தீபாவளி பண்டிகை விற்பனை: அதிக  வாடிக்கையாளர்களுடன் அமோக ஆதரவை பெற்றுள்ள அமேசான்!

இந்திய ஆன்லைன் வாடிக்கையாளர்களில் பாதி அளவு மக்கள் அமேசான் மூலம் தங்களது பண்டிகை கால ஷாப்பிங்கை செய்துள்ளனர். 

0

70000 அமேசான் விற்பனையாளர்கள் அனைவரும் குறைந்தது ஒரு வாடிக்கையாளர்களை பெற்றுவிட்டனர். அதில் கடந்த ஆண்டு மட்டும் கோடிகளில் விற்பனை செய்த விற்பனையாளர்கள் 117% வளர்ச்சியை கடந்த ஆண்டை விட பெற்றுள்ளனர்.  

இந்த கிரேட் இந்தியன் அமேசான் பண்டிகை விற்பனையில் 99.3% பின் குறியீடுகளில் இருந்து வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்துள்ளனர்; சிறு நகரங்களில் இருந்து 89% புதிய வாடிக்கையாளர்களும், கடந்த ஆண்டு கிரேட் இந்தியன் சேலில் பங்கேற்ற 80% வாடிக்கையாளர்களும் மீண்டும் வந்துள்ளனர்.

இதில் ஸ்மார்ட்போன்களே அதிக விற்பனையை தந்துள்ளது, முக்கியமாக ஆப்பிள், ஜியோமி, ஒன் பிளஸ் மற்றும் பல. இதில் ஜியோமி போன்கள் 2.2 மடங்கு அதிக விற்பனையையும், ஸ்மார்ட்போன்களில் ஒன் பிளஸ் 6டி அறிமுகத்தால் ஒன் ப்ளஸ் பிராண்ட் முதல் இடத்தையும் தக்க வைத்துள்ளது.

இதை அடுத்து அமேசான் ஃபேஷன் மற்றும் நுகர்பொருள்கள் அதிக விற்பனையை தந்துள்ளது. மற்ற பெரும் பொருட்களில் கடந்த ஆண்டு விற்பனையை விட டிவி 2.5 மடங்கு அதிக விற்பனையை தனது மொத்த வியாபாரத்தில் 50% இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவில் அமேசான் பிரைம் உறுப்பினர் எண்ணிக்கையும் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

இந்த அமேசான் கிரேட் இந்தியன் விற்பனையில் 75% விநியோகம் அமேசான் பே மூலம் இயற்றப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு விற்பனையில் அமேசான் எக்கோ 6 மடங்கும் அமேசான் ஃபைர் டிவி ஸ்டிக் 2.6 மடங்கும் உயர்ந்துள்ளது.

சராசரி தினத்தை காட்டிலும் இந்த பண்டிகை சேலின் போது 4.2x மடங்கு அதிக விற்பனையை கண்டுள்ளனர் விற்பனையாளர்கள்.

அக்டோபர் 10-15, அக்டோபர் 24 - 28 மற்றும் நவம்பர் 2-5 ஆகிய மூன்று சிறப்பு விற்பனை நிகழ்வுகள் கொண்ட இந்த கிரேட் இந்தியன் பண்டிகை 2018 ஆம் ஆண்டில் அமேசான் அதிக விற்பனை மற்றும் அதிக வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.

“இந்த ஆண்டு கிரேட் இந்திய பண்டிகை அதிக வாடிக்கையாளர்களை பெற்று பல மடங்கு விற்பனையையும் உயர்த்தியுள்ளது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான இடங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் அமேசானில் இணைந்துள்ளனர். பிரைம் வாடிக்கையாளர்களும் இரு மடங்கு உயர்ந்துள்ளனர். இ-காமர்ஸில் இது ஒரு நாள் விற்பனையே, மேலும் இந்தியாவில் விற்பனை செய்வதில் அதிக முதலீடு செய்வோம்,”

என்கிறார் அமித் அகர்வால், எஸ்.வி.பி. மற்றும் அமேசான் இந்தியா தலைவர். இது குறித்து பேசிய அமேசான் விற்பனையாளர், கான்சி பேன்சி சாரி நிறுவனத்தின் நிறுவனர், ராகுல் பாபுளி:

“கடந்த ஆண்டே அமேசானில் பனாரஸ் புடைவைகளை விற்கத் துவங்கினோம், இந்த ஆண்டு அக்டோபரில் 125% விற்பனை வளர்ச்சியை கண்டுள்ளோம். இது கடந்து ஆண்டை விட அதிகம்; மேலும் ஆண்லைனில் எங்கள் விற்பனை நிதானமாக வளர்ந்து வருகிறது,” என்கிறார்.

முக்கிய சிறப்பம்சங்கள்

மொத்த விற்பனை மற்றும் வாடிக்கையாளர்களின் வளர்ச்சி

டயர் 2 மற்றும் அதற்கும் கீழ் உள்ள நகரங்களில் இருந்து 89% புது வாடிக்கையாளர்கள் அமேசானில் இணைந்துள்ளனர். இந்த ஆண்டு முதல் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இலவச விநியோகம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் டயர் 2, 3 மற்றும் சிறிய நகரங்களில் இருந்து 80% புதிய வாடிக்கையாளர்கள் பயனடைந்துள்ளனர்.

இந்த முதலீட்டில் ஹிந்தி வலைத்தளம், முதல் கொள்முதல், முதல் ஆர்டரில் இலவச விநியோகம், நிதியளித்தல், 100% பின் குறிப்புக்கான தளவாட இணைப்பு என அனைத்தும் அடங்கும். இந்த முதலீடு அடுத்த 100 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற பயன்படும். ஹிந்தி வலைதள புதிய வாடிக்கையாளர்களும் 2.3 மடங்காக உயர்ந்துள்ளனர்.

சோலன் (ஹெச்பி), பிஞ்சூர் (ஹரியானா), மால்தா (மேற்கு வங்காளம்), அங்குல் (ஒடிசா), ஹவ்லோக் (அந்தமான்), கோட்வாரா (உத்தர்கண்ட்), ஹபுர் (UP), முந்த்ரா (குஜராத்), டின்சுகியா (அசாம்), தும்கா (ஜார்கண்ட்), மாவேலிகேரா (கேரளா) போன்ற சிறு நகரங்களிலும் அமேசான் விநியோகம் செய்தது.

ஒரு சில பிசியான நாட்களில், 300 விமானங்களில் விநியோகம் செய்யப்பட்டது. மிக விரைவாக பெரும்பாலான விற்பனைகள் செய்யப்பட்டது. 3ல் இரண்டு பிரைம் ஆர்டர்கள் இரண்டு நாட்களுக்குள் விநியோகம் செய்யப்பட்டது.

இந்தியாவில் 45% மக்களுக்கு இரண்டு நாட்களுக்குள் விநியோகம் செய்யப்பட்டது

பிரைம் வாடிக்கையாளர்கள்

பிரைம் மெம்பெர்ஷிப் பெரிதும் பயன்படுவதாக பயனாளர்கள் எண்ணுகின்றனர். இந்த பண்டிகை விற்பனையில் 340 நகரங்களில் இருந்து புதிய உறுப்பினர்கள் பிரைமில் இணைந்துள்ளனர். இதில் வடக்கில் லே, தெற்கில் கன்னியாகுமரி, மேற்கில் அமிரீலி மற்றும் இந்தியாவின் வடகிழக்கில் சாங்லங் அடங்கும்.

இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மிக அதிகமான ஸ்ட்ரீமிங் பிரைமில் செய்யப்பட்டுள்ளது; இதில் கவாவான், தாதக், தங்கம், ஃபன்னேய் கான் மற்றும் சத்யமேவ ஜெயதே போன்ற பிரம்மாண்டமான தலைப்புகள் உட்பட வீடியோக்கள் அடங்கும்.

பிரைம் இசை சேவையை அறிமுகப்படுத்தியதில் இருந்து அதிக பயனாளர்கள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.

அக்டோபர் மாதத்தில் மட்டும் அமேசான் பிரைம் இசை 4.5 மடங்கு அதிக பயனாளர்களை கொண்டுள்ளது.

அமேசான் பே

இந்த ஆண்டு விற்பனையில், அமேசான் பே, புது பணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது டெபிட் கார்டு EMI, அமேசான் பே ஈஎம்ஐ, அமேசான் பே, ICICI கிரெடிட் கார்ட் மற்றும் அமேசான் பே கூப்பன்கள். மேலும் வாடிக்கையாளர்களிடையே டிஜிட்டல் கொடுப்பளவு மற்றும் தயாரிப்புகளை தக்கவைப்பதற்கான தேசிய பேமென்ட் கவுன்சில் (NPCI) உடன் கைகோர்த்துள்ளது.

இந்த விற்பனையில் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பிய பிரிவுகள் ஸ்மார்ட்போன், அமேசான் ஃபேசன், தொலைக்காட்சி, எலெக்ட்ரானிக்ஸ், வீடு மற்று சமையலறை பொருட்கள், ஸ்போர்ட்ஸ் & பிட்னஸ் தயாரிப்புகள், அமேசான் பேன்ட்ரி, அழகு சாதனம் மற்றும் பல.

இந்த ஆண்டு கிரேட் இந்தியன் பண்டிகை திருவிழா அமேசானிற்கு நல்ல விற்பனையில் முடிந்தது.

கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின்