இந்தியப் பெண்கள் பணத்தை வேறுபட்ட விதத்தில் கையாள்கிறார்களா?

0

’இந்தியப் பெண்கள் பணத்தை வேறுபட்ட விதத்தில் கையாள்கின்றனர்’ என்கிறார் ’மிண்ட் மணி’ கன்சல்டிங் எடிட்டர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிதி திட்டமிடுபவர் மோனிகா ஹாலன்.

இந்தியப் பெண்கள் தங்களது முதலீட்டையும் இருப்புநிலை கணக்கையும் ஏன் முறையாக வைத்திருக்கவேண்டும் என்பது குறித்து பேசுகிறார். சமீபத்தில் #LetsTalkMoney என்கிற புத்தகத்தை வெளியிட்டார். இது தனிநபர் நிதி திட்டமிடலுக்கான வழிகாட்டியாக விளங்குகிறது.

இந்த வீடியோ கட்டுரை மோனிகா ஹாலன் உடனான #HerMoney தொடரின் ஒரு பகுதியாகும். இது இந்தியப் பெண்களைப் பற்றியும் அவர்கள் பணத்தை கையாளும் விதம் குறித்தும் ஆராய்கிறது.

யுவர்ஸ்டோரி: இந்தியப் பெண்கள் பணத்தை வேறுபட்ட விதத்தில் கையாள்கிறார்களா?

மோனிகா ஹாலன் : பணத்தை குறித்து கவலைப்படவேண்டிய அவசியம் தனக்கில்லை என்கிற மனநிலையுடனேயே இந்தியப் பெண்கள் வளர்க்கப்படுகின்றனர். 

“பணத்தை கையாளும் பணியை ஆண்கள் பார்த்துக்கொள்வார்கள். நீ இது குறித்து கவலைப்படவேண்டாம்,” என்றே பொதுவாக அனைத்து வீடுகளிலும் பெண்களிடம் கூறுகின்றனர். 

அப்பா, சகோதர்கள், கணவன், மகன் போன்றோரே பணத்தை நிர்வகிக்கும் போக்கை நாம் காணலாம். பெண்கள் பணம் குறித்து பேச ஊக்குவிக்கப்படுவதில்லை. சொத்துக்களை நெருங்கவிடாமல் பெண்களை தள்ளி வைப்பதற்காகவே இவ்வாறு புத்திசாலித்தனமாக நடந்து கொள்வது சற்று நிதானமாக ஆழமாக சிந்தித்தால் மட்டுமே புலப்படும். 

சொத்துகள் குறித்த விவரம் உங்களுக்கு தெரியவில்லை என்றால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய அவசியமும் இல்லை. பணத்தை பற்றி எனக்கு எதுவும் தெரியாது என ஒரு பெண் சொல்வதயே அனைவரும் பாராட்டுகின்றனர். இது வெறும் பணம் தொடர்புடையது அல்ல. இது நிதிச்சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு தொடர்புடையது.

பெண்களால் சிறப்பாக பணத்தை நிர்வகிக்கமுடியும் என்பதை பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன. யார் வீட்டுப்பொறுப்புகளை நிர்வகிக்கின்றனர்? பெரும்பாலும் பெண்கள்தான். இது மிகவும் சிக்கலான விஷயம். நான் பணிக்கும் சென்று வீட்டையும் நிர்வகித்துள்ளேன். பணிக்குச் செல்வதைக் காட்டிலும் கூட்டுக்குடும்பத்தை நிர்வகிப்பது மிகவும் சிக்கலானதாகும்.

இந்தியாவில் குடும்பப்பொறுப்புகளை நிர்வகிக்கும் சிக்கல் நிறைந்த பணியை உங்களால் மேற்கொள்ளமுடியும் என்றால் உங்களால் உங்கள் பணத்தையும் சிறப்பாக நிர்வகிக்கமுடியும். வாஷிங் மெஷினை இயக்கமுடியும் என்றால் பணத்தை நிர்வகிக்கமுடியும். வாகனம் ஓட்டத்தெரிந்தால் பணத்தை நிர்வகிக்கமுடியும். இதுவும் மற்ற பணிகளைப் போன்றதுதான். எந்தவித வித்தியாசமும் இல்லை. நீங்க செய்ய நினைத்தால் போதும் செயலில் இறங்குங்கள்.

யுவர்ஸ்டோரி: கூட்டுக்குடும்பமாக இருக்கும் வீட்டில் மாமனாரும் கணவரும் இருக்கின்றனர். பெண்கள் நிதித்தேவைக்கு மற்றவர்களைச் சார்ந்திருக்கும் நிலை காணப்படுகிறது. இத்தகைய குடும்பத்தில் காலடி எடுத்துவைக்கும் பெண்ணின் நிலை என்ன? அவர் எதை இழந்துவிடுகிறார்?

மோனிகா ஹாலன் : அந்தப் பெண் தன்னுடைய சொந்த வாழ்க்கையின் கட்டுப்பாட்டையே இழந்துவிடுகிறார். நீங்கள் சம்பாதிக்காமல் கணவரை சார்ந்திருக்கும் பட்சத்தில் அவரிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு செலவிடுவீர்கள். அது எப்படி சரியாக இருக்கும்? 

பணிபுரிந்துகொண்டிருந்த ஒரு பெண் இவ்வாறு பணத்தை பேரம்பேசி பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை எப்படித் தொடங்குவார்? நான் சார்ந்திருக்கும் நபரிடம் சென்று ‘நான் சில பொருட்களை வாங்கவேண்டும். எனக்கு 5,000 ரூபாய் தேவைப்படுகிறது’ என கேட்கும் நிலையை என்னால் கற்பனை செய்துகூட பார்க்கமுடியவில்லை. பணத்தை கேட்பதன் மூலம் ஏதோ ஒரு தருணத்தில் என் சுய மரியாதை குறைவதாகவே நான் உணர்வேன்.

எனவே இல்லத்தரசிகள் தங்களது பணியை அதிக மரியாதையுடன் பார்க்கவேண்டியது அவசியம். குடும்பத்தை நிர்வகிப்பது என்பது சிக்கலான, அதேசமயம் நன்றி பாராட்டாத பணியாகும். ஆகவே நம்முடைய மனநிலையை மாற்றிக்கொள்ளவேண்டும். வெளியில் வேலைக்கு செல்லவில்லை என்றாலும் அதே அளவு மரியாதையை நீங்கள் மேற்கொள்ளும் பணிக்கு நீங்கள் வழங்கவேண்டும். உங்களுக்கான சொத்தை சேர்த்துவைக்கவேண்டும். நீங்கள் சேர்க்கும் சொத்துக்கள் அனைத்தும் உங்களது பெயரிலும் இருக்கவேண்டும் என்பதை நீங்கள் உணரவேண்டும்.

உங்களுக்கான மாத வருவாய் கட்டாயம் இருக்கவேண்டும். வீட்டு வேலைகளுக்காக சம்பளம் வாங்கவேண்டும் என்பது சற்று கடுமையான விமர்சனமாக கருதப்படலாம். நான் அதை வருவாயாகப் பார்க்கிறேன். எனக்கும் முக்கியத்துவம் உள்ளது. நீங்கள் பணிக்குச் செல்ல உதவும் வகையில் நான் பணிபுரிகிறேன். அதறகாக எனக்கு சம்பளம் கிடைக்கிறது. அது என்னுடைய வருவாய்.

ஆங்கில கட்டுரையாளர் : தேவிகா சிட்னிஸ் | தமிழில் : ஸ்ரீவித்யா

Related Stories

Stories by YS TEAM TAMIL