சென்னையைச் சேர்ந்த ’டிக்கெட் நியூ’ நிறுவனத்தை வாங்கியது பேடிஎம்!  

0

டிஜிட்டல் பண பரிவர்த்தனை முன்னணி நிறுவனமான பேடிஎம், சென்னையைச் சேர்ந்த டிக்கெட் முன்பதிவு தளமான ’டிக்கெட்நியூ’ தளத்தை செயல்படுத்தி வரும் ஆர்ப்ஜென் டெக்னாலஜிஸ் பிரைவட் லிட் நிறுவனத்தை கையகப்படுத்தியதாக அறிவித்துள்ளது.

பேடிஎம் நிறுவனர் விஜய்சேகர் சர்மா 
பேடிஎம் நிறுவனர் விஜய்சேகர் சர்மா 

பேடிஎம் நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளரான அலிபாபா தனது பொழுதுபோக்கு பிரிவான அலிபாபா பிக்சர்ஸ் வாயிலாக இந்த தளத்தில் முதலீடு செய்துள்ளதாக செய்தி வெளியான ஓராண்டில் இது நிகழ்ந்துள்ளது. 

இந்த முதலீடு ரூ.120 கோடி அளவிலானதாக கருதப்படுகிறது.

ராம்குமார் நம்மாழ்வாரால் 2007 ல் நிறுவப்பட்ட டிக்கெட் நியூ, முன்பதிவு இணையதளம் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நாட்டின் 300 நகரங்களில் இருப்பதை கொண்டதாக தெரிவித்தது. நகர்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் 3,000 க்கும் மேற்பட்ட திரை வலைப்பின்னலை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தது.

நொய்டாவை தலைமையிடமாகக் கொண்ட பேடிஎம் கடந்த 2016 மார்ச் மாதம் நிகழ்ச்சிகள் டிக்கெட் வர்த்தகத்திலும் நுழைந்தது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், இணைய டிக்கெட் சேவை மற்றும் நிகழ்ச்சிகள் நிறுவனமான இன்சைடர்.இன் –ல் பெரும்பான்மை பங்குகளை வாங்கியது. இதன் பிறகு பேடிஎம் நிறுவனம், 8,000 நிகழ்ச்சிகளுக்கு மேல் செயல்பட்டு ஒரு மில்லியனுக்கு மேல் டிக்கெட்களை விற்பனை செய்துள்ளது. அண்மையில் யுவர்ஸ்டோரிக்கு அளித்த பேட்டியில், பேடிஎம் தாய் நிறுவனமான, One97 நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ விஜய் சேகர் சர்மா, 

பொழுதுபோக்கு பிரிவில் சந்தை முன்னணி நிறுவனத்தின் அளவை எட்டி வருகிறோம். தொழில் அளவில், இந்த இணைய மேடைகள் வளரும் என நம்புகிறேன். பக்கவிளைவு வர்த்தகங்களான இவை பெரிய அளவில் வளர்ந்துள்ளன, என்று கூறினார்.

அதிகாரப்பூர்வ அறிக்கையின் படி, பேடிஎம் நிறுவனத்தின் பொழுதுபோக்கு வர்த்தகம் இந்தியாவில் 50 சதவீத ஆன்லைன் ஊடுருவலை பெற்றுள்ளது. இந்த மேடை, இசை, விளையாட்டு, நகைச்சுவை மற்றும் பிற பிரிவுகளில் டிக்கெட்களை அளிக்கிறது. இந்த கையகப்படுத்தல் பற்றி, பேடிஎம், முதன்மை நிதி அதிகாரி மற்றும் எஸ்.வி.பி, மதூர் தியோரா கூறியதாவது;

 ”சினிமா மற்றும் பொழுதுபோக்கு டிக்கெட் தேவைகளுக்கான ஓரிடமாக இருக்க விரும்புகிறோம். டிக்கெட் நியூ நிறுவனர்கள் தென்னிந்தியாவில் அருமையான வர்த்தகத்தை உருவாக்கியுள்ளனர். பேடிஎம் நிறுவனத்துடன் ஒரே மாதிரியான மனநிலையை கொண்டுள்ளனர். இந்த செயல்பாடு மூலம், டிக்கெட் நியூ பங்குதாரர்களை பேடிஎம்மின் 300 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் இணைக்க விரும்புகிறோம். மேலும் அவர்கள் வருவாய் மற்றும் வர்த்தகம் அதிகரிக்கவும் உதவ விரும்புகிறோம்.”

தென்னிந்தியாவில் வலுவான இருப்பிடத்தை டிக்கெட்நியூ பெற்றுள்ளது பேடிஎம் நிறுவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அதன் மொத்த விற்பனையில் 35 சதவீதம் பிராந்திய திரைப்படம் மற்றும் உள்ளடக்கம் வாயிலாக வந்ததாக நிறுவனம் தெரிவித்ததது.

அதே காலகட்டத்தில், பேடிஎம் நிறுவனம், 2016 ஆண்டுடன் ஒப்பிடும் போது 500 சதவீத வளர்ச்சி அடைந்து 2017ல் 52 மில்லியனுக்கு மேல் திரைப்பட மற்றும் நிகழ்ச்சி டிக்கெட்களை விற்பனை செய்ததாக தெரிவித்தது. 4,000 திரைகளுக்கு டிக்கெட் வழங்குவதாகவும், இவற்றில் 1,600 பிராந்திய திரைகள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பேடிஎம் தனது வர்த்தகத்தை அதிகரிக்க, வார இறுதியில் திரைப்படம் பார்க்க ஊக்குவிக்கும் மூவிபாஸ் சந்தா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 100 சதவீத பணம் திரும்பி அளிக்கும் திட்டத்தையும் அறிவித்துள்ளது.

திரைப்படம் அல்லாத பிரிவில், ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு 40 முதல் 45 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக ரெட்சீர் அறிக்கை தெரிவிக்கிறது.

இணைய சேவையில் திரைப்படங்கள் பார்ப்பது அதிகரித்த நிலையில், 17 ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் திரைப்பட பிரிவில் இணைய முன்பதிவு குறைந்தது. இதை ஈடு செய்வதற்காக, விளையாட்டு மற்றும் உள்ளூர் நிகழ்ச்சிகளில் அதிக வளர்ச்சி உள்ள பிரிவுகளில் நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். உள்ளூர் நிகழ்வுகளின் அதிகரிப்பு இரண்டாம் அடுக்கு நகரங்களில் வர்த்தகம் அதிகரிக்கவும் உதவுவதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு டிக்கெட் சேவையில் பேடிஎம் போட்டியாளரான புக்மைஷோ, பல்வேறு பிரிவுகளில் விரிவாக்கம் செய்துள்ளது. ஸ்டிரைப்ஸ் குழும நிதிக்கு பிறகு இசைத்துறையிலும் நுழைந்து தனது நிலையை வலுப்படுத்தி வருகிறது.

புதிய வரவு என்பதால், பேடிஎம் மேலும் சிலவற்றை செய்ய வேண்டியிருக்கிறது.

கலகாடோ அறிக்கை படி, புக்மைஷோ, தனது பிரிவில் 78 சதவீத சந்தை பங்கு பெற்றுள்ளது. நிறுவனம் நெட் புரமோட்டர் ஸ்கோராக 0.52 பெற்றுள்ளது. 2017 ஜனவரி முதல் மார்ச் வரை சராசரி ஆர்டர் மதிப்பாக ரூ.446.90 பெற்றுள்ளது, பேடிஎம் சராசரி ஆர்டர் மதிப்பாக ரூ.468.40 பெற்றுள்ளது.

ஆங்கிலத்தில்: தருஷ் பல்லா | தமிழில்; சைபர்சிம்மன் 

Related Stories

Stories by YS TEAM TAMIL