சென்னை சர்வதேச விமான நிலையத்துடன் இணைந்தது ஓலா!

இனி வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற பயண அனுபவம் கிடைக்கும்.

0

இந்தியாவின் முன்னணி நிறுவனம் மற்றும் உலகின் மிகப்பெரிய பயணப் பகிர்வு நிறுவனமான ஓலா, சென்னை சர்வதேச விமான நிலையத்துடன் மூலோபாய கூட்டு ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது. ஓலா பிரத்யேக பகுதிகள் (zones) மற்றும் ஓலா மையங்கள் (kiosks) வாயிலாக அதன் வாடிக்கையாளர் சேவையை விரிவுபடுத்துவதே இந்த இணைப்பின் நோக்கமாகும்.

இந்த பார்ட்னர்ஷிப் வாயிலாக சென்னை விமான நிலையத்தில் உள்ள பயணிகள் இனி உள்நாட்டு மற்றும் சர்வதேச வருகை முனையத்திற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள ஓலா மையத்தில் உள்ள ஓலா பிரதிநிதிகளின் உதவியுடன் கார் புக் செய்துகொள்ளலாம். பயணிகள் எளிதாக பயணம் மேற்கொள்ளவும் ஸ்மார்ட்போன் அல்லது ஓலா செயலி இன்றி கார் புக் செய்யவும் ஓலா மையங்கள் உதவும். 

மேலும் கார்களுக்கு பிரத்யேகமான நிறுத்துமிட வசதியை வழங்க ஓலா பகுதிகள் அமைக்கடுகிறது. இது வாகனங்கள் நிறுத்தப்படுவதை எளிதாக்கி நிலையங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பிரச்சனையையும் தீர்க்கும். வாடிக்கையாளர்களின் வசதியை உறுதிசெய்ய ஓலாவின் பிரத்யேகமான பகுதிகள் அமைக்கப்படுகிறது. 

இந்தப் பகுதி வாடிக்கையாளர்களை ஏற்றிக்கொள்ளவும் இறக்கிவிடவும் பிரத்யேகமான பகுதியாக செயல்படும். அத்துடன் வாடிக்கையாளர் புக் செய்யப்படும் கார் இரண்டே நிமிடங்களில் வந்தடையவும் உதவும். 

ஓலா தெற்கு பிரிவு - மண்டல தலைவர் விஷ்ணு பொம்மாரெட்டி குறிப்பிடுகையில், 

“சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணப் பகிர்வு பகுதியில் பிரத்யேக பார்ட்னராக இணைய தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. மில்லியன் கணக்கான பயணிகளுக்கு சிக்கலில்லாத பயணத்தை உறுதிசெய்ய விரும்புகிறோம். நகரில் இருந்து வேறு இடங்களுக்கு செல்பவர்கள், இந்த நகரத்திற்கு வருகை தருவோர் என மில்லியன் கணக்கான பயணிகளுக்கு வசதி, அணுகுதல், நம்பகத்தன்மை ஆகிய அம்சங்களை இந்த இணைப்பு மேம்படுத்தும் என்பது உறுதி. 

பிரத்யேகமான மையங்கள் மற்றும் பகுதிகள் வாடிக்கையாளர்கள் கார் புக் செய்ய உதவுவதுடன் காரை எளிதாகக் கண்டறியவும் உதவும். வாடிக்கையாளர்கள் சென்றடைய வேண்டிய இறுதிதூர பயணம் சார்ந்த தீர்வுகளை வழங்குவதில் எங்களுக்குள்ள அர்ப்பணிப்பை இந்த இணைப்பு உறுதிசெய்து மில்லியன் கணக்கான விமான பயணிகளின் பயணத்தை தடையற்றதாக மாற்றும்,” என்றார்.

இந்த பார்ட்னர்ஷிப் மூலம் அதிக நட்சத்திர மதிப்பீடு பெற்ற, அனுபவமிக்க ஓட்டுநர்களைக் கொண்ட ஓலாவின் உயர்தர ஹேட்ச்பேக் மற்றும் செடான் கார்களை வாடிக்கையாளர் அணுகலாம். ஓலா செயலியில் உள்ள அம்சங்கள் மற்றும் ப்ரோக்ராம்கள் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான, வசதியான பயண அனுபவத்தை உறுதிசெய்கிறது. இந்த செயலியில் அவசரகால பட்டன், பயணபகிர்வு தகவல்களுக்கான லைவ் ஜிபிஎஸ் ட்ராக்கிங், மொபைல் எண் மறைத்தல், பயணம் முடிந்தபிறகு பயணத்தின் தரம் குறித்த மதிப்பீடு போன்ற அம்சங்கள் உள்ளன. 

இவை அனைத்துமே வாடிக்கையாளர்களுக்கு சீரான அனுபவத்தை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் அவசரகால தேவைகளுக்கு நேரடியாக செயலியில் இருந்து 24X7 அவசர உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். 

இந்திய விமான நிலையத்துடனான (AAI) ஓலாவின் மூலோபாய கூட்டு ஒப்பந்தத்தின்கீழ் இந்த பார்ட்னர்ஷிப் இடம்பெறுகிறது. இந்த பார்ட்னர்ஷிப் வாயிலாக சென்னை சர்வதேச விமான நிலையம் மட்டுமல்லாது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம், கொல்கத்தா, புனே சர்வதேச விமான நிலையம், சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையம், லக்னோ ஆகியவற்றிலும் வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்கப்படும்.

ஓலா நிறுவனம் 

2011-ம் ஆண்டு பவிஷ் அகர்வால், அன்கித் பாட்டி ஆகியோரால் நிறுவப்பட்ட ஓலா நிறுவனம் உலகின் மிகப்பெரிய வாடகை கார் நிறுவனமாகும். பயணம் மேற்கொள்ளும் வாடிக்கையாளர்கள் மற்றும் ஓட்டுநர் பார்ட்னர்களை மொபைல் தொழில்நுட்ப தளம் வாயிலாக ஒன்றிணைத்து வசதியான, வெளிப்படையான, விரைவான, நிறைவான சேவையை அளிக்கிறது. ஓலா தொழில்நுட்பத்தை சிறப்பாகப் பயன்படுத்தி உலகளவில் புதுமையாக தீர்வுகளை உருவாக்குகிறது. 2016-ம் ஆண்டு ’ஓலா ப்ளே’ கார் பயணப்பகிர்விற்கான உலகின் முதல் தளத்தை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும். 

இதன் மூலம் பயண அனுபவத்தில் இந்தப் பகுதியில் உலகளவில் புதுமை படைத்தது. 110-க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள பயனர்கள் ஓலா மொபைல் செயலியைப் பயன்படுத்தி ஒரு மில்லியன் கார், ஆட்டோரிக்ஷா, டேக்ஸி ஓட்டுநர்களுடன் இணையலாம். ஹைப்பர்லோக்கல் அணுகுமுறையுடன் ஒரு மில்லியன் நபர்களுக்கான பயண வசதியை உருவாக்கவேண்டும் என்கிற நோக்கத்தில் ஓலா உறுதியாக உள்ளது.