கண்கவர் எம்ப்ராய்டரி பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக தளம்!

0

ஆரம்பத்தில் ஒரு வர்த்தக இணையத்தளமாக உருவாகிய "எம்ப்ராய்டரி மெட்டீரியல்.காம்" (EmbroideryMaterial.com, EMC) விரைவாக பிரபலம் அடைந்து வர்த்தகத்தில் உயர் இடத்தை உடனே அடைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 2013ம் ஆண்டில் முதல் அடி எடுத்துவைத்த இந்த வர்த்தக நிறுவனம் அதன் பின் அடுத்தடுத்த உயரங்களை தொட்டபடியே தன்னுடைய பயணத்தை தொடர்கிறது.

ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு சேவைகள் தரும் பி2பி (B2B) வர்த்தக தளமாக விளங்கும் இது, அழகான ஆடைகள், மற்றும் வாழ்க்கை முறையை வித்தியாசமாக்கும் கண்கவர் பொருட்களை விற்பனை செய்கின்றது. வித்தியாசமான முத்துகள், கற்கள், வெவ்வேறு அளவிலான ஊசிகள், தைக்கும் நூல்கள் போன்ற பொருட்களை கடைகளுக்கும், ஆடை வடிவமைப்பு நிறுவனங்களுக்கும் மொத்த விற்பனையாகவும் செய்யகிறது இந்த தளம். இவர்களின் மொத்த விற்பனை மற்றும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போவது இந்த இணையத்தள நிறுவனத்துடைய நிலையான வெற்றியை காட்டுகிறது.

உற்பத்தியாளர்களிடமிருந்து தேவையான பொருட்களை பெற்றுக்கொள்ளும் இந்த நிறுவனம், தன்னுடைய வாடிக்கையாளர்களை பெரிய அளவில் வைத்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவிலான ஆடை வடிவமைப்பாளர்கள் முதல், ஆரம்ப நிலை கடைகள் மற்றும் பெரிய ஏற்றுமதி நிறுவனங்கள் வரை பல்வேறு வகையான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இந்த இணையத்தளத்தினுடைய நிறுவனர் வருண் குமார், தன்னுடைய ஆரம்ப கால பயணத்தை பற்றி விளக்குகிறார்.

எம்ப்ராய்டரி மெட்டீரியல்.காம் தளத்தை தொடங்கும் முன், பெண்களுக்கான பிரத்யேக உயர் ரக ஆடைகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தின் தயாரிப்பு ஆலோசகராக பணிபுரிந்தார் வருண் குமார். "தயாரிப்பிற்கான வேலைகள் மற்றும் பொருட்கள் சரி வர நடக்கிறதா என்பதை கண்காணிப்பதே என்னுடைய வேலை. அப்போது தான், வருங்கால ஆடை வடிவமைபிற்கு தேவையான பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொண்டால் என்னவென்று எனக்கு தோன்றியது. ஆடை வடிவமைப்பாளரின் தேவைக்கேற்ப அவசர அவசரமாக சரியான பொருட்களை சந்தையில் தேடி வாங்குவதை இதன் மூலம் தவிர்க்க முடியும் என்பதையும் நான் உணர்ந்தேன். வடிவமைப்பாளர்கள் அவர்களுக்கு தேவையான பொருட்களை தேர்ந்தெடுத்து ஒரு சிறப்பான ஆடையை வடிவமைக்க கிட்டத்தட்ட ஒரு வாரம் வரையிலும் கூட எடுத்துக்கொள்வது உண்டு. இந்த நிலை தொடரும் போது, ஒரு இணைய வர்த்தக தளத்தினுடைய அவசியம் அதிகரிக்கும் என்பதையும் நான் அப்போது உணர்ந்தேன்."

தோல்வியே வெற்றிக்கான முதல் படி

வருண் தன்னுடைய பாடங்களை கடினமான முறையில் கற்றுக்கொண்டார். இந்த தளத்தை நிறுவுவதற்கு முன் ஒரு ஆடை தயாரிப்பு தொழிலை தொடங்கி அதில் தோல்வியை கண்டார். இந்த நேரத்தில் தான், ஹோட்டல்களுக்கு சீருடைகளை வடிவமைத்து தருவது, பெரிய கடைகளுக்கு தேவையான உயர் ரக ஆடைகள் வடிவமைத்து தருவது, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என்று பல வேலைகளை வருண் செய்து வந்தார். இந்த நிலையில் தான் தனக்கு கீழ் 100 பேர் ஊதியத்திற்காக பணியாட்களாக இருப்பதை உணர்ந்தார் வருண், அதை எடுத்து சரியாக நடத்த முடியாததால், வேறொரு நிறுவனத்திடம் விற்று, அங்கு ஆலோசகராக ஓராண்டு வரை பணிபுரிந்தார் வருண் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அனுபவங்கள் சேர்ந்து தனக்கு வாழ்க்கையில் ஒரு தெளிவான கவனத்தை தந்தது என்றே சொல்லலாம் என்கிறார்.

பின் 2013ம் ஆண்டில் தன்னுடைய பிறந்த நாளன்று ஆலோசகர் பணியை விட்டி விலகினார் வருண். அதே ஆண்டின் ஜூன் 19ம் தேதியன்று எம்ப்ராய்டரி மெட்டீரியல்.காம் நிறுவனத்தை தனியாக இருந்து நிறுவினார் வருண். சிறிது நாட்களிலேயே தன்னுடைய மனைவி சிமி பிஸ்வாஸ் மற்றும் நண்பர் புபிந்தர் சிங் இருவரும் சேர்ந்து கொண்டனர்.

தற்போதைய நிதி நிலை

வருணின் நிறுவனம் தற்போது ஒரு கோடி டாலர் அளவில் முதலீடு அளிக்கக்கூடிய நிறுவனத்தை அணிகி வருகின்றது. இந்த முதலீட்டின் மூலம், முன்னணி வர்த்தக தளங்களான எட்ஸி (Etsy) மற்றும் டவாண்டா (Dawaanda) டாட் காம் தளத்தில் இருக்கும் எம்ப்ராய்டரி பொருட்களுக்கு ஒரு தக்க போட்டியாக தரமான பொருட்களை வாடிக்கையாளர்களிடம் சேர்க்க வேண்டும் என்பதே எம்ப்ராய்டரி மெட்டீரியல் தளத்தின் பிரதான குறிக்கோள். தவிர, இணைய தளத்தை எல்லோரையும் ஈர்க்கும் அளவில் மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எம்ப்ராய்டரி மெட்டீரியல்.காமின் முக்கிய அம்சங்கள்

மாறிவரும் சந்தை மற்றும் காலகட்ட மாறுதல்களுக்கு ஏற்ப பொருட்களை மேம்படுத்தி வழங்குவதிலேயே எங்கள் முழு கவனமும் தற்போது இருந்து வருகிறது. இதற்காக சர்வதேச தரத்தில் நிலைக்கும் வகையில் ஒரு பிரத்யேக ஆய்வும் எடுக்கப்பட்டு அதற்கேற்ப தரமான பொருட்களை தங்களுடைய இணையத்தளத்தில் அமைக்கப்படவிருக்கின்றது. இந்த சர்வதேச தர ஆய்வின் மூலம், சந்தையில் இருக்கும் மற்ற தளங்களை விட, ஒரு படி முன்னே சென்று ஆடை அணிகலன்களின் தற்போதைய அமைப்பை எல்லோருக்கும் எடுத்து சொல்லும் விதமாக அமைவதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், உயர் ரக பொருட்களையும் கச்சிதமாக கொண்டு சேர்க்க முடியும். உலகளவில் ஒரு பெரிய இணைப்பை உருவாக்கும் விதமாக, இந்தியாவின் கைவினை கலைஞர்களிடமிருந்து பிரத்யேக எம்ப்ராய்டரி பொருட்களை கொள்முதல் செய்து, ஜப்பான், சீனா மற்றும் செகஸ்லொவாக்கியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டங்கள் உண்டு.

ஆடைகள் மற்றும் அணிகலன்கள் பற்றிய ஆய்விற்கும், தங்களுடைய பொருட்களை பிரத்யேகமாக புகைப்படமெடுக்கவும் ஒரு தனி குழுவை அமைத்துள்ளது இந்த நிறுவனம். வெளிநாட்டு விற்பனைக்கு பேபால் (Paypal) உடன் கைகோர்த்திருப்பதை தவிர, உள்நாட்டு விற்பனைகளுக்கு க்ரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் மூலம் பணத்தை செலுத்தும் வசதிகளை பெயூ (PayU) மூலம் செய்துக்கொள்ளலாம். நேரடியாக பொருளை வாங்கி பணத்தை செலுத்தும் கேஷ் ஆன் டெலிவரி (Cash On Delivery COD) வசதிகளும் எம்ப்ராய்டரி மெட்டீரியல்.காம் தளத்தில் உள்ளது.

இணையதள முகவரி: Embroiderymaterial


Journalist, News buff, Biographies attract me more. Lover of Conspiracy and Conflict theories, Okay'ish Photographer, Lost in Arts and Music.

Stories by Nithya Ramadoss