சென்னை நிறுவனம் ’Chargebee’ 18 மில்லியன் டாலர் நிதி உயர்த்தியது! 

சந்தா அடிப்படையிலான பில்லிங் தளம் உருவாக்கும் நிறுவனம் ‘சார்ஜ் பீ’ சிரீஸ் சி முதலீடாக இன்சைட் வென்ச்சர்ஸ் பார்ட்னர்ஸ் இடமிருந்து இந்த நிதியை பெற்றுள்ளது.

2

Chargebee சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம். இது 2011-ம் ஆண்டு கே.பி.சரவணன், க்ரிஷ் சுப்ரமணியன், ராஜாராமன் சந்தானம், தியாகராஜன் ஆகியோரால் துவங்கப்பட்டது.

முதலீட்டாளர்கள் உடன் Chargebee குழு
முதலீட்டாளர்கள் உடன் Chargebee குழு

135 ஊழியர்களுடன் சென்னை மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் இயங்கும் சார்ஜ் பீ, பில்லிங் தளம் ஏற்படுத்தித்தரும் ஒரு நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஒ க்ருஷ் தெரிவிக்கையில்,

”நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு, எங்களின் முதல் வாடிக்கையாளர் தங்களின் தயாரிப்புக்கும் பேமண்டுக்கும் இடையில் ஒரு பகுதியை இணைக்க ‘Chargebee’-ன் பில்லிங் முறையை பயன்படுத்தினார். இன்று அம்முறை பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் உபயோகிக்கும் வகையில் வளர்ந்துள்ளது. நம்பகத்தன்மை உடையதாகவும் உள்ளது,” என்றார்.

தற்போது 'Chargebee’-க்கு 50 நாடுகளில் இருந்து சுமார் 7000 வாடிக்கையாளர்கள் உள்ளனர். யுவர்ஸ்டோரி 2013-ன் டெக்30 நிறுவனத்தின் ஒன்றாக சார்ஜ் பீ தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதற்கு முன் இந்நிறுவனம் ஆக்செல் பார்ட்னர்சிடம் இருந்து இரண்டு சுற்று நிதி பெற்றுள்ளது. அதே போல் 2012-ல் அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் ஏஞ்சல் முதலீட்டாளரிடமிருந்து நிதி பெற்றுள்ளது. பின்னர் 2015 மார்ச்சில் சீரீஸ் பி நிதியாக 5 மில்லியன் டாலர்களை டைகர் க்ளோபல் இடமிருந்து பெற்றது. முதலீடுகள் பற்றி குறிப்பிட்ட க்ருஷ்,

“சந்தா அடிப்படையிலான நிறுவனங்களில் சிறந்த வளர்ச்சியை காண்பித்த உதாரண நிறுவனங்களில் Chargebee உலகளவில் பிரபலமானது.”  
”2015 பிப்ரவரி மாதத்தில் நாங்கள் ஃப்ரீமியம் மாடல் ஒன்றை அறிமுகப்படுத்திய போது, சிறு நிறுவனங்கள் தங்களின் பில்லிங் தளத்தை தாங்களே உருவாக்காமல் எங்களிடம் கொடுக்கத் தொடங்கினார்கள்,” என்றார் மேலும்.  

சீரீஸ் பி நிதியைக் கொண்டு இந்நிறுவனம், தனது தயாரிப்பில் பல புதியவைகளை அறிமுகப்படுத்தியது. இது தொழில் புரிவோருக்கும், வாடிக்கையாளர்களுக்கும் பயனுள்ளதாக அமைந்தது. நியூ யார்க்கை சேர்ந்த இன்சைட் வென்ச்சர் பார்ட்னர்ஸ், முதலீடு குறித்து அளித்த அறிக்கையில்,

Chargebee பில்லிங் முறையில் ஒரு விரிவான, ஆழமான முறையையும், தீர்வையும் வழங்குகிறது. இது தொழில்நுட்பம் உள்ள மற்றும் அல்லாத தொழில்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. நல்ல வருவாய் ஈட்டும் மாதிரியை கொண்டிருக்கும் சார்ஜ் பீ, தனது தீர்வுகளால் பல நல்ல வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.” 

வாடிக்கையாளர்களால் பெரிதும் வளர்ச்சி அடைந்துள்ள இந்நிறுவனம், அவ்வப்போது அவர்களுக்குத் தேவையான அம்சங்களை அறிமுகப்படுத்த தவறியதில்லை. இது வாடிக்கையாளர்களின் கருத்துக்களின் அடிப்படையில் செய்யப்படுகிறது. 

வெறும் சந்தா அடிப்படையில் மட்டும் இயங்காமல், வாடிக்கையாளர்களின் நன்மதிப்போடு ஒரு நல்ல உறவைக் கொண்டு இயங்குவதால் சார்ஜ் பீ, இன்று இந்த அளவிலான வளர்ச்சியை பெற்றுள்ளது என்று தெரிவித்தார் க்ருஷ். 

வலைதளம்: Chargebee 

Deputy Editor, tamil.yourstory.com I love to meet new people and hear their stories and put it to words for the world to read.

Related Stories

Stories by Induja Ragunathan