பொது இடங்களை சுத்தமாக வைத்திருப்பது எப்படி? சுட்டிக்காட்டும் கேரள சிறு நகரம்!

0

பசுமையான வயநாடு பகுதியில் சுல்தான் பத்தேரி நகரம் கேரளாவில் சுத்தமான நகரமாக போற்றப்படுகிறது. இதற்குக் காரணம் இந்த நகரின் நகராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் சி.கே. சஹாதேவனின் அயராத முயற்சியாகும்.

இந்த மலைநகரின் தண்ணீர் பிரச்சனை, நகரைச் சுத்தமாக்குதல், தொடர்ந்து சுத்தமாக வைத்திருத்தல் போன்ற பிரச்சனைகளை சமாளிக்க தொடர் முயற்சிகளைத் துவங்கினார்.

சுல்தான் பத்தேரியைச் சேர்ந்த குடியிருப்புவாசிகளும் அவரது முயற்சிகள் அனைத்திற்கும் உதவினர்.

துவக்கம்

சில ஆண்டுகளுக்கு முன்பு சஹாதேவன் நகரில் இருந்த கழிவுகளை நிர்வகிக்க சுத்தப்படுத்தும் முயற்சி ஒன்றைத் துவங்கினார். அதைத் தொடர்ந்து 13 வடிகால்கள் சுத்தப்படுத்துதல், முப்பதாண்டுகளுக்கும் மேலாக அகற்றப்படாமல் கிடந்த கழிவுகளை அகற்றுதல் உள்ளிட்ட பெரியளவிலான பணிகளையும் மேற்கொண்டார்.

மேலும் நகரத்தைத் சுத்தப்படுத்தி அழகாக்கும் முயற்சியில் ப்ளாஸ்டிக் பயன்பாடு தடைசெய்யப்பட்டது, சாலையில் இருந்த களைகள் அகற்றப்பட்டது என ’மனோரமா’ தெரிவிக்கிறது.

விரைவில் அதிகாரிகளுடன் இணைந்து மக்களும் பொது இடங்களில் கழிவுகள் கொட்டப்படாமல் இருப்பதை உறுதிசெய்தனர்.

தாக்கம்

தினமும் காலை நான்கு மணிக்கு ஒன்பது துப்புரவாளர்கள் சாலைகளை சுத்தம் செய்கின்றனர். முதல் ஷிஃப்டின் ஒரு பகுதியாக மூன்று மணி நேரத்தில் இந்த பணியை செய்து முடிக்கின்றனர். சாலைகளும் பொது இடங்களும் எந்நேரமும் சுத்தமாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் மதியம் இரண்டாவது ஷிஃப்டிற்கு வந்து மீண்டும் சுத்தம் செய்கின்றனர்.

"நகரம் முழுவதும் பூச்செடிகள் நடும் பணியையும் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். சில ஆண்டுகளில் சுல்தான் பத்தேரி மாநிலத்தின் தோட்ட நகரமாக மாறிவிடும்," என ’தி பெட்டர் இண்டியா’ குறிப்பிடுகிறது.

இந்நகரின் பொது கழிப்பிடத்திற்கு வருகை தருவோரின் விவரங்களும் பதிவு செய்யப்படுகிறது. இந்த முயற்சி நகரத்தில் மட்டுமன்றி வெளியிலிருந்தும் பாராட்டுகளையும் ஆதரவையும் பெற்று வருகிறது.

கழிவுகளில் இருந்து வருவாய்

பொது இடங்களை சுத்தப்படுத்துவது ஒருபுறம் இருக்க அதைத் தொடர்ந்து சுத்தமாக வைத்திருப்பது முற்றிலும் வேறு பணியாகும். மக்கள் பொதுவெளியில் கழிவுகளை கொட்டாமல் இருப்பதை உறுதிசெய்ய அவற்றை மக்களிடமிருந்து வாங்கும் முயற்சியை நிர்வாகம் துவங்கியது.

கழிவுகள் உரமாக்கப்பட்டு மின்சார உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டது. அடுத்த மூன்று மாதங்களில் கழிவு மேலாண்மை ஆலை அமைக்கப்பட உள்ளது.

இறுதியாக நகரை அழாகாக வைத்திருக்கும் முயற்சியில் அரசியல் நிகழ்வுகள் தொடர்பான பேனர்கள், போஸ்டர்கள் போன்றவை நிகழ்ச்சி முடிந்த 24 மணி நேரத்தில் அகற்றப்படுகின்றன.

கட்டுரை : THINK CHANGE INDIA