கோடை 2016 இங்கே, கேம்ப் எங்கே?

சென்னையில் குழந்தைகளுக்கான பத்து சம்மர் கேம்ப்ஸ் 2016– ஒரு பட்டியல் 

0
“இப்போ தான் டிசம்பர் மாசம் மழை வெள்ளம் எல்லாம் வந்தப்போ, ஒரு மாசம் வீட்லயே போர் அடிச்சிட்டு உக்காந்துருந்தாங்க.. இப்போ அடுத்து சம்மர் லீவ் விட்டாச்சு.. இந்த லீவ்-ல வீட்லயே உக்கார விடப் போறதில்ல.. வழக்கம் போல எங்கே எல்லாம் சம்மர் கேம்ப் நடக்குதுனு லிஸ்ட் எடுக்க வேண்டியது தான்... அவங்களுக்கும் என்ஜாய்மென்ட்! என்ன மாதிரி அம்மாக்களுக்கும் கொஞ்சம் எங்களுக்கான டைம் கிடைக்குமே..”, 

சென்னையிலுள்ள பெரும்பாலான அம்மாக்கள் இப்பொழுது யோசித்துக்கொண்டிருக்கும் விஷயமே இது தான். 

உங்கள் குழந்தைகளுக்காக சென்னையில் எங்கெல்லாம் சம்மர் கேம்ப் நடக்கிறது என்று ரவுண்டு அடித்துவிட்டு தமிழ் யுவர்ஸ்டோரியில் நாங்கள் இட்டுள்ள பட்டியல் இதோ:

1) பிரிட்டிஷ் கவுன்சிலின் ‘சம்மர் ஸ்கூல்’

எங்கே: பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம்

எப்போது: மே 2 முதல் 20-ஆம் தேதி வரை

வயது: 8 - 15

எதற்கு: இசை, பாடல்கள், கதைகள், புதிர்கள், நாடகங்கள் மூலம் ஆங்கிலம் கற்றல். இந்த வருடத்தின் மையக்கருத்து ‘ஷேக்ஸ்பியர்’. விளையாட்டு முறையின் மூலம் ஆங்கில மொழியை கற்றுத்தரும் கேம்ப். ரெஜிஸ்டர் செய்ய, இங்கே க்ளிக் செய்யவும்.

2) ஆவிஷ்கார் இந்தியா சம்மர் கேம்ப்

எங்கே: கரடிமலை, சொக்கர்முடி, செம்ப்ரா உள்ளிட்ட இடங்கள்

எப்போது: ஏப்ரல் 2 தொடங்கி மே 30 வரை வெவ்வேறு தேதிகள்

வயது: 9 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகள்

எதற்கு: கரடிமலை, சொக்கர்முடி, செம்ப்ரா உள்ளிட்ட இடங்களுக்கு ட்ரெக்கிங்-இல் ஆர்வம் உள்ள குழந்தைகளுக்காக நடத்தப்படும் கேம்ப். உங்கள் குழந்தை ஒரு குழுவாக பயணித்து, புதிய நண்பர்களை சந்தித்து, புதிய விஷயங்களை தானாகவே தெரிந்துக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். மேலும் விவரங்களுக்கு, இங்கே க்ளிக் செய்யவும்.

3) கால்பந்து சம்மர் கேம்ப்

எங்கே: கிரேட் கோல்ஸ், கோட்டுர்புரம்

எப்போது: ஏப்ரல் 4 முதல் 29 வரை

வயது: 5 - 14

எதற்கு: கால்பந்து விளையாட்டை அனுபவமுள்ள வல்லுனர்களிடமிருந்து கற்க ஒரு வாய்ப்பு. வயதிற்கேற்ப குழுக்கள் பிரித்து பயிற்சியளிக்கப்படும். பெண் குழந்தைகளுக்கு தனி பயிற்சி வகுப்புகள் உண்டு. மேலும் விவரங்கள் அறிய, அழைக்கவும்: 9884632038.

4) அல்லையன்ஸ் பிரான்சே பிரெஞ்ச் மொழி வகுப்புகள்

எங்கே: அல்லையன்ஸ் பிரான்சே, நுங்கம்பாக்கம்

எப்போது: ஏப்ரல் 4 முதல்

எதற்கு: குழந்தைகளும், வளர் இளம்பருவத்தினரும் பிரெஞ்ச் மொழி கற்க வகுப்புகள். விவரங்கள் இங்கே

5) ப்ராலிக் பூனீஸ் சம்மர் கேம்ப்

எங்கே: பந்திபூர், முதுமலை, பரம்பிக்குளம் உள்ளிட்ட இடங்கள்

எப்போது: ஏப்ரல் மற்றும் மே மாதங்கள், இரண்டு குழுக்களாக செலிகின்றனர்

வயது: 9 வயதுக்கு மேல்

எதற்கு: உங்கள் குழந்தைகள் இயற்கையை பற்றி நேரடியாக பயணித்து கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு. பறவைகள், நீர்நிலைகள் பற்றி அறிந்துகொள்ளல், மலையேற்றம் உள்பட பல திறமைகளை வளர்க்க இந்த கேம்ப் உதவும். மேலும் விவரங்கள் இங்கே க்ளிக் செய்யவும்..

6) ஃபுட்டாலஜி சமையல் கேம்ப்

எங்கே: ஃபுட்டாலஜி, அடையார்

எப்போது: ஏப்ரல் 12 முதல்

வயது: நான்கு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகள்

எதற்கு: உணவு மற்றும் சமையல் கலையில் உங்கள் குழந்தையின் ஆர்வத்தையும், திறமையையும் பெருக்க இந்த கேம்ப் ஒரு நல்ல தளமாக அமையும். பானங்கள், உணவு வகைகள், பிட்சா, நூடுல்ஸ் என பல்வேறு விதமான உணவுகளை சமைப்பது மட்டுமில்லாமல், குழந்தைகள் உண்டு மகிழ ஒரு வாய்ப்பு. மேலும் விவரங்கள்  தெரிந்துகொள்ள க்ளிக் செய்யவும்.

7) புகைப்படம் மற்றும் படங்கள் எடுக்க கற்றுத்தரும் கேம்ப்

எங்கே: மிராஜ் இன்ஸ்டிட்யூட் ஆப் பிலிம் மேகிங் அண்ட் போட்டோக்கிராபி, தி.நகர்

எப்போது: ஏப்ரல் 18 முதல்

வயது: 6 முதல் 16 வரை

எதற்கு: புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் கொண்டவரா உங்கள் குழந்தை? வருங்காலத்தில் ஒரு திரைப்பட ஒளிப்பதிவாளராக ஆக விருப்பம் உள்ளவரா? அதற்கான அடிப்படை திறமைகளை கற்றுக்கொள்ள இந்த கேம்ப் உதவும். திங்கள் முதல் வெள்ளி வரை கோடைக்கால விடுமுறையில் பல குழுக்களாக பிரித்து நடத்தப்படவுள்ளது. பதிவு செய்ய, 0995209904.

8) ட்ரீ ஹவுஸ் சம்மர் கேம்ப்

எங்கே: ட்ரீ ஹவுஸ் ப்ளே குரூப்

எப்போது: ஏப்ரல் 25 முதல் மே 13 வரை

வயது: 3 - 8

எதற்கு: கலை, கலாசாரம், விளையாட்டுகள் மூலம் இயற்கையை பற்றி தெரிந்துக்கொள்ள இந்த கேம்ப். ரெஜிஸ்டர் செய்ய, அழைக்கவும்: 044-24343488

9) பால குருகுலம்: கலாச்சார கேம்ப்

எங்கே: ஸ்ரீ மயிலாப்பூர் ட்ரியோ, மந்தவெளிப்பாக்கம்

எப்போது: மே 2 முதல் 15 வரை

வயது: 5 முதல் 18 வரை

எதற்கு: மயிலாப்பூரின் பழமையையும், கலாச்சாரத்தை பற்றியும் தெரிந்துகொள்ள குழந்தைகளுக்கு ஒரு வாய்ப்பு. ஸ்லோகங்கள், கோலம் இடுதல், வரைகலை, மயிலாப்பூரின் கோவில்களுக்கு ஒரு சுற்றுப்பயணம் என சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளடங்கிய இந்த பதினான்கு நாள் சம்மர் கேம்ப், இன்றைய சந்ததியினருக்கு பழமையை நினைவூட்ட ஒரு புதுமையான முயற்சி. மேலும் விவரங்கள் அறிய, 9382698811, இணையதளம்.

10) சர்ஃபிங் கேம்ப்

எங்கே: பே ஆப் லைப் சர்ஃப் ஸ்கூல், கோவளம், ஈ.சீ.ஆர்

எப்போது: ஏப்ரல் 2 முதல் ஜூன் 5 வரை

வயது: 8 வயதிற்கு மேல்

எதற்கு: கடலில் சர்ஃபிங் செய்வது குறித்தும், அதற்குத் தேவையான உபகரணங்கள் குறித்தும் கற்றுக்கொடுக்கும் கேம்ப். கடல் அறிவியல் வல்லுனர்கள் பங்கேற்று, கடல் சார் உயிரினங்கள், கடற்கரை உயிரிகளைப் பற்றிய அறிவியல் வகுப்புகளையும் உள்ளடக்கிய கோடைக்கால வகுப்பு இது. மேலும் விவரங்களுக்கு: முகநூல் பக்கம்.

என்ன அம்மாக்களே ரெடியா! உங்க பிள்ளைகளை அவர்களுக்கு பிடித்த கேம்பில் சேர்த்துவிட்டு அவர்களின் விடுமுறையை உற்சாகமாக கழிக்க வழிசெய்யுங்கள்!

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்