சேலம் எஃகு உருக்காலை உட்பட SAIL நிறுவனத்தின் மூன்று துணை நிறுவனங்கள் பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு!

0

இந்திய எஃகு ஆணையம் லிமிடெட் நிறுவனத்தின் மூன்று பிரிவுகளின் பங்குகளை மட்டும் – அதாவது பத்ராவதியில் உள்ள விஸ்வேஸ்வரய்யா இரும்பு மற்றும் எஃகு உருக்காலை (VISP), சேலம் எஃகு உருக்காலை (SSP), மற்றும் துர்காபூர் அலாய் எஃகு உருக்காலை (ASP), ஆகியவற்றின் பங்குகளை- விற்பதற்கு அரசு `கொள்கை அளவில்' ஒப்புதல் அளித்துள்ளது. செயில் (SAIL) நிறுவனத்தின் இந்த மூன்று துணை நிறுவனங்களும் தொடர்ந்து நட்டத்தில் இயங்கி வருகின்றன. பங்குகளை தனியாருக்கு விற்கும் அனைத்து நடைமுறைகளும், பரிவர்த்தனை ஆலோசகர் (Transaction Adviser - TA), சட்ட ஆலோசகர் (LA) மற்றும் சொத்து மதிப்பீட்டாளர் (AV) ஆகியோர் உதவியுடன் மேற்கொள்ளப்படும். TA, LA மற்றும் AV நியமனம் செய்வதற்கான வேண்டுகோள் திட்ட அறிக்கை (Request for Proposal - RFP) செயில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது.

துர்காபூர் அலாய் எஃகு உருக்காலை (ASP) கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து நட்டத்தில் இயங்கி வருகிறது. ரூ.400 கோடி முதலீடு செய்தபிறகும், கடந்த 10 ஆண்டுகளில் பத்ராவதி உருக்காலை நட்டத்தில் இயங்குகிறது. அதேபோல நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்கத் திட்டத்தின கீழ் சுமார் ரூ.2200 கோடி முதலீடு செய்தபிறகும் சேலம் எஃகு உருக்காலை கடந்த 5 ஆண்டுகளாக நட்டத்தில் இயங்கி வருகிறது.

அனைத்து ஐந்து பெரிய ஆலைகளிலும் - அதாவது, பிலாய், பொக்காரோ, ரூர்கேலா, துர்காபூர் & பர்ன்பூர் மற்றும் சேலத்தில் உள்ள சிறப்பு எஃகு உருக்காலை ஆகியவற்றில் - ஒரே சமயத்தில் பெரிய அளவில் நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்கத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. கச்சா எஃகு உற்பத்தியை ஆண்டுக்கு 12.8 மில்லியன் டன்கள் என்பதில் இருந்து 21.4 மில்லியன் டன்களாக அதிகரிப்பது என்பதுடன், காலாவதியான தொழில்நுட்பங்களை அகற்றி செயல்பாட்டை செம்மைப்படுத்துவது என்ற செயில் நிறுவனங்களின் தேவைகளை போதுமான அளவுக்கு நிறைவேற்றும் வகையிலும் , விரிவாக்கத் திட்டம் அமைந்தது. நவீனமயமாக்கல் & விரிவாக்கத்தின் கீழ், செயில் நிறுவனம் அதிநவீன தொழில்நுட்பங்களை நிர்மாணித்தது. கரி உலர்வு தணிப்புடன் கூடிய 7 மீட்டர் உயர கல்கரி உலைக்கலன் பேட்டரிகள், உயர் அழுத்த மீட்சித் திறன் டர்பைன்களுடன் கூடிய அதிக கொள்திறன் கொண்ட (4000 கனமீட்டருக்கும் அதிகமாக) பிளாஸ்ட் உலைக்கலன்கள், துணை எரிபொருள் செலுத்துதல் & வார்ப்பு மைய கசடு குருணையாக்கும் பிரிவுகள், அதி நவீன முறையில் எஃகு உருவாக்கல், சுத்திகரித்தல் மற்றும் வார்ப்பு செய்யும் தொழில்நுட்பத்துடன் கூடிய மற்றும் அதிநவீன உருட்டாலைகளுடன் கூடிய அதாவது - குளிர் உருட்டாலை பொருட்களுக்கு பிணைக்கப்பட்ட பிக்லிங் மற்றும் டேண்டம் மில், நீளமான தண்டவாளங்களுக்கு (260 மீ. வரை) யுனிவர்சல் தண்டவாள மில், 4.3 மீ. அகல பிளேட் மில் போன்றவை - எஃகு உருக்கும் பட்டறைகள் ஆகியவை அமைக்கப்பட்டன. நவீனமயமாக்கல் & விரிவாக்கம், சுரங்கங்கள் மற்றும் தொடர்பான தேவையான திட்டங்களுக்கு பிப்ரவரி 2017 வரையில் திரண்டிருந்த செலவு ரூ.64,986 கோடியாக இருந்தது.