'யாதும் ஊரே யாவரும் கேளிர்'- ஸ்டேஸில்லா தாரகமந்திரம்!

0

"யாதும் ஊரே, யாவரும் கேளிர்"

'எல்லாமே நம் ஊர்தான், எல்லாருமே நம் உறவினர்கள்தான்' என்று பொருள் தரும் 3,000 ஆண்டுகள் பழமையான தமிழ்த் தத்துவத்துக்கு ஏற்ப, அங்கிங்கெனாதபடி அவ்வப்போது பயணங்கள் மேற்கொள்வோர் பயன்பெறும் வகையில், டிஜிட்டல் யுகத்தில் புதிய வடிவம் கொடுக்கிறது சென்னையை சேர்ந்த "ஸ்டேஸில்லா" (Stayzilla).

யோகேந்திர வாசுபால், நிறுவனர், ஸ்டேஸில்லா
யோகேந்திர வாசுபால், நிறுவனர், ஸ்டேஸில்லா

வீட்டு உரிமையாளர்கள் தங்கள் கதவுகளையும், காலி அறைகளையும் பயணிகளுக்காக திறந்துவைக்க ஊக்கப்படுத்துகிறோம் என்கிறார் ஸ்டேஸில்லா நிறுவனர் யோகேந்திர வாசுபால்.

"ஸ்டேஸில்லா வெறும் சந்தைக்கான இடம் அல்ல; மாறாக, பயணங்களின் தங்குமிடம் சார்ந்த தொழிலில் புதியதொரு மாற்றாகவே நாங்கள் கொண்டு செல்கிறோம்."

பயணிகளின் மிகக் குறுகிய கால தங்குமிட வசதிக்கான சந்தைக்கு இந்தியாவில் கிட்டத்தட்ட 10 லட்சம் அறைகள் தேவைப்படுவதாக கூறும் இவர், "இன்றைய காலக்கட்டத்தில் பயணம் அல்ல; ரியல் எஸ்டேட் தான் பிரச்சினையே" என்கிறார். தனது நிறுவனத்தின் மேலும் ஒரு முயற்சியாக, பயணிகளுடன் இணைந்து தனிப்பட்ட முறையிலும் இன்னும் எளிய முறையிலும் ஹோம்ஸ்டே எனப்படும் தங்குமிட வசதிகளில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கிறார்.

இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு வெறும் 40 நாட்களிலேயே பல்வேறு நகரங்கள், சிறு நகரங்களில் காலியாக உள்ள 7,500 அறைகளை ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டு, பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டுவிட்டன. இந்த எண்ணிக்கை அடுத்த மூன்று ஆண்டுகளில் 5 லட்சத்தை அடைய வேண்டும் என்பது எங்கள் இலக்கு. தங்கள் வர்த்தகத்தில் 50 சதவீதத்தை ஹோம்ஸ்டே மட்டுமே ஆக்கிரமிக்கும் என்கிறது இந்நிறுவனம்.

பயணத்தை சமூகமயமாக்குதல்

இது எப்படி சாத்தியமாகிறது என ஆச்சரியமா? தற்போது ஒரு செயலி (APP) தொடங்கப்பட்டுள்ளது. அதில், நீங்கள் உரிமையாளராகவோ, விருந்தினராகவோ அல்லது இரண்டுமாகவோ தேர்ந்தெடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. பின்னர், உரிமையாளர்களின் விருப்பங்களும், ஆர்வங்களும் இடம்பெறும். செய்யக் கூடியவை - செய்யக் கூடாதவை பட்டியலும் இருக்கும். தங்குமிட வசதிகளைச் சொல்வதுடன், தங்கள் அறைகளில் தங்கும்போது கிடைக்கின்ற கூடுதல் வசதிகளைச் சொல்வதற்காக, உரிமையாளர்களுக்கு வழிவகுக்கப்படுகிறது.

இதேபோல், விருந்தினர்களுக்கும் சில கேள்விகள் இருக்கும். அவர்களது விருப்பங்களுடன் பொருந்தக் கூடிய தங்குமிடங்கள் காட்டப்படும். அத்துடன், தங்களுக்குள் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொள்வதற்கு 'சாட்' வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து பேசும்போது, இரு தரப்பு நலன்களிலும் பரஸ்பரம் அக்கறை காட்டப்படும்போது, தங்கள் இடத்தை பகிர்ந்துகொள்வதில் உள்ள தயக்கம் வெகுவாக குறைந்துவிடும் என்கிறார் யோகேந்திரா.

கம்யூனிட்டி திட்டம் அறிமுகம்

அதேவேளையில், விருந்தினர்களின் தேவைகளும் பிரச்சினைகளும் வெவ்வேறாக இருப்பதால் எல்லாவற்றையும் ஸ்டேசில்லாவால் ஒரே நேரத்தில் அணுகிவிட முடியாது. ஆகவே, கம்யூனிட்டிகளை உருவாக்கி நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் வழிவகை செய்கிறது ஸ்டேஸில்லா. இதன் மூலம் ஹோம்ஸ்டே உரிமையாளர்களிடையே பிணைப்பு ஏற்படுவதுடன், ஒரு குறிப்பிட்ட கம்யூனிட்டியுடன் இணைந்து செயல்படலாம். அர்ப்பணிப்பு மற்றும் பின்புலம் அடிப்படையில் கம்யூனிட்டிக்காக ஸ்டேஸில்லா வழிகாட்டி தேர்ந்தெடுக்கப்படுவார். எந்த ஒரு விருந்தினரால் சிக்கல் வந்தாலும், அது குறித்த தகவல் வழிகாட்டியிடம் செல்லும். அவர் பிரச்சினையை முழுமையாகப் புரிந்துகொண்டு தீர்வுகாண உதவுவார் என யோகேந்திரா சொல்கிறார்.

"எந்தவித செயல்திட்டத்தை உருவாக்கவும், நெறிமுறைகளுடன் வடிவமைக்கவும் மட்டுமே எங்களால் முடியும். அதேவேளையில், இவற்றைச் செயல்படுத்துவது என்பது கம்யூனிட்டியால்தான் சாத்தியம். மேலும், இது இலவச சேவை இல்லை என்பதால் ஹோம்ஸ்டே உரிமையாளர்களே தேர்வு செய்துகொள்ளலாம்."

கம்யூனிட்டியில் சேர்வதற்கு ஒரு முறைக் கட்டணம் ரூ.5,000 ஆகும். ஹோம்களுக்கு ஏற்படக் கூடிய திருட்டு, இழப்புகளுக்கு இன்ஸூரன்ஸையும் ஸ்டேஸில்லா வழங்கும். இந்த நடவடிக்கைகளின் மூலம் ஹோம்ஸ்டே உரிமையாளர்களின் எண்ணிக்கையை 5,000 ஆகக் கூட்டுவதே வியூகம் ஆகும்.

ஹோம்ஸ்டே-க்களில், ஹோட்டல்களை ஒத்த அனுபவத்தை தவிர்க்கப்பட வேண்டும் என்பதற்காகவே விருந்தினர்களின் உளவியலையும், எதிர்பார்ப்புகளையும் அடுத்த ஆறு மாதங்களுக்குள் அறிந்துகொண்டு செயல்படுவதையே ஸ்டேஸில்லா முக்கிய இலக்காகக் கொண்டுள்ளது.

ஹோம்ஸ்டே திட்டம் என்பது இந்தியாவில் புதிது அல்ல. இந்தியாவில் ஹோம்ஸ்டே-க்களை சில மாநில அரசுகள் ஊக்குவிக்கின்றன. எனினும், இந்த முயற்சிகளுக்கு உரிய பலன்கள் முழுமையாகக் கிடைக்காதது பற்றி யோகேந்திரன் கூறும்போது, ஸ்டேசில்லா போல தேவைகளைப் பூர்த்தி செய்யும் சந்தையிடமாக அரசு இல்லை என்கிறார். மேலும் அவர் கூறுகையில்...

"இந்தத் திட்டயோசனை மீது முழு நம்பிக்கை இருக்கிறது. இந்தியர்களும், மூத்தக் குடிமக்களும் தங்கள் வீடுகளை ஹோம்ஸ்டேகளுக்கு விட தொடங்கினால், அவற்றுக்கான சந்தைகளை உருவாக்குவதும் மிகவும் எளிதானதே."

சீராய்வு செய்தல்

சோதிக்க வேண்டிய விஷயங்களைப் பட்டியலிட்டு, அவை அனைத்தையும் சீராய்வு செய்வதற்காக உரிய நிறுவனங்களுடன் ஸ்டேஸில்லா இணைந்து செயல்படுகிறது.

ஆட்கள் மூலம் நேரடி சீராய்வு முறையை ஒழிப்பது என்ற திட்டமும் நிறுவனருக்கு உண்டு. உரிமையாளர்களே தங்கள் வீடுகளை நேரடியாகவே எந்த சீராய்வுக்கும் இடமில்லாமல் காட்டுவதற்கான சாத்தியங்களை ஆராய்ந்து வருகிறார். இதுபற்றி யோகேந்திரன் கூறிவது:

"நம்பகத்தன்மையையும், பாதுகாப்பையும் எளிதில் அறிவதற்கு எதிர்காலத்தில் செய்ய வேண்டியவை குறித்து யோசித்து வருகிறோம். இதுதான் எங்களது பிடிமானமே. உயர் ரக சீராய்வை அனுமதிக்கும் இந்த சமூக நலன் மிக்க சீராய்வு முறை சக்தி வாய்ந்ததா என்பது பற்றி ஆராய்கிறோம். இதன் மூலம் ஆட்களை வைத்து சோதிக்கும் முறை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும்."

வளர்ச்சியின் வேகம்

இந்த நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்களது மார்க்கெட்டிங்குக்காக ரூ.2 கோடியில் இருந்து ரூ.3 கோடி வரை செலவிட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளை இந்தத் தொகை ரூ.6 கோடியாகவும் உயரலாம். ஸ்டேஸில்லா என்பதே ஒரு சந்தைக் களம் தான். பிராண்டை பிரபலமடையச் செய்வதுதான் அதன் வெற்றிக்கு முக்கியம். எனவே, டிஜிட்டல் விளம்பரங்களில்தான் அவர்களது முழு கவனமும் உள்ளது.

இந்தியா முழுவதும் 35,000 சொத்துகளின் 8,00,000 அறைகள் இந்நிறுவனம் வசம் உள்ளது. இவை கட்டமைக்கப்பட்டவை, கட்டமைக்கப்படாதவை மற்றும் ஹோம்ஸ்டே-க்கள் என மூன்று சந்தைப் பொருளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 50% வர்த்தகம் என்பது ஹோம்ஸ்டே-க்களால் சாத்தியம் என்று எதிர்பார்க்கிறது இந்நிறுவனம்.

த்ரீ ஸ்டார்ஸ் கட்டமைக்கப்பட்ட ஒவ்வொரு சொத்திலும் 35 அறைகள் உள்ளன. இதற்கு ரூ.2,700 கட்டணம். ஒவ்வொரு இடத்திலும் உள்ள கட்டமைக்கப்படாத பிரிவில் 27 அறைகள் உள்ளன. இதற்கான சராசரி கட்டணம் ரூ.800. ஹோம்ஸ்டேி இதில் ஒவ்வொரு இடத்திலும் 4 அறைகள் கொண்டுள்ளது. இதற்கு கட்டணம் ரூ.2,000.

தற்போது, சராசரியாக 7,000 அறைகள் தினமும் வர்த்தகத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 4 மில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டப்பட்டது. மாதம்தோறும் 15 சதவீத அளவில் வருவாய் உயர்வு நிலவுகிறது.

ஏர்பிஎன்பி (AirBnB) ஆஃப் இந்தியாவைப் போன்றதா?

இதுபற்றி கேட்டபோது, ஏர்பிஎன்பிக்கும், ஸ்டேஸில்லாவுக்கும் இடையிலான வேறுபாட்டுகளை இப்படி அடுக்கிறார் யோகேந்திரா...

"ஏர்பிஎன்பி வசம் நிறைய பயனாளர்கள் உள்ளனர். ஆனால், அவர்களுக்குள் எந்தவிதமான கலந்துரையாடல்களும் இருப்பது இல்லை. இது மைஸ்பேஸ் போன்றது. ஆனால் நாங்கள் சற்று வேறுமாதிரி. டிராவலில் ஒரு ஃபேஸ்புக்கை உருவாக்கவே நாங்கள் திட்டமிடுகிறோம். இந்தத் தளத்தைப் பயன்படுத்தி பயனாளிகளுக்குள் இணக்கமான சூழல் ஏற்படுவதால் இது சாத்தியமாகிறது."

இத்தகைய தனித்துவம் கொண்டுள்ள ஸ்டேஸில்லா தனது போட்டியாளர்களைவிட அதிக இலக்குகளை நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது. அதேவேளையில், ஏர்பிஎன்பி தங்களது மலிவான கட்டணம், தரமான தங்குமிட வசதி மூலம் கவர்வதைப் போலவே ஸ்டேஸில்லா, ஹோம்ஸ்டேக்கள் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றது.

இதுகுறித்து யோகேந்திரா கூறும்போது, அட்டவணைகளில் வெவ்வேறு கட்டணங்கள் இருக்கலாம். தங்கள் விருப்பங்களை பகிர்ந்ததன் அடிப்படையில், ஓர் உரிமையாளர் தனது அறையை குறைந்த வாடகைக்குக் கூட கொடுப்பதற்கான சாத்தியம் மிகுதியாக உள்ளது என்கிறார்.

அடுத்த கட்டம் நோக்கி...

மதிப்பிடுதலும், துரிதமும்தான் இந்தத் துறையில் மிக முக்கிய அம்சங்கள். துரிதமாக மதிப்பிடுதல் மேற்கொள்வதற்காக, சீராய்வு சோதித்தல் முறையை செம்மையாக்கும் பணிகளில் ஸ்டேஸில்லா ஈடுபட்டுள்ளது. ஆகவேதான், கம்யூனிட்டி திட்டம் என்ற முறையை ஸ்டேஸில்லா அறிமுகப்படுத்துகிறது. ஆட்கள் மூலம் நேரடி சோதனையில் ஈடுபடுதல் என்ற முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும் பட்சத்தில், இன்னும் சில மாதங்களிலேயே வெளிநாடுகளிலும் தடம் பதித்துவிடும் ஸ்டேஸில்லா.

ஸ்டேஸில்லா வலைதள முகவரி