நோபல் பரிசு வென்ற பேராசிரியர்- மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து கொண்டாடிய கடமையாளர்!    

0

இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் மூன்று பேருக்கு கூட்டாக அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. டேவிட் தொவ்லெஸ், டன்கன் ஹல்டேன் மற்றும் மைக்கேல் காஸ்டெர்லிட்ஸ் ஆகிய விஞ்ஞானிகளிகளுக்கு குவாண்டம் கம்யூட்டிங் தொடர்பான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ராயல் ஸ்வீடிஷ் சயின்ஸ் அகாடமி வழங்கும் 6.2 கோடி ரூபாய் பரிசு பணத்தை இம்மூவரும் பகிர்ந்து கொள்வார்கள். 

நன்றி: NJ
நன்றி: NJ

65 வயதான டன்கன், நியு ஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைகழகத்தில் பேராசிரியர் ஆக உள்ளார். அவர் தனக்கு நோபல் பரிசு வென்றதை பற்றி வந்த போன் காலை பற்றி நெகிழ்வுடன் தெரிவித்தார். அந்த தகவல் வந்த பின்பும் அவர் தனது தினத்தை எப்பொழுதும் போல தொடங்கி, பல்கலைகழகம் சென்று தன் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கச் சென்றார். எலெக்ட்ரோ மேக்னிடிசம் வகுப்புகளை உற்சாகமாக தன் மாணவர்களுக்கு கற்று கொடுத்தார் டன்கன். 

“ஆம் அது என் கடமை மற்றும் அதுவே எனக்கு கிடைத்த பெருமை. என்றுமே ஒருவரது பணி தான் முக்கியம்” என்று டன்கன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

அன்று வகுப்புக்கு சென்ற டன்கனை மாணவர்கள் கரகோஷத்துடன் வரவேற்றனர். தனது மாணவர்களே வருங்கால விஞ்ஞானிகளாக ஆவார்கள் என்ற நம்பிக்கையுடன் உள்ளார் அவர். 

“என் மாணவர்களில் யாராவது வருங்காலத்தில் எதாவது புதுமையாக கண்டுபிடித்து நோபல் பரிசை வெல்வார்கள்,” என்று நம்பிக்கையுடன் கூறினார். 

”நாம் ஒரு புதுமையை கண்டுபிடிக்கப்போகிறோம் என்ற எண்ணத்தில் ஆராய்ச்சி செய்வதில்லை. ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும்போது ஒருவர் திடீரென ஒரு புதுமையை கண்டுபிடிக்க நேரிடும், அது மிக சுவாரசியமான ஒன்று,” என்றார் பேராசிரியர் டன்கன். 

டேவிட் மற்றும் மைக்கேல் உடன் இணைந்து டன்கன் இந்த ஆராய்ச்சியை செய்தார். 1970-80 களில் கடுமையான சூழ்நிலையில் தங்களது ஆராய்ச்சியை மேற்கொண்டனர். இவர்களது ஆராய்ச்சியின் முடிவுகளை இன்றுள்ள விஞ்ஞானிகள் பயன்படுத்தி, எலக்ட்ரானிக்ஸ், சூப்பர் கண்டக்டர்ஸ் மற்றும் க்வாண்டம் கம்யூட்டர்ஸ்’களில் பல புதிய வளர்ச்சியை கண்டுள்ளனர். 

கட்டுரை: Think Change India