உணவு உற்பத்தியில் ஈடுபட்டு விவசாயப் பணிகளை மேற்கொண்ட கல்லூரி மாணவர்கள்!

0

ஒரு விவசாயி பயிர்களை வளர்க்க எவ்வளவு பிரயத்தனப்படுகிறார் என்பது பெரும்பாலானோருக்குத் தெரிவதில்லை. உணவுப் பயிர்கள் வீணாவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று. எனினும் மங்களூருவின் Dr P Dayananda Pai and Satish Pai Government First Grade College-ல் உள்ள மாணவர்களும் ஆசிரியர்களும் தங்களது உணவு தயாரிப்பிற்குத் தேவையான அரிசியைத் தாங்களே உற்பத்தி செய்கின்றனர். 

இந்த மாணவர்களின் கடுமையான உழைப்பினால் உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டது. அதைக் கொண்டு உணவு தயாரித்து உண்ணும்போது அவர்கள் மிகவும் மகிழ்ந்தனர். 

நகரின் அருகில் உள்ள கொனாஜ் கிராமத்தில் நெற்பயிர்கள் உற்பத்திக்காக 200 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டு முயற்சி மேற்கொண்டனர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் இந்த முயற்சிக்கு கிராம பஞ்சாயத்தும் உதவியுள்ளது.

என்எஸ்எஸ் சேவையிலும் பங்களிக்கும் இந்த மாணவர்களின் இந்த முயற்சி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி துவங்கியது. உணவை உற்பத்தி செய்வதற்காக எத்தகைய முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்பது குறித்து மாணவர்களுக்குத் தெரிவதில்லை என்கிறார் கல்லூரியின் முதல்வர் ராஜசேகர் ஹெப்பர். எனவே மாணவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு ஏற்படவும் விவசாயத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தவும் கல்லூரி இத்தகைய முயற்சியை அறிமுகப்படுத்தத் தீர்னானித்தது.

இந்த முயற்சியைத் துவங்க கிராமத்தில் ஆறு ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டது. அந்த நிலம் சில காலமாக பயிரிடப்படாமல் இருந்தது. இதைப் பராமரித்து வந்த தேவாலயத்தால் பயிர்களை வளர்க்கமுடியாமல் போனது. கல்லூரியின் இந்த முயற்சி என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளரான நவீன் கொனாஜ் மற்றும் ஜெஃப்ரி ராட்ரிக்யூஸ் ஆகியோர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

மாணவர்களும் கிராமவாசிகளும் தொடர்புகொள்ள நவீன் ஏற்பாடு செய்தார். அதன் பிறகு கிராமவாசிகள் இந்த முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர். கிரமாவாசிகளிடையே நிலவிய பல்வேறு பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வையும் மாணவர்கள் ஏற்படுத்தினர்.

மாணவர்கள் முதலில் மொத்த நிலத்தையும் சுத்தம் செய்தனர். பிறகு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நிலத்தில் வேலை செய்தனர். 12 நாட்களில் இந்த நிலம் பயிரிடுவதற்கு ஏற்ற இடமாக மாறியது. நெல் வளர்க்க நான்கு முதல் ஆறு ஏக்கர் நிலத்தை மட்டுமே மாணவர்கள் பயன்படுத்தினர். மீதமிருந்த பகுதியில் மற்ற பயிர்கள் வளர்க்கப்பட்டது. ஆரம்பத்தில் மாணவர்கள் நிலத்தில் பணிபுரிய தயக்கம் காட்டினாலும் இறுதியில் ரசிக்கத் துவங்கினர்.

மாணவர்கள் அவர்கள் பணிபுரிந்த நிலத்தை அடைய ஒவ்வொரு முறையும் 17 கிலோமீட்டர் பயணிக்கவேண்டியிருந்தது. ஆனால் அவர்கள் அனைத்து தடைகளையும் எதிர்த்துப் போராடினர். இறுதியாக அவர்களது கடுமையான உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைத்தது.

கட்டுரை : THINK CHANGE INDIA