யுவர்ஸ்டோரியின் 'பாஷா'- இந்திய மொழிகளின் டிஜிட்டல் திருவிழா தொடங்கியது! 

0

யுவர்ஸ்டோரியின் 'பாஷா'- இந்திய மொழிகளின் டிஜிட்டல் திருவிழா இன்று (மார்ச் 11) இனிதே தொடங்கியது. டெல்லியில் நடைபெறும் இந்த விழாவை யுவர்ஸ்டோரி நிறுவனர் ஷ்ரத்தா ஷர்மா, அர்விந்த் பானி, ரிவெரி, ஜியோமியை சேர்ந்த மாதவேந்திரா, யுவர்ஸ்டோரி பிராந்திய மொழிகளின் ஆசிரியர் அர்விந்த் யாதவ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார்.  

"பாஷா" விழாவின் சிறப்பம்சம் குறித்து பங்கேற்பாளர்களுடன் உரையாடிய ஷ்ரத்தா ஷர்மா, 

"நாம் எப்பொழுதும் நமது பின்னணி மற்றும் நமது தாய் மொழி குறித்து பெருமை கொள்ளவேண்டும். இன்றைய காலத்தில், ஆங்கிலம் கற்பது இன்றியமையாதது என்றாலும் அனைவரும் தங்களின் மொழியை பேசுவதிலும் அதன் ஆழத்தை உணர்ந்து பெருமிதம் கொள்வதும் மிகவும் அவசியம்" என்றார்.

தனது குழந்தைப் பருவத்தை நினைவு கூர்ந்த ஷ்ரத்தா, "வாழ்க்கையில் எவ்வித இடத்தை அடைந்தாலும் அவரவரின் மொழிகளை பேசுவதில் தயங்கக்கூடாது என்றும் எங்கு சென்றாலும் தான் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பதைச் சொல்லி பெருமை படவேண்டும்" என்றும் தனது தாயார் கூறிய வார்த்தைகள் மனதில் ஆழப்பதிந்துள்ளதாகக் கூறினார்.

இந்திய மொழிகளின் சிறப்பை பரப்பவும், பல்வேறு கதைகளை பிராந்திய மொழிகளில் மக்களிடம் எடுத்துச்செல்லவும், கடந்த ஆண்டு யுவர்ஸ்டோரி 12 இந்திய மொழிகளில் தொடங்கப்பட்டதாக ஷ்ரத்தா தெரிவித்தார். எனவே மொழிகளை வெற்றியடையச் செய்ய பலரும் தங்களது சந்ததியினரை தங்களது தாய்மொழியை கற்பிக்க ஊக்கமளிக்கவேண்டும் என்றார்.

இன்று நடைபெறும் "பாஷா" விழா, இந்திய மொழிகளின் முதல் டிஜிட்டல் திருவிழாவாகும். இந்தத் திருவிழாவின் வழியே, உள்ளூர் மொழிகளை இணையத்தில் பிரபலப்படுத்துவதற்கு அடித்தளம் அமைக்கப்படும் என நம்புகிறோம்.

காலை தொடங்கிய இவ்விழாவில் மொழிகளின் டிஜிட்டல் முக்கியத்துவங்கள் குறித்து விவாதாங்கள் மற்றும் கருத்தரங்கு நடைப்பெறவுள்ளது.