கட்டுமானப் பணியாளர் சுப்ரமண்யா கோடிகள் மதிப்பிலான பெரிய லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தை கட்டமைத்த கதை!

45 கோடி ரூபாய் மதிப்பிலான LCM Logistics,120 கோடி ரூபாய் ஆண்டு வளர்ச்சி கண்டு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. 2025-க்குள் 500 கோடி ரூபாய் வருமான இலக்கை கொண்டுள்ளது.

3

2002 பள்ளி விடுமுறையில் எல்லா மாணவர்களைப் போல 17 வயது சிறுவனான எச். டி சுப்ரமண்யா தனது தேர்வு முடுவுக்காகக் காத்து இருந்தார். தன் குடும்பத்தில் மேல் நிலை பள்ளி முடித்த முதல் ஆண் என்ற சந்தோஷத்தோடு தேர்வு முடிவு வந்த பின் வீட்டுக்கு திரும்பினார். ஆனால் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் வரை ஒரே கவலைதான் சுப்ரமண்யாவின் மனதில் ஓடி கொண்டிருந்தது; என் குடும்பத்தால் என் மேல் படிப்பை பார்த்துக்கொள்ள முடியுமா?. வீட்டிற்கு வந்த பின்னர் தனது குடும்ப சூழ்நிலையைக் கண்டு தேர்வு முடிவுகளை கூறாமல் வேலைக்குச் செல்ல முடிவு செய்தார்.

“நான் வேலைக்கு செல்கிறேன் நான் சொல்வதை கேட்டு என் தாய் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஏன் என்றால் அப்பொழுது இரு வேளை சாப்பாடிற்கு கூட நாங்கள் போராடினோம்,” 

என தன் சிறுவயதை நினைவுக் கொள்கிறார் 32 வயதான சுப்ரமண்யா. அப்பொழுது அவர் ஒரு கட்டிட நிறுவனத்தில் 1800 ரூபாய் மாத சம்பளத்திற்கு ப்யூன் ஆக தன் பணியை ஆரம்பித்தார். தற்பொழுது 45 கோடி மதிப்புள்ள LCM லாஜிஸ்ட்டின் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் நிறுவனர்.

LCM Logistics நிறுவனர் எச்.டி.சுப்ரமண்யா
LCM Logistics நிறுவனர் எச்.டி.சுப்ரமண்யா

9 வருடத்திற்குள் அவரால் இந்த இடத்தை எப்படி அடைய முடிந்தது?

“நான் மக்கள் நேரத்தை மதிப்பவன் மேலும் பணத்தை நன்கு நிர்வகிப்பேன். இருப்பினும் ஒரு சாதாரணமான மனிதனாய் இருப்பதை விட இந்த நிலைமைக்கு நான் வர காரணமாய் இருந்த என் வறுமையை இன்றும் நினைத்து பார்க்கிறேன்...”

LCM லாஜிஸ்டிக்ஸ் இப்போது 570-க்கும் மேற்பட்ட வாகனங்களை நிர்வகிக்கிறது மேலும் அதன் வருடாந்திர வருவாய் 45 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தெற்கு பகுதிகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு LCM விருப்பமான லாஜிஸ்டிக்ஸ் வழங்குனராகும். 2017-18 நிதியாண்டில் ரூ.100 கோடி வருடாந்திர விகிதத்தில் இயங்குகிறது.

சுப்ரமண்யாவின் கதை தங்கள் வாழ்வில் ஏதேனும் தருணத்தில் தொழில் தொடங்கும் விருப்பம் உள்ள அனைவருக்கும் ஒரு முதன்மையான வெற்றி கதையாகும்.

“இது உங்கள் வேலையின் நெறிமுறை பற்றியது, ஒரு தொழில் தொடங்கிய பின் வாய்ப்பு உங்களை தேடி வரும்,” என்கிறார்.

இதுவே சுப்ரமண்யாவின் முதல் நேர்காணல் ஆகும், அதனால் மிகவும் உற்சாகத்துடன் பேசத் தொடங்கினார். அவரது அமைதியே அவர் எந்த மேலாண்மை நிறுவனத்திலும் பயிற்சி பெறவில்லை என்பதை தெரிவித்தது, அதில் எந்த பொய்யும் இல்லை. அவரது பங்குதாரர்கள் அவரை இந்நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் நிறுவனர் என அறிமுகப்படுத்தவில்லை என்றால் நம்மால் கண்டு பிடித்திருக்க முடியாது. ஆடம்பரம் இன்றி மிக எளிமையாக இருந்தார்.

LCM லாஜிஸ்டிக்ஸ் இயக்குநர் மடப்பா டி. சுப்பைய்யா கூறுகிறார்:

“2009-ல் நான் ஒரு பெரிய நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தேன் அப்பொழுது இந்த குழப்பமான மனிதர் தனது நிறுவனத்தில் சேர்ந்து நிறுவன நடத்தையை சீர் செய்ய முடியுமா என்று என்னிடம் துணிச்சலாய் கேட்டார். அவரை பார்க்க எனக்கு ஆச்சரியமாய் இருந்தது, எந்தவித சிறந்த பின்னணியும் இல்லாமல் வந்த ஒருவர் இவ்வளவு வளர்ந்தது வியப்பாக இருந்தது. அவர் கேட்டதும் நான் ஒப்புக் கொண்டேன், காரணம் அவரிடம் இருந்து பணிவை கற்றுக் கொள்ள. அதிலிருந்து எட்டாவது வருடத்தில் இந்த நிறுவனம் மிகப் பெரிய லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

சுப்பைய்யா சுப்ரமண்யாவின் வளர்ச்சியை பார்த்தவர், ஒரு டரக்கில் இருந்து 570 டரக் வரை அவரின் படிப்படியான உயர்வை கண்டுள்ளார்.

பணம் ஈட்ட எடுத்த கடினமான பாதை

18 மாதமாக ப்யூன் ஆக உழைத்ததே அவர் இங்கு வரக் காரணமாக இருக்கிறது. ப்யூன் ஆக பணிபுரிந்த போது அனைவருக்கும் பணிபுரிந்தார் அதிலும் தொழிலாளர்களுக்காக இரு மடங்கு வேலை செய்தார். பின்னர் அவர் பெங்களூருக்கு சென்று வேலை பார்க்க தன் தாயிடம் அனுமதி கேட்டார்.

18 வயது நிறைவடைந்தவுடன், 2004-ல் பெங்களூருக்கு சென்றார். ஒரே வாரத்தில் இது சுலபமன்று என்பதை புரிந்துக்கொண்டார். ஒரு நபரின் ஆலோசனையின் படி தொழிலாளர் ஒப்பந்தம் ஒன்றில் பதிவு செய்தார். அதன் மூலம் தையல் பணியை நிர்வகிக்கும் வேலை அவருக்குக் கிடைத்தது. நாளொன்றுக்கு உற்பத்தி செய்யக்கூடிய துண்டுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து அவருக்கு கூலி வழங்கப்பட்டது. அதனால் ஒரு நாளுக்கு 150 துண்டுகள் என தன் கை விரல்கள் மரத்து போகும் அளவிற்கு தயார் செய்தார்.

“பலர் என்னை திட்டினர் மற்றும் உமிழ்ந்தனர். அது ஒரு ஏழையை எவ்வளவு பாதிக்கும் என்று எவரும் உணரவில்லை. அந்த வேலை என்னை பிழிந்தெடுத்தது அதனால் வேலையை விட்டு நின்றேன். தையல் என் தொழில் அல்ல என்பதை புரிந்துக்கொண்டேன்,” என்கிறார் சுப்ரமண்யா.

30X30க்கு சதுர அடி உள்ள அறையில் பத்து பேருடன் தங்கி இருந்தார் சுப்ரமண்யா. அதன் பின் தனது இன்னொரு நண்பர் மூலம் லாரி ஓட்டுனர் ஒருவர் கிளீனர் வேலைக்கு ஆள் தேடுவதாகக் கூறினார். 1800 சம்பளம், உணவு, மற்றும் லாரி ஓட்ட சொல்லி கொடுப்பதாக கூறினார். அவருடன் வேலைக்கு இணைந்து ஒரு வருடத்திற்குள் வாகனம் ஓட்ட கற்றுக்கொண்டார் சுப்ரமண்யா மேலும் லாஜிஸ்டிக்ஸ் பற்றியும் தெரிந்து கொண்டார். லாஜிஸ்டிக்ஸ் தொழிலை பொறுத்தவரை வாடிக்கையாளர்களை அறிந்து, நேரத்தில் பொருட்களை உரியவரிடத்தில் சேர்ப்பது என புரிந்துக்கொண்டார்.

“நான் திரை அரங்கிற்கோ அல்லது நண்பர்களுடனோ எங்கேயும் சென்றது இல்லை, எல்லா பணத்தையும் சேமித்தேன்.”

2006 ஆம் ஆண்டில் லாஜிஸ்டிக்ஸ் துறையில் புரட்சி ஏற்பட்டுக் கொண்டிருந்தது. கனரக வாகனம் ஊருக்குள் வரக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஆணை இட்டு இருந்தது, அதன் பின்னரே சிறிய வாகனம் வரத் தொடங்கியது. இதையொட்டி டாட்டா மோட்டர்ஸ் நிறுவனம் ஒரு டன் டரக்கை அறிமுகப்படுத்தியது பின் அதுவே hub-and-spoke model-க்கு வழி வகுத்தது.

இந்த hub-and-spoke model-ல் தொழிற்சாலைகளில் இருந்து பொருட்கள் பெரிய கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கிருந்து சிறிய வாகனம் மற்ற சில்லறை கடைகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்லும்.

அதன்பின் சுப்ரமண்யா 50,000 ரூபாய் கொடுத்து 6 டன் டரக் ஒன்றை வாங்கினார். கடன் வாங்கி அந்த டரக்கை வாங்கினார், வாடிக்கையாளர்களை பிடித்து சம்பாதித்து விடலாம் என்ற மன நம்பிக்கையுடன். அவரது முதல் வாடிக்கையாளர் பெரிய நிறுவனமான ’பிக் பஜார்’. ஒரு நாளில் நான்கு பயணங்கள் மேற்கொள்ளுவார், அதில் மாதம் 40000 வரை வருவாய் ஈட்டினார்.

“அதை தவிர்த்து விநியோகம் செய்யும் வழியில் இன்னும் மற்ற சரக்குகளை ஏற்றிக் கொண்டு கூடுதலாக சம்பாதித்தேன்...”

ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக நீங்கள் ஆக வேண்டும் என்றால் உங்கள் சுற்றுச்சூழலை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். வணிகம் மற்றும் தொடர்புகளை பகிர்ந்து கொள்வதன் மூலம் அதனை உறுதிப் படுத்தலாம் என்கிறார்.

சுப்ரமண்யாவின் சிறப்பான விநியோகத்தை பார்த்து அவருக்கு பல அழைப்புகள் வந்தது. அவருக்கு வேலை பளு அதிகம் இருந்ததால். வேலை இல்லாமல் இருக்கும் சக ஓட்டுநர்களுடன் பகிர்ந்துகொள்வார். இவ்வாறு அவர் 30 டரக்குகளை நிர்வகித்தார், இது கூடுதல் வருமானத்தைச் சேர்த்தது.

“நான் ஒரு ஓட்டுனருக்கு ஒரு வேலையைக் கொடுத்தால் அவர்கள் எனக்கு 50 கிமி-க்கு 200 ரூபாய் கொடுப்பார்கள். இந்த சம்பவமே நான் புதிய தொழில் தொடங்க யோசனை அளித்தது,”

LCM இன் தோற்றம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 10 ஆண்டிற்குள் 20000 கோடி ரூபாய் முதலீடு செய்து பெரு நிறுவனமாக இருந்தது. அப்போது 2008-ல் அந்நிறுவனம் லாஜிஸ்டிக்ஸ் சேவைக்காக தேடிக் கொண்டிருந்தது. அப்பொழுதே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீயில் லாஜிஸ்டிக்ஸ் பிரிவை பார்த்து கொண்டிருந்த சுப்பைய்யாவை சுப்ரமண்யா சந்தித்தார்.

அங்கிருந்து இரண்டு டரக்கில் மரச்சாமான்களை விநியோகம் செய்யும் வேலை சுப்ரமண்யாவுக்கு கிடைத்தது.

“இந்த மனிதனின் சீரான விநியோக ஆற்றல் என்னை வியப்படையச் செய்தது. ஒருப்போதும் எந்த வித சலிப்பும் அவர் காட்டியதில்லை. வேலையில் மட்டுமே கண்ணும் கருத்துமாய் இருந்தார்,” என்கிறார் சுப்பைய்யா.

லாஜிஸ்டிக்ஸில் ஈடுப்பட்டு இருந்த பல சிறு நிறுவனங்கள் சுப்ரமண்யாவை வேலையில் இருந்து பின் வாங்க மிரட்டியும் உள்ளனர் என்கிறார் அவர். "இருப்பினும், அவர் பணியாற்றிய கார்ப்பரேட் அவரை காப்பாற்றியது, என்கிறார் சுப்பைய்யா. பின் சுப்பைய்யா LCM நிறுவனத்தை பதிவு செய்யச் சொன்னார், அதன் மூலம் ரிலையன்ஸிடம் இருந்து பெரு ஆர்டர்களை பெறலாம் என்றும் அறிவுரைத்தார்.

LCM Logictics குழு
LCM Logictics குழு
“ஒரு வருடம் அவர் அயராது உழைப்பதை நான் பாத்திருக்கிறேன், அதனால் அவரிடம் இணைய முடிவு செய்தேன்," என்கிறார் சுப்பைய்யா.

LCM-ல் இயக்குனராக சேர்ந்த பிறகு சுப்பைய்யா HR, நிர்வாகம் மற்றும் நிதி என்று பல பிரிவுகளை உள் கொண்டுவந்து சீரான நிறுவன முறையை அமைத்தார். “இது போன்ற எந்த பிரிவும் இல்லாமல் LCM 50 வருவாயை நிர்வகித்து கொண்டிருந்தது எனக்கு வியப்பை அளித்தது,” என்கிறார். அதே நேரத்தில் சுப்பைய்யா ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து LCMக்கு நீண்ட கால ஒப்பந்தத்தை பெற்றுத் தந்தார்.

2010-ல் LCM-ன் வருவாய் ஒரு கோடியை தொட்டது, 2014-குள் 100 கோடி ஆனது. தற்போது LCM-ல் 120 டரக்குகள் உள்ளது, 450 வெளியில் இருந்து இணைக்கப்பட்ட டரக்குகளும் உள்ளது.

மூன்றாவதாக குமார் சேதுராமன் இயக்குனராக இணைந்தார். சென்னை, புனே, பரோடா, பெங்களூர் மற்றும் கோயம்புத்தூர் அலுவலகத்தில் இருந்து பல கிடங்குகளுக்கு செல்ல முடிவு செய்துள்ளது. 10 க்கும் மேற்பட்ட FMCG வாடிக்கையாளர்களுடன் கூட்டு வைத்துள்ளனர், மேலும் சில்லறை விற்பனையில் ரிலையன்சுக்கு முக்கிய உந்துதலாக இருப்பார்கள்.

இப்பொழுது 100 கோடி ஈட்டும் நிறுவனத்தை 2025-குள் 500 கோடி மதிப்புள்ள நிறுவனம் ஆக்குவதே சுப்ரமண்யாவின் முக்கிய இலக்காகும்.

பட்டேல் சாலைகள், வி.ஆர்.ஆர், safe எக்ஸ்பிரஸ், அகர்வால் பேக்கர்ஸ் மற்றும் மூவர்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் வருவாயில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சந்தைகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன. விலையில் மிகச் சிறிய வேறுபாடு உள்ளது; வெற்றியை தீர்மானிப்பது வேலையின் விசுவாசம் மற்றும் சரியான விநியோகம்.

இந்தியாவில் 12 மில்லியனுக்கும் அதிகமான லாரிகள் உள்ளன, இருப்பினும் அவை நாட்டில் அதிகரித்து வரும் நுகர்வை சந்திக்க குறைவாகவே உள்ளன.

இந்தியாவில் லாஜிஸ்டிக்ஸ் வாய்ப்புகள் பல பில்லியன் டாலர் வணிகமாக இருக்கின்றன. இந்திய பிராண்டு ஈக்விட்டி பவுண்டேசன், லாஜிஸ்டிக்ஸ் வர்த்தகமானது 300 பில்லியன் டாலர் மதிப்புள்ள வாய்ப்பாகும் என்று கூறுகிறது, அதிலும் வெறும் 20 சதவிகிதம் மட்டுமே ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

எங்கள் பேட்டி முடிவடைந்தது, ஆனால் சுப்ரமண்யாவுக்கோ இது எப்பொழுது வெளி வரும் என்ற ஆர்வம் இல்லை மாறாக மீடியாவின் தொழிற்துறை எவ்வாறு செயல்படுகிறது என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தார்.

ஹாட்ச்பேக்கு போகும் முன் அவர் சொன்னார்,

“இன்னொரு விஷயம், செல்வம் சேகரிப்பது பற்றியும் அது ஏன் முக்கியம் என்றும் என்னைக் கேட்டீர்கள். ஒரு தொழிலதிபராக நான் ஆடம்பரமான விஷயங்களை வாங்குவதில்லை. திறமை மற்றும் கடின உழைப்பு கொண்ட என் ஊழியர்களை நான் கவனித்துக்கொள்கிறேன் ஏன் என்றால் ஒரு நாள் இரண்டு வேலை உணவைக் கூட வாங்க முடியாமல் போனது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது.”