பெண் குழந்தையை பிரசவிக்கும் தாய்மார்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் மருத்துவர்!

1

டாக்டர். கணேஷ் ராக்கின் தந்தை ஒரு கூலித் தொழிலாளர். கணேஷ், டாக்டரான பயணம் மிகவும் சுவாரயஸ்மானது, அதே போன்று அவர் சாதனை மருத்துவராக திகழ்வதற்கான காரணம் மேலும் உந்துதல் அளிக்கக் கூடியது. 2007ம் ஆண்டு அவர் பூனேவின் ஹதப்சர் புறநகர் பகுதியில் 25 படுக்கை வசதியுடன் கூடய பொது மற்றும் மகப்பேறு மருத்துவமனை அமைத்தார். அடித்தட்டு நோயாளிகளுக்கு உதவும் நோக்கிலேயே இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டது. இன்று அவருடைய மருத்துவமனை இந்த அளவிற்கு வளர்ந்து நிற்பதற்கு அவருடைய கடின உழைப்பே காரணம்.

பெண்சிசு கொலைக்கு எதிராக போராடும் வகையில் அந்தப் பகுதியில் இயங்கும் தங்களின் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தால் அக்குடும்பத்தாரிடம் பிரசவ செலவை வசூலிப்பதில்லை என்கிறார் அவர். இன்றைய நாள் வரை சுகப்பிரசவம், சிசேரியன் என நூற்றுக்கணக்கான பிரசவங்களை செய்துள்ளோம், அதே சமயம் பிரசவத்தை கட்டணமில்லாமலும் செய்துள்ளோம். உண்மையில் பெண் குழந்தை பிறந்தால் நாங்கள் எங்கள் மருத்துவமனையில் உள்ள அனைவருக்கும் இனிப்பு கொடுத்துக் கொண்டாடுவோம். டெக்கான் ஹெரால்ட்டு நடத்திய நேர்காணலில் உரையாடிய டாக்டர்.ராக் “பெண் சிசு கொலை என்பது மலிந்துகிடப்பதாக கூறுகிறார், ஏனெனில் சமூக விதிகள் பெண்களுக்கு மட்டுமல்ல பெண் குழந்தைகளுக்கும் எதிரானதாகவே உள்ளது. ஒரு மருத்துவ நிர்வாகியாக பெண் குழந்தையை பிரசிவிக்கும் பெண்களை தாய்மார்களே துன்புறுத்தும் பல சம்பவங்களை நான் பார்த்துள்ளேன்.”

டாக்டர். ராக், எதிர்பார்க்காத அளவு தாக்கத்தை அவரது சேவை அளித்துள்ளது, பெண் சிசு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவரது முயற்சி பல்வேறு சமூக சீர்திருத்தங்களுக்கு வழிவகுத்துள்ளது. “என்னுடைய பணி பற்றி ஊடகங்களில் வந்த பிறகு ஏறத்தாழ 17 முதல் 18 கிராம பஞ்சாயத்துகள் என்னைத் தொடர்புகொண்டன. நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் பாலினத்தை கண்டறியும் சோதனை மற்றும் கருச்சிதைவுகளை(abortion) செய்யப் போவதில்லை என்று கூறியதோடு பெண் குழந்தைகளை வரவேற்கும் வகையில் குடும்பங்களை தயார்படுத்த உள்ளதாகவும் கூறியதாக டாக்டர்.ராக் டிஎன்ஏ(DNA)விடம் கூறினார். இன்றைய தேதியில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாரபட்சம் மற்றும் அடிப்படை சமூக மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் மகாராஷ்டிராவின் உட்புறத்தைச் சேர்ந்த 3 ஆயிரம் மருத்துவர்கள் இதில் இணைந்துள்ளனர்.

ஆக்கம்: Think Change India

தமிழில்: GajalakshmiMahalingam