குழந்தை கற்றல் மற்றும் வளர்ப்பில் பெற்றோர்களுக்கு உதவும் தம்பதிகள்!

0

ஒரு குழந்தையின் "உணர்வு அனுபவம்" என்பது அக் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சி, கற்றுக்கொள்ளும் திறன் போன்றவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பொதுவானதொரு உளவியல் நம்பிக்கை. 2008 ஆம் ஆண்டு இங்கிலாந்தை சார்ந்த குழந்தை வளர்ப்பு நிபுணர் மற்றும் குழந்தை உளவியலாளர் டாக்டர் லின் டே என்பவர், சென்சர் மற்றும் டோட்லர் சென்ஸ் போன்ற செயல் முறை திட்டங்களை உருவாக்கினார்.

இது, ஒட்டுமொத்தமாக, குழந்தைகள் வளர்ச்சியின் மீது அதிக அக்கறை கொண்டவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோரின் அடிப்படை நம்பிக்கையின் மீது உருவானது. பிறந்த குழந்தை முதல் 13 மாத குழந்தைகளுக்காக, உருவான இந்தச் செயல் திட்டம், குழந்தைகளின் உணர்வுகளை தூண்டுதலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், குழந்தைகளின் உடல் மற்றும் மூளை ஆகியவற்றை வளர்ச்சி அடைய செய்கிறது.

பிணைப்பை உருவாக்குவது

இந்தியாவில் குழந்தை மற்றும் மழலையர் ஆகியோர், கற்றுக்கொள்ளும் சூழலில் நிலவும் பலவீனங்களை கருத்தில் கொண்டு கணவன் மனைவியான அஞ்சு செரியன் மற்றும் ஜோஸ் பால், தங்களின் வெளிநாட்டுப் பெருநிறுவன வேலையை துறந்து தங்கள் மகளோடு இந்தியாவிற்கு திரும்பினர்கள். இந்திய பெற்றோர்கள் மற்றும் சிறுவர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த அவர்கள் முனைந்தனர்.

2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 'ஏஜே ப்ளாக்கல் எடுவென்ச்சர்ஸ்' (AJ Plackal Eduventures) நிறுவினார்கள். அவர்கள், விருது பெற்ற சர்வதேச ஆரம்ப நிலை கற்றல் திட்டத்தினை முதலில் அறிமுகம் செய்ததோடு, இந்தியர்களுக்காக அந்தந்த பகுதிக்கேற்ப தீர்வுகளை உருவாக்கினார்.

அஞ்சு கூறுகையில்,

"நாங்கள், யு .கே. நாட்டின் பேபி சென்சார், டாட்லர் சென்ஸ், மினி ப்ரொபசர் போன்ற செயல் முறை திட்டங்களுக்கான பிரதிநிதிகளாக உள்ளோம். இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கான முதன்மை முகவர்களாக (master franchisee) இருக்கிறோம். அது மட்டுமல்லாது , அல்கெமி நர்சரி எனும் குழந்தைகள் மற்றும் தளர் நடை பருவ குழந்தைகளுக்கான சிறப்பு பராமரிப்பு மற்றும் கற்றல் மையத்தினையும் நடத்தி வருகிறோம்”.

பெற்றோர்களிடம் உரையாடிய போது , குழந்தைகளின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கான தரமான ஆரம்ப கால பயிற்சியளிக்கும் பகல் நேர காப்பகங்கள் மற்றும் பயிலகங்கள் காணப்படுவதில்லை என்று வருத்தப்பட்டனர்.

அஞ்சு மற்றும் ஜோஸ்
அஞ்சு மற்றும் ஜோஸ்
"இது போன்ற தேவைகளை பூர்த்தி செய்ய நாங்கள், பிறந்த குழந்தை முதல் மூன்று வயது வரையிலானவர்களுக்காக "தி அல்கெமி நர்சரி" (The Alchemy Nursery) எனும் சிறப்பு பகல் நேர காப்பகம் மற்றும் ப்ரி-ஸ்கூல் (pre school) லை தொடங்கினோம். பிரிட்டன் நாட்டின், எர்லி இயர்ஸ் பௌண்டேஷன் ஃப்ரேம்வொர்க் ஸ்டேஜ் (Early Years Foundation Framework Stage - EYFS) எனும் கல்வி கட்டமைப்பை பின்பற்றுகிறோம்" என்கிறார் அஞ்சு.

இந்தியாவில் பல கலாச்சாரங்கள் இருந்த போதிலும், இந்த செயல் முறை திட்டத்திற்கு நல்ல ஆதரவு கிடைத்தது. மேலும், பெற்றோர்கள் இது போன்றவை தங்களின் குழந்தைகளுக்கு தேவை என அறிந்திருக்கிறார்கள்.

வாடிக்கையாளர்கள் தங்களின் குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை கற்றலின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள, நாங்கள், குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனைகள், பெரிய குடியிருப்பு வளாகங்கள் மற்றும் தாய்-சேய் கடைகள் போன்றவர்களோடு ஒருங்கிணைந்து பணியாற்ற முடிவு செய்தோம்.

இதற்கு இணையாக, ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைக்கான 'டோட்லர் சென்ஸ் ப்ரோகிராம்' (Toddler Sense programme) எனும் செயல் திட்டத்தினை துவக்கினார்கள். பெற்றோர்களின் அமோக வரவேற்போடு பெங்களுரு நகரைச் சுற்றி மேலும் சில பகுதிகளிலும் தொடங்கினார்கள்.

ஜோஸ் மேலும் கூறுகையில், "இட வாடகையை கருத்தில் கொண்டு, நாங்கள் வகுப்புகளை தற்போதுள்ள இடத்திலேயே நடத்தி வருகிறோம். இவை சர்வதேச சுகாதார, பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் தரத்தோடு அமைந்துள்ளன". முதல் ஆண்டிலேயே, மூன்று மையங்களில் இரண்டு செயல் திட்டங்கள் என பகல் நேர காப்பகம் மற்றும் ப்ரி-ஸ்கூல் வசதிகளோடு இந்நிறுவனம் வளர்ந்துள்ளது.

கற்றல் மற்றும் மீண்டும் கற்றல்

2014 ஆம் ஆண்டு, ஏஜே ப்ளாக்கல் எடுவென்ச்சர்ஸ் நிறுவப்பட்டாலும், அதற்கான எண்ணம் என்னவோ 2012 ல் உருவானது. குழந்தையை வளர்ப்பதற்காக தனது பணியில் இடைவெளி எடுத்துக்கொண்ட அஞ்சு, முதற் காலக் கட்ட குழந்தை வளர்ப்பு குறித்து விரிவாகப் படித்து தன்னை தயார் படுத்திக் கொள்ள தொடங்கினார்.

நல்ல ஆராய்ச்சிக்கு பிறகு, குழந்தைகளின் உணர்வு தூண்டுதல் மற்றும் குழந்தை வளர்ச்சியில் அதன் முதல் ஐந்தாண்டுகளின் தாக்கம் மற்றும் முக்கியத்துவம் குறித்து தெளிவுபடுத்திக் கொண்டார்.

தனது கணவருடன் கலந்துரையாடிய பிறகு, இருவரும் பெற்றோர்- குழந்தை நிகழ்ச்சிகளை தனது மகளுடன் சேர்ந்து கலந்து கொள்வதில் ஈடுபட்டனர். 

"இப்படி தான், நாங்கள் பிரிட்டன் நாட்டு முன்னணி குழந்தை உளவியலாளர் டாக்டர் லின் டே அவர்களின் குழந்தை உணர்வு நிகழ்ச்சியை பற்றி அறிந்தோம். இது, மற்ற எல்லா நிகழ்ச்சிகளை காட்டிலும் சிறப்பாக ஆராய்ந்து வடிவமைக்கப்பட்ட குழந்தை உணர்வு நிகழ்ச்சியாக தனித்து நின்றது", என்கிறார் அஞ்சு.

நிகழ்ச்சியில் பயனடைந்த இருவர், தங்கள் சமுதாயத்தில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியோடு இந்தியாவிற்கு குழந்தை உணர்வு எனும் பேபி சென்ஸரி மற்றும் அதன் தொடர்பு செயல் திட்டங்களை கொண்டுவர முடிவு செய்தனர். பிரிட்டன் நாட்டில் உள்ள அதன் தலைமை நிறுவனத்திடம் பேசினார்கள். மிகக் கடுமையான தேர்வு முறைக்கு பிறகு, இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கான பேபி சென்ஸரி மற்றும் அதன் இணைச் செயல் திட்டங்களுக்கு மாஸ்டர் ஃப்ரான்சைஸ் பெற்றார்கள்.

பிரிட்டனில் தங்கி பல்வேறு செயல் திட்டங்கள் மற்றும் அதன் தொழில் முறையில் பயிற்சி பெற்றார்கள். முடிவில், அவர்கள் இந்தியாவிற்கு திரும்பி, இத் திட்டங்கள் வெற்றியடைய தீவிரமாக கவனம் செலுத்தத் தொடங்கினார்கள். "கூட்டுக் குடும்பங்களை விட்டு பிரிந்து தங்கள் குழந்தையை பராமரிக்கும் இளம் பெற்றோர்களுக்கு உறுதுணையாய் இருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்", என்கிறார் ஜோஸ்.

செயல் திட்டம் மற்றும் அதன் பயன்கள்

பேபி சென்ஸரி யில் உள்ள ஒவ்வொரு செயல்பாடுகளும் அறிவியல் பூர்வமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. காட்சிகள், ஒலி, வாசனைகள், நிறங்கள் மற்றும் பொருட்கள் என கருத்தில் கொண்டு அனைத்தும் சரியான முறையில் அளித்து குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான அடிப்படை தளம் அமைக்க உதவி செய்கிறது.

டோட்லர்ஸ் சென்ஸ் (Toddler Sense) என்பது ஒரு வயது முதல் ஐந்து வயது மழலையர்களுக்காக வடிவமைக்கப்பட்டது. விருது பெற்ற டோட்லர்ஸ் டெவலப்மெண்ட் வகுப்புகள், குழந்தைகளுக்கு ஒரு மாயா ஜால உலகினை அளிக்கிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு தனிப்பட்ட கருத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. இது குழந்தையின் மூளை, ஒருங்கிணைப்பு மற்றும் உடல் வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் கூர்ந்து உருவாக்கப்படுகிறது.

வளர்ச்சி மற்றும் எதிர்காலத் திட்டங்கள்

ஒரு வாரத்திற்கு, ஒரு இடம் மற்றும் ஒரு பேபி சென்ஸரி வகுப்பு என ஆரம்பமான ஏ ஜே ப்ளாக்கல் எடுவென்ச்சர்ஸ் நிறுவனம், இன்று பெங்களூரில் மூன்று மையங்களை கொண்டு பேபி சென்ஸரி மற்றும் டோட்லர் சென்ஸ் வகுப்புகளை பத்து மடங்கிற்கு மேற்ப்பட்ட எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கும், மழலையர்களுக்கும் மற்றும் பெற்றோருக்காக ஒவ்வொரு வாரமும் வகுப்புகளை நடத்தி வருகிறது.

வகுப்புகளில் சேர்வதற்காக பதிவு செய்யும் குழந்தைகளின் எண்ணிக்கை மாதம் தோறும் அதிகரித்து வருகிறது. "எங்கள் வருவாய் மாதிரி மிகவும் சாதாரணம். நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களிடம் வகுப்புகள், கற்றுக்கொள்ளுதல் மற்றும் காப்பகச் சேவைக்காக சந்தா கட்டணம் பெறுகிறோம். இவைத் தவிர நாடு முழுவதும் உள்ள கிளை அமைப்புகளிடமிருந்து ஃப்ரான்சைசிங் கட்டணம் பெறப்படுகிறது", என்கிறார் ஜோஸ்.

தற்போது, பேபி சென்ஸரி, டோட்டலர் சென்ஸ் மற்றும் தி அல்கெமி மீது தொடர்ந்து கவனம் செலுத்தி, இந்தியா முழுவதும் உள்ள தங்களின் மையங்கள் மற்றும் ஃப்ரான்சைஸ் மூலமாக பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளிடம் கொண்டு செல்வதில் ஆர்வம் கொண்டுள்ளனர்.

"எங்கள் ஃப்ரான்சைஸ் அணுகுமுறை, பெண்களுக்கு இணக்கமான தொழில் வாய்ப்பினை அளிப்பதோடு நடைமுறையில் அவர்களுக்கு சாதகமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது", என்கிறார் அஞ்சு.

மேலும் பல புதிய சர்வதேச ஆரம்பநிலை கற்றல் திட்டங்கள் தொடங்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி இந்த ஆண்டு, முதல் பாதியில் மினி ப்ரொபஸர்ஸ் (Mini Professors) தொடங்க உள்ளனர். "அடுத்த இரண்டு ஆண்டுகளில் பேபி சென்ஸரி, டோட்லர் சென்ஸ் மற்றும் மினி ப்ரொபஸர்ஸ் ஆகியவற்றை நாடு முழுவதுமுள்ள எல்லா முக்கிய நகரங்களிலும் செயல்படுத்தப்படும்" என்று மேலும் கூறுகிறார் ஜோஸ்.

ஆக்கம்: சிந்து கஷ்யப் | தமிழில்: விஷ்னு ராம்