’WizCard’- இனி இதுவே உங்களின் புதிய விசிடிங் கார்ட்!

1

பிசினஸ் கார்ட் என்று சொல்லப்படும் விசிடிங் கார்ட் ஒருவருக்கொருவர் தங்களைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொள்ள பரிமாறிக்கொள்ளப்படுவது வழக்கம். ஆனால் வெறும் காகிதத்தில் உள்ள அந்த கார்டை இன்றைய காலக்கட்டத்தில் எப்படி பயனுள்ளதாக மாற்ற முடியும் என்ற யோசனையில் உருவானதே ‘விஸ்கார்ட்’ (WizCard).

”விஸ்கார்ட், ஹாரி பாட்டர் படம் பார்த்துக்கொண்டிருந்த போது பிறந்தது,” என்கிறார் அதன் நிறுவனர் ஆனந்த அம்முண்டி. 

இணை நிறுவனர் ஆனந்த ரமணியுடன் இணைந்து உருவானதே விஸ்கார்ட். உலகில் உள்ள எவருடனும் உடனடியாக தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு தொழில்நுட்ப தளமாக இருக்க உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்டதே விஸ்கார்ட். தொடர்பு கொள்ளுதலில் ஒரு புதிய மாதிரியை, பார்வையை, பயனை ஏற்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது லொகேஷன் அடிப்படையிலான ஒரு ஆப் ஆகும். இதில் பயனர்கள், ஒருவரைப் பற்றி கண்டுபிடித்து, அவர்களைப் பற்றிய தகவலை அறிந்து உடனடியாக தொடர்பு கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. 

விஸ்கார்ட் அளிக்கும் சேவைகள் என்ன?

30 பில்லியன் பிசினஸ் கார்டுகள் வரை ஓர் ஆண்டில் உலகமெங்கும் கைமாறி வருகிறது. இந்த கார்டுகள் மூலம் பலன்கள் பல இருந்தாலும் இதில் சில குறைகள் இருப்பதாகவும் ஆனந்த் கூறுகிறார். 

“விசிடிங் கார்டை பத்திரமாக வைக்கவேண்டும், கிழிந்துவிடாமல், தொலைத்துவிடாமல் பாதுகாப்பதும் கடினம். மேலும் பலமுறை தேவைப்படும் போது அது கிடைக்காமல் தவிப்பவர்களே அதிகம்,” என்கிறார். 

தேவையே பல கண்டுபிடிப்புகளுக்கான அடிப்படை. அந்த வகையில் தாங்கள் தயாரித்ததே இந்த தொழில்நுட்ப வசதி கொண்ட கார்ட். 

இது குறித்து ஆனந்த் பல பேரிடம் பேசி, ஆராய்ந்த பின்னரே விஸ்கார்டை உருவாக்கியதாக கூறினார். அவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் பல அம்சங்களுடன் விஸ்கார்ட் வடிவமைக்கப்பட்டது. முதலில் ஐஓஎஸ் டெவலப்பர் ஒருவரின் உதவியுடன் ஆப் ஒன்றை தயாரித்து, பின்னர் அதில் தேவையான விஷயங்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்ததாக பகிர்ந்தார்.  

புதிய பாதையை தேர்ந்தெடுத்தது எப்படி?

”ஒரு முறை செய் அதை சரியாக செய்”, 

என்ற நம்பிக்கை உடையவர் ஆனந்த். இதே மனநிலையில் தனது தயாரிப்பை வடிவமைத்து ஒரு சிறந்த ப்ராடக்டாக வந்துள்ளது என்கிறார். அவரின் தலைமைப்பண்பு இந்த புதிய பயணத்திற்கு உதவியதாகவும் கூறுகிறார். 

விஸ்கார்ட் தனித்தன்மை

விஸ்கார்ட், ஒரு உடனடி தொடர்பு தளம். இதில் டிஜிட்டல் முறையில் ஒருவர் தன்னுடைய தகவல்களை சேமித்து வைத்துக்கொள்ளமுடியும். அதன் மூலம் அவரைப் பற்றிய தகவலை தேடும் ஒருவர் இந்த ஆப்’இல் தெரிந்து கொள்ளமுடியும். விளம்பரத்துறையில் உள்ளவர்களும் தகவல்களை தெரிந்து கொள்ளமுடியும். விழா ஏற்பாட்டாளர்களும் இந்த ஆப் மூலம் தொடர்புகளை பெற கட்டணம் செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம். 

முதலீடு மற்றும் வளர்ச்சி

அண்மையில் தான் தொடங்கப்பட்டது என்பதால் இன்னும் வருமான ஏதும் ஈட்டவில்லை இவர்கள். ஆனால் வரும் காலங்களில் வருமானம் குறித்த திட்டங்களை நிறுவனர்கள் வகுத்துள்ளனர். சந்தா அடிப்படையில் ‘க்ரீன் பிசினஸ் கார்ட்’, விழா ஏற்பாட்டாளர்கள் பதிவு கட்டணம், ஆப்-ல் கூடுதல் வசதிகள் பெற கட்டணம் முறை போன்ற பல திட்டங்கள் அறிமுகப்படுத்த உள்ளனர். 

50,000 டாலர் விதை நிதி கொண்டு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். தற்போது நான்கு பேர் கொண்டு இயங்கும் நிறுவனர்கள் இருவருக்கும் 20 ஆண்டுகால அனுபவம் உள்ளது. சிறந்த குழுவை வழிநடத்தி வெற்றிகரமாக நிறுவனத்தை நடத்தும் திறனை இவர்கள் கொண்டுள்ளது கூடுதல் சிறப்பு. 


Deputy Editor, tamil.yourstory.com I love to meet new people and hear their stories and put it to words for the world to read.

Stories by Induja Ragunathan