’உலக விண்வெளி வாரம்’- இந்திய விண்வெளி சாதனைகளைக் கொண்டாடும் ISRO

0

சமூக தேவைகளுக்கான விண்வெளி தொழில்நுட்பத்தின் பயன்பாடு பூமி என்கிற கிரகத்தில் வசிக்கும் மனிதர்களிடம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு வருடமும் உலகமெங்கும் 70 நாடுகள், அக்டோபர் மாதம் 4-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை ’உலக விண்வெளி’ வாரமாக கொண்டாடுகின்றன. 

மனிதகுலத்தின் தேவைகளுக்கு விண்வெளி தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்துவதற்காக சர்வதேச சமூகத்தினரை ஊக்குவிக்கும் வகையில் இது கொண்டாடப்படுகிறது. 1957-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ம் தேதி ’ஸ்புட்னிக்-1’ என்கிற செயற்கை விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. 1967-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி மாநிலங்களின் செயல்பாடுகளைக் காணுதல் மற்றும் சந்திரம் மற்றும் இதர கோள்கள் உள்ளிட்ட புற விண்வெளிகளை அமைத்திக்கான நடவடிக்கைக்காக பயன்படுத்துதல் போன்றவற்றுக்காக உலக நாடுகளிடையே ஒப்பந்தம் கையொப்பமானது. 2017-ம் ஆண்டிற்கான ’உலக விண்வெளி வார’ கொண்டாட்டத்திற்காக உலக விண்வெளி வார கழகம் ’விண்வெளியில் புதிய உலகத்தை ஆராய்தல்’ என்பதை மையமாகக் கொண்டுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையம் (SHAR), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) ஏவுதளமாகும். இங்கு பாரம்பரியமாக மக்களை சென்றடையும் வகையிலான பல நிகழ்வுகளுடன் உலக விண்வெளி வாரம் கொண்டாடப்படுகிறது. உலக விண்வெளி வாரத்திற்கான இப்படிப்பட்ட நிகழ்வுகள் 2015-ம் ஆண்டு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து திருப்பதி, விஜயவாடா, குண்டூர் ஆகிய அருகாமையிலுள்ள பகுதிகளுக்கும் விரிவடைந்தது. 2016-ம் ஆண்டில் இந்நிகழ்வுகள் ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு என தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பகுதிகளில் விரிவடைந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த வருடம் சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையம் ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு, தெலுங்கானா, ஒடிசா, புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநிலங்கள் முழுவதும் 22 இடங்களில் உலக விண்வெளி வார கொண்டாட்டங்களை விரிவுபடுத்துகிறது. 2017-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆளுநர் மற்றும் ISRO தலைவர் முன்னிலையில் மரியாதைக்குரிய இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்களின் திறப்புவிழாவுடன் உலக விண்வெளி வார கொண்டாங்கள் துவங்குகின்றன.

2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் ராக்கெட் ஏவுதல் திட்டமிடப்பட்டிருக்கும் 5,6,7 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மாணவர்களும் பொதுமக்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு ஏவுதல்களைக் காணலாம். பொதுமக்களுக்காக விண்வெளி கண்காட்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கொண்டாங்கள் நடைபெறும் அனைத்து இடங்கிலும் நிகழ்வின் ஒரு பகுதியாக எழுத்துபோட்டிகள், ஓவியப்போட்டிகள், வடிவமைப்பு சவால், மாணவர்கள் ஆயத்தமின்றி உடனடியாக பங்கேற்கும் பேச்சுப்போட்டி போன்றவை மாணவர்களிடயே நடத்தப்படும். அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் பங்கேற்று கண்காட்சிகள், ’Walk for Space Week’, புகழ்பெற்ற பிரமுகர்களின் விரிவுரைகள் மற்றும் கலந்துரையாடல்கள் மற்றும் காணொளி காட்சிகள் போன்றவை அக்டோபர் 4-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் அனைத்து இடங்களிலும் வெற்றிகரமாக நிகழ்ச்சிகள் நடைபெற மிகுந்த கவனத்துடன் பணிபுரிந்து வருகிறது SDHC SHAR மேனேஜ்மெண்ட். திறப்புவிழா மற்றும் நிறைவுவிழாக்களில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்ற பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். இவர்களுடன் SDHC SHAR நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள். போட்டிகளின் வெற்றியாளர்களுக்கு அந்தந்த பகுதிகளில் நடைபெறும் நிறைவுவிழாவில் விருது வழங்கப்படும். Quiz போட்டியில் ஒவ்வொரு இடத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்கள் SDHC SHAR, ஸ்ரீஹரிகோட்டாவில் நடைபெறும் இறுதி போட்டியில் பங்கேற்பார்கள். இறுதி வெற்றியாளருக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்படும் காட்சிகளை காண்பதற்கு வாய்ப்பளிக்கப்படும்.

மாணவர்களும் பொதுமக்களும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்டு உங்கள் பகுதியில் SDSC SHAR/ISRO/விண்வெளித் துறை நடத்தும் நிகழ்வுகளில் பங்கேற்றுப் பயனடையலாம்.

ISRO நிகழ்ச்சி நிரல்
ISRO நிகழ்ச்சி நிரல்