ அவர்களிடம் அவுட்சோர்ஸ் செய்வோம். சில நல்ல வாய்ப்புகளை கண்டறிந்து வைத்துள்ளோம்” என்கிறார் அனுஜா.

வாழ்க்கை

ஆறு மாத கால நீண்ட பிரயாணத்தில் ஈடுபட்டுள்ள இந்த தம்பதியர் தற்போது ஹொனாய், வியட்நாம் வழியாக ஜப்பானை நோக்கி பயணித்து வருகின்றனர். கடந்த 4 மாதங்களாக தென் அமெரிக்காவின் பல நகரிகளில் அனுபவமான பயணத்தை முடித்துள்ளார்கள்.

எப்படி பல நாட்கள் தொடர்ந்து பிரயாணிக்க முடிகிறது என்ற கேள்விக்கு கெளரப் பதிலளிக்கிறார்: “வாழ்க்கையை மிக பெரியளவுக்கு திட்டமிடக்கூடாது என்பதே எங்களது தத்துவம். திட்டமிடல் முக்கியமானதுதான், ஆனால் பல நேரங்களில் நகர்வுகள் மூலம் வாழ்வை முடிவு செய்வோம். எங்களது பணியை முழுமையாக விரும்பி ஈடுபட்டு வருகிறோம். வருடத்தில் 8 மாதம் பணியாற்ற வேண்டும் அத்தோடு தனிப்பட்ட வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக தொடர் பிரயாணம் செய்வது, புதிய திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு அடுத்த 4 மாதங்களை பயனிட விரும்புகிறோம். வருங்காலத்தில் நிச்சயமாக நாங்கள் நல்ல நிலையை அடைவோம் என்பதை கடந்த ஒரு வருட பயண வாழ்வு உணர்த்துகிறது” என்கிறார் அனுஜா.

கட்டுரை: ராக்கி சக்கரவர்த்தி | தமிழில்: கஜலட்சுமி மகாலிங்கம்