போக்குவரத்து காவலராக நியமிக்கப்பட்டுள்ள சாலை விபத்தில் மகனை இழந்த 75 வயது முதியவர்!

0

மூன்றாண்டுகளுக்கு முன்பு 72 வயதான கங்கா ராமின் மகன் டெல்லி வடகிழக்குப் பகுதியின் சீலம்பூர் என்கிற இடத்தின் பரபரப்பான சாலையில் ஏற்பட்ட விபத்தால் உயிரிழந்தார். மகனை இழந்த கங்கா ராம் தினமும் எட்டு முதல் பத்து மணி நேரம் நகரின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி வருகிறார். சீலாம்பூர் போக்குவரத்து சந்திப்பில் காலை ஒன்பது மணிக்குத் துவங்கும் இவரது நாள் இரவு பத்து மணி வரை நீடிக்கிறது.

தொலைக்காட்சி பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள கங்காராம் சொந்தமாக ஒரு கடை வைத்துள்ளார். தனது பரபரப்பான பணிக்கிடையிலும் போக்குவரத்து நெரிசலை கையாளும் பணியில் கடந்த முப்பதாண்டுகளாக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இவர் தனது மருமகளுடன் வசித்து வருவதாக ’நெக் இன் இண்டியா’ தெரிவிக்கிறது.

பெரும்பாலான நேரங்களில் கிழிந்த மோசமான உடைகளிலேயே காணப்படுவதால் இவரை முரடன் என்றே மக்கள் கருதினார்கள். இருப்பினும் அவரது செயலுக்கு இது தடையாக இருக்கவில்லை. அந்த வழியாக கடந்து செல்லும் சிலர் அவரை அணுகி உதவ முன்வந்தனர். புதிய துணிகளை வழங்கினர். ’ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ உடனான உரையாடலில் அவர் குறிப்பிடுகையில்,

”நான் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். என்னுடைய மகன் இறந்த பிறகு என்னுடைய மருமகள் மட்டுமே குடும்பத்தை பராமரிக்க வருவாய் ஈட்டி வருகிறார். தொலைக்காட்சி பழுது பார்க்கும் என்னுடைய தொழில் சிறப்பாக இல்லை. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் என்னுடைய அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்ற என்னுடைய வெளித்தோற்றம் காரணமாக அமைந்தது,” என்றார்.

தன்னார்வலராக செயல்பட்டு முப்பதாண்டுகளாக போக்குவரத்தை சீர்ப்படுத்திய பிறகு டெல்லி போக்குவரத்து காவல்துறை இவரை போக்குவரத்து காவலராக நியமித்துள்ளது. போக்குவரத்து காவல்துறை சிறப்பு ஆணையர் தீபேந்தர் பதக் குறிப்பிடுகையில்,

”சீலம்பூர் மற்றும் மௌஜ்பூர் பகுதிகளை கங்கா ராம் நன்கறிவார். அவரது நிபுணத்துவம் எங்களுக்கு உதவும். காவலருக்கான புதிய சீருடை அவருக்கு வழங்கப்படும். சமூகத்திற்கான தனது சேவையை அவர் தொடரலாம்,” என்றார்.

கட்டுரை : THINK CHANGE INDIA